Wednesday, 16 April 2014

ஆழ்துளை கிணற்றில் விழுந்து குழந்தைகள் பலியாவதை தடுப்பது எப்படி?

தலைமை செயலகத்தில் ஆலோசனை





சென்னை: தமிழகத்தில் ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறி விழுந்து இறக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதை தடுப்பது எப்படி என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. தமிழக அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளில் தண்ணீருக்காக 200 அடி முதல் 300 அடி வரை ஆழ்துளை குழாய் கிணறு (போர்வெல்) அமைக்கின்றனர். இவ்வாறு போர்வெல் தோண்டும் இடங்களில் தண்ணீர் இல்லை என்றால், குழியை மூடாமல் அப்படியே விட்டுவிடுகிறார்கள். இதனால் விவசாய நிலங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் குழந்தைகள், குறிப்பாக 2 முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகள், அந்த ஆழ்துளை கிணற்றின் விழ நேரிடுகிறது. இப்படி சுமார் 6 முதல் 8 இஞ்ச் அகலமே உள்ள ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுவது தமிழகத்தில் தொடர்கதை ஆகிவிட்டது.

இவ்வாறு தவறி விழும் குழந்தைகளை, பல மணி நேரம் போராடியும் உயிருடன் மீட்க முடிவதில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்கூட திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் அருகே விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணற்றில் 2 வயது குழந்தை விழுந்தது. மீட்பு குழுவினரின் தீவிர முயற்சியாலும், அதிநவீன ரோபோ கருவியின் உதவியாலும் அந்த குழந்தை அதிர்ஷடவசமாக உயிருடன் மீட்கப்பட்டது. ஆனால் இந்த சம்பவம் நடந்த மறுநாளே, திருவண்ணாமலை அருகே மீண்டும் ஒரு குழந்தை சுமார் 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்து, 15 அடியில் சிக்கி கொண்டது. அந்த குழந்தையை நேற்று முன்தினம் பகலில் இருந்து, நேற்று வரை போராடியும் காப்பாற்ற முடியவில்லை.

இதுபோன்ற ஆழ்துளை கிணற்றை தகுந்த மூடியை கொண்டு மூடாமல், அதற்கு பதில் கோணி பையால் மூடுகின்றனர். அவ்வாறு மூடப்படும் கோணி பை மக்கி போகிறது. குழி இருப்பது தெரியாமல் குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் விழ நேரிடுகிறது. இதுகுறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததே விபத்துக்கு காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இதுபோன்ற விபத்து ஏற்படாமல் இருப்பதற்காகவும், சம்பந்தப்பட்ட விவசாய நிலத்துக்கு சொந்தமானவர் மீதும், போர்வெல் நிறுவனம் மீதும் கடும் நடவடிக்கை எடுப்பது குறித்தும் தலைமை செயலகத்தில் நேற்று மாலை, தலைமை செயலாளர் மோகன் வர்க்கீஸ் சுந்தர் தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா, டிஜிபி ராமானுஜம், தீயணைப்புதுறை உயர் அதிகா£ரிகள், மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருப்பது குறித்தும், இதை தடுக்க நடவடிக்கை எடுப்பது குறித்தும் நீண்ட நேரம் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து தலைமை செயலகத்தில் விசாரித்தபோது, ‘‘விவசாய நிலம் மற்றும் வீடுகளுக்கான ஆழ்துளை கிணறு அமைக்கும்போது, சம்பந்தப்பட்ட அரசு துறைகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். விபரீத சம்பவம் நடந்தால் ஆழ்துளை குழாய் கிணறு போட ஏற்பாடு செய்தவரும், அந்த போர்வெல் நிறுவனமும்தான் பொறுப்பேற்க வேண்டும்.

அவர்களுக்கு கடுமையான தண்டனை விதிப்பது குறித்தும், சங்கரன்கோயிலில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை உயிருடன் மீட்க உதவிய ரோபோ கருவியை மாவட்டத்தில் உள்ள ஒரு தீயணைப்பு நிலையத்துக்கு வாங்குவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது‘‘ என தெரிவித்தனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் கிடாம்பாளையம் கிராமம் காந்தி நகர் பகுதியில் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணற்றில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை சுஜித் இறந்ததற்கு முதல்வர் ஜெயலலிதா தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் அந்த குழந்தையின் குடும்பத்துக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

ஐ பி எல் 2014 போட்டி அட்டவணைகள்


Match 2, Indian Premier League - T20

Apr' 1417Thursday

Match 3, Indian Premier League - T20

Apr' 1418Friday
16:00 IST | Abu Dhabi

Match 4, Indian Premier League - T20

Apr' 1418Friday
20:00 IST | Abu Dhabi

Match 5, Indian Premier League - T20

Apr' 1419Saturday

Match 6, Indian Premier League - T20

                    Apr' 1419Saturday

Match 7, Indian Premier League - T20

Apr' 1420Sunday
20:00 IST | Sharjah

Match 8, Indian Premier League - T20

   Apr' 1421Monday
20:00 IST | Abu Dhabi

Match 9, Indian Premier League - T20

                         Apr' 1422Tuesday
20:00 IST | Sharjah

Match 10, Indian Premier League - T20

                            Apr' 1423Wednesday

Match 11, Indian Premier League - T20

                       Apr' 1424Thursday

Match 12, Indian Premier League - T20

                      Apr' 1425Friday

Match 13, Indian Premier League - T20

                       Apr' 1425Friday

Match 14, Indian Premier League - T20

                         Apr' 1426Saturday

Match 15, Indian Premier League - T20

                            Apr' 1426Saturday
20:00 IST | Abu Dhabi

Match 16, Indian Premier League - T20

                     Apr' 1427Sunday
16:00 IST | Sharjah

Match 17, Indian Premier League - T20

                     Apr' 1427Sunday

Match 18, Indian Premier League - T20

                     Apr' 1428Monday

Match 19, Indian Premier League - T20

                           Apr' 1429Tuesday
20:00 IST | Abu Dhabi

Match 20, Indian Premier League - T20

                        Apr' 1430Wednesday

Match 21, Indian Premier League - T20

                    May' 14 02Friday

Match 22, Indian Premier League - T20

                          May' 1403Saturday
16:00 IST | Mumbai

Match 23, Indian Premier League - T20

                      May' 1403Saturday

Match 24, Indian Premier League - T20

                     May' 1404Sunday

Match 25, Indian Premier League - T20

                       May' 1405Monday
16:00 IST | Motera, Ahmedabad

Match 26, Indian Premier League - T20

                      May' 1405Monday

Match 27, Indian Premier League - T20

                        May' 1406Tuesday

Match 28, Indian Premier League - T20

                          May' 1407Wednesday

Match 29, Indian Premier League - T20

                     May' 1407Wednesday
20:00 IST | Cuttack

Match 30, Indian Premier League - T20

May' 1408Thursday
20:00 IST | Motera, Ahmedabad

Match 31, Indian Premier League - T20

                    May' 1409Friday

Match 32, Indian Premier League - T20

                       May' 1410Saturday

Match 33, Indian Premier League - T20

                     May' 1410Saturday
20:00 IST | Mumbai

Match 34, Indian Premier League - T20

                      May' 1411Sunday

Match 35, Indian Premier League - T20

                        May' 1411Sunday

Match 36, Indian Premier League - T20

                        May' 1412Monday
20:00 IST | Hyderabad

Match 37, Indian Premier League - T20

                        May' 1413Tuesday

Match 38, Indian Premier League - T20

                          May' 1413Tuesday

Match 39, Indian Premier League - T20

                     May' 1414Wednesday
16:00 IST | Hyderabad

Match 40, Indian Premier League - T20

                     May' 1414Wednesday

Match 41, Indian Premier League - T20

                    May' 1415Thursday
20:00 IST | Motera, Ahmedabad

Match 42, Indian Premier League - T20

                    May' 1418Sunday

Match 43, Indian Premier League - T20

                          May' 1418Sunday

Match 44, Indian Premier League - T20

                        May' 1419Monday
16:00 IST | Motera, Ahmedabad

Match 45, Indian Premier League - T20

                        May' 1419Monday
20:00 IST | Delhi

Match 46, Indian Premier League - T20

                     May' 1420Tuesday

Match 47, Indian Premier League - T20

                         May' 1420Tuesday

Match 48, Indian Premier League - T20

                         May' 1421Wednesday
20:00 IST | Mohali

Match 49, Indian Premier League - T20

May' 1422Thursday

Match 50, Indian Premier League - T20

                          May' 1422Thursday

Match 51, Indian Premier League - T20

                     May' 1423Friday
16:00 IST | Mumbai

Match 52, Indian Premier League - T20

                      May' 1423Friday
20:00 IST | Mohali

Match 53, Indian Premier League - T20

                     May' 1424Saturday

Match 54, Indian Premier League - T20

               May' 1424Saturday

Match 55, Indian Premier League - T20

                        May' 1425Sunday
16:00 IST | Mohali

Match 56, Indian Premier League - T20

                      May' 1425Sunday
20:00 IST | Mumbai

Qualifier 1, Indian Premier League - T20

                           May' 1427Tuesday
20:00 IST | Chennai

Eliminator, Indian Premier League - T20

                      May' 1428Wednesday
20:00 IST | Chennai

Qualifier 2, Indian Premier League - T20

                       May' 1430Friday
20:00 IST | Mumbai

Final, Indian Premier League - T20

                      Jun' 1401Sunday
20:00 IST | Mumbai