Thursday, 1 May 2014

சென்னையில் குண்டுவெடிப்பு, ஜெயலலிதா கடும் கண்டனம்

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலைய குண்டு வெடிப்புக்கு தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இன்று காலை கவுகாத்தி எஸ்பிரஸ் ரெயிலில் 2 குண்டுகள் வெடித்தன. இந்த குண்டுவெடிப்பில் ஒரு பெண் பலியானார். 12 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குண்டு வெடிப்பு தொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த குண்டு வெடிப்புக்கு தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், சதி செயலில் ஈடுபட்டவர்களை விரைவில் கண்டுபிடிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். காவல்துறையினர் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தும் என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். வெடிகுண்டு சம்பவத்தால் தமிழக மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ள அவர், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கையும் காவல்துறை மேற்கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ள ஜெயலலிதா பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளார். குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 


முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் குண்டு வெடித்துள்ளது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றச்சாட்டியுள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இன்று காலை கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் இளம் பெண் ஒருவர் பலியாகினார். 14 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குண்டுவெடிப்புக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கருணாநிதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னையில் பாகிஸ்தான் நாட்டின் பயங்கர உளவாளி முகமது ஜாகீர்உசேன் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாகவும், துல்லியமாகவும் எடுக்கப்படாத காரணத்தால் சென்ட்ரல் புகைவண்டி நிலையத்தில் குண்டு வெடித்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை சென்ட்ரலில் குண்டு வெடிப்பு

 



तस्‍वीरें: चेन्‍नई ब्‍लास्‍ट के बाद न्यूक्लियर प्‍लांट पर अलर्ट, मोदी की भी सुरक्षा बढ़ी


Advertisement
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இன்று காலையில் பயங்கர குண்டு வெடித்தது. இதில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் காயமுற்றதாகவும், 6 பேர் பலியானதாக முதலில் கூறப்பட்டது. பெண் ஒருவர் பலியானதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பிற்கு யார் காரணம் என்ற விவரம் அறியப்படவில்லை. சந்தேகத்திற்கு இடமான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் போலீஸ் டி.ஜி.பி., ராமானுஜம் மற்றும் அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த குண்டுவெடிப்பை அடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
காலை 7. 30 மணியளவில் பெங்களூரில் இருந்து கவுகாத்தி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றதும். இந்த ரயில் 1 மணி நேரம் காலதாமதமாக வந்தது. இந்த குண்டு வெடித்தது. 9ம் பிளாட்பாமில் இந்த சம்வபவம் நிகழ்ந்துள்ளது. காயமுற்றோர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 10 க்கும் மேற்பட்டோர் காயமுற்றதாக தெரிகிறது. ரயில் பெட்டிகள் எஸ். -4 எஸ்- 5 முழுமையாக சேதமடைந்துள்ளன.

ரயில்வே மேலாளர் பேட்டி: இந்த சம்பவம் குறித்து ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா கூறுகையில், ரயில் வந்ததும் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. 2 முறை குண்டு வெடித்துள்ளது. பெண் ஒருவர் பலியாகியுள்ளார். 2 பேர் படுகாயமுற்றுள்ளனர். 7 பேர் லேசான காயமுற்றுள்ளனர். கண்காணிப்பு காமிரா மூலம் அடுத்தடுத்து விசாரணைகள் தொடரும். பலியானவர் குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சமும், படுகாயமுற்றோருக்கு 25 ஆயிரமும், லேசான காயமுற்றோருக்கு ரூ. 5 ஆயிரமும் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. உதவி தொலைபேசிக்கு 04425357398 இந்த எண்ணில தொடர்பு கொள்ளலாம். முழு விசாரைணக்கு பின்னரே அனைத்து விஷயங்களையும் சொல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

மாநிலம் முழுவதும் போலீஸ் உஷார்: சென்னை குண்டு வெடிப்பை அடுத்து கோவை- திருச்சி-நெல்லை, சேலம் , மதுரை உள்ளிட்ட நகரங்களில் போலீஸ் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். மக்கள் கூடும் இடங்கள், ரயில்வே நிலையம், விமான நிலையம் பகுதிகளில் போலீஸ் ரோந்து பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை விளக்கம் கேட்கிறது: இன்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து விவரங்களையும் அனுப்பி வைக்குமாறு மத்திய அரசு மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.


ரயிலில் பதுங்கியிருந்தவர் யார் ? குண்டு வெடிப்பு நடந்த ரயில் பெட்டியின் கழிவறையில் ஒருவர் பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்படது. இவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நேரில் பார்த்தவர்கள் பேட்டி: துப்பாக்கி சப்தம் போல் இரண்டு முறை சப்தம கேட்டது. பின்னர் புகையாக வந்தது. ஒரு பெண் சம்பவ இடத்தில் இறந்து கிடந்தார். போலீசார் உடனடியாக இங்கு இருந்தனர். பின்னர் நாங்கள் இங்கு காயமுற்ற நபர்களை ஆஸ்பத்தரிக்கு கொண்டு போய் சேர்த்தோம். என இங்கு இருந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூறினர்.


குறைந்த சக்தி கொண்ட குண்டுகள் : ரயில் நிலைய இரட்டை குண்டு வெடிப்பு குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சக்தி குறைவான குண்டுகளே இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதிக சக்தி வாய்ந்த குண்டுகளாக இருந்தால் உயிர்ப்பலி அதிகரித்திருக்கும் என்று கூறப்படுகிறது.

மக்கள் பீதி அடைய வேண்டாம்-ஜெ., குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு கண்டனத்தையும், விபத்தில் பலியான பெண்ணின் குடும்பத்திற்கு இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். சம்பவம் குறி்தது விசரிக்கவும், காயம் அடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். விபத்தில் பலியான பெண்ணின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். சம்பவம் குறித்து முழு அளவிலான விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது,' என கூறியுள்ளார்.


10 பேர் கொண்ட குழு : ரயில்வே தரப்பில் விசாரணை நடத்த, ரயில்வே பாதுகாப்பு அதிகாரி மிட்டல் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.


காயமுற்றவர்கள் பெயர் விவரம் வருமாறு: சர்புல் ஹக் (மேற்குவங்கம்), முரளி (ஆந்திரா), ஆஞ்சநேயலு(ஆந்திரா), ஹரி ( பீகார்) , உமாராணி, ( அசாம் ) அப்துல்கான் (மணிப்பூர்), தேசாகர் முர்ரே, அணு, சதன், விஜய்குமார், பிளவன்குமார் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே சதி: பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இன்று ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் மோடி பிரசாரம் செய்கிறார். இங்கு நடக்கும் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ரயில் குண்டூரை போய்ச்சேரும் போது வெடிக்க திட்டமிட்டிருக்கலாம். இந்த குண்டு வெடிப்பு டைம் பாம், ஆக செட் செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. மேலும் இந்த ரயில் ஒரு மணி நேரம் தாமதமா சென்னை வந்து சேர்ந்துள்ளது. இது சரியான நேரத்திற்கு சென்றிருந்தால், காலை 7 மணியளவில் ஆந்திர மாநிலத்தை போய்ச்சேர்ந்திருக்கும். அப்போது அங்கே குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கும். இவ்வாறு போலீசார் பல கோணங்களில் சந்தேகித்து வருகின்றனர். இந்த குண்டு பெங்களூருவில் இருந்து வைக்கப்பட்டு அனுப்பி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.சென்னை: சென்னையில் ஊடுருவிய, பாகிஸ்தான் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,யின் உளவாளியை, தமிழக, 'க்யூ' பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு, சுற்றி வளைத்தனர். இவன், இலங்கையை சேர்ந்தவன்.அவன் சேகரித்து அனுப்பிய தகவல்களின் அடிப்படையில், சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் துணை தூதரகத்தை, குண்டு வைத்து தகர்க்கும், ஐ.எஸ்.ஐ.,யின் நாசவேலை திட்டம்
முறியடிக்கப்பட்டுள்ளது.

'லோக்சபா தேர்தலுக்கு பிறகு, தமிழகத்தில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும்' என, மத்திய உளவுப்பிரிவு போலீசார், தமிழக உளவுப்பிரிவு, தீவிரவாதிகளை கண்காணிக்கும், 'க்யூ' பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு, தகவல் கொடுத்தனர்.அதன் அடிப்படையில், சென்னை, திருவல்லிக் கேணி, மண்ணடி, பெரியமேடு உள்ளிட்ட பகுதிகளை, க்யூ பிரிவு போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்து வந்தனர்.மண்ணடியில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்த வாலிபன் மீது, க்யூ பிரிவு போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவனின் நடவடிக்கையை ரகசியமாக கண்காணிக்க துவங்கினர்.அவன், பாகிஸ்தானின் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,யின் உளவாளி; சென்னையில் பதுங்கி, சதிச்செயலுக்கு உளவு பார்க்கிறான் என, தெரிய வந்ததும், நேற்று முன் தினம் இரவு, அவனை சுற்றி வளைத்தனர்.

ஆட்டோவில் தப்பி ஓட்டம்: போலீசார் நெருங்கி விட்டதை அறிந்த அவன், ஆட்டோவில் தப்பினான். சேப்பாக்கம், சிவானந்தம் சாலையில் உள்ள தொலைக்காட்சி நிலையம் அருகே அந்த ஆட்டோ வந்த போது, அங்கு மாறுவேடத்தில் இருந்த போலீசார், அவனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.
அதன் விவரம் வருமாறு:அந்த வாலிபன், இலங்கையை சேர்ந்த முகமது ஜாகீர் உசேன், 37; பட்டதாரி. அவனது மனைவி பெயர் பாத்திமா ரியசா. இரண்டு குழந்தைகள் உள்ளன.இலங்கையில் உள்ள, பாகிஸ்தான் துணை தூதரக அதிகாரி, அமீர் சுபேர் சித்திக் என்பவரின் நட்பு, ஜாகீர் உசேனுக்கு கிடைத்தது. ஜாகீர் உசேனை, பாகிஸ்தான் உளவாளி யாக மாற்ற, சித்திக் முடிவு செய்தார். அதற்கு, ஜாகீர் உசேனும் சம்மதம் தெரிவித்தான். இதையடுத்து, ஜாகீர் உசேன், தூதரக உயர் அதிகாரி பாஸ் என்ற ஷாவிடம் அழைத்து செல்லப்பட்டான். ஷா மற்றும் சித்திக் ஆகியோரும், ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பினரும், ஜாகீர் உசேனுக்கு, இரண்டு ஆண்டுகளாக, உளவு தகவல் சேகரிப்பது தொடர்பாக கடும் பயிற்சி அளித்தனர்.

சங்கேத மொழி :
அவனுக்கு சென்னை, பெங்களூரு, கொச்சி,சாகப்பட்டினம் உள்ளிட்ட இந்திய நகரங்களின் வரைபடங்கள் அளிக்கப்பட்டன. மேலும், அந்த நகரங்களில், குண்டு வைத்து தகர்க்க வேண்டிய இடங்கள் பற்றியும் சொல்லி தரப்பட்டது.மேலும், சேகரித்த தகவல்களை, செயற்கைக் கோள் போன் மற்றும் 'இ-மெயில்' மூலம் சங்கேத மொழியில் அனுப்புவது குறித்து கற்றுத் தரப்பட்டது. தொடர் பயிற்சி காரணமாக, ஜாகீர் உசேன் அவற்றில் நிபுணத்துவம் பெற்றான்.அவனுக்கு, சென்னை யில் உள்ள அமெரிக்க துணை தூதரகம், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் துணை தூதரகம், கொச்சி, விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை அலுவலகங்களை குண்டு வைத்து தகர்ப்பது தொடர்பான பணி தரப்பட்டது.
6 மாதங்களாக...
அதற்காக அவனுக்கு, முதல் கட்டமாக, இலங்கை கரன்சி மதிப்பில், 20 ஆயிரம் ரூபாய்தரப்பட்டது. தகர்ப்பு பணியை வெற்றிகரமாக முடித்தால், ஒரு கோடி ரூபாய் தருவதாக, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, ஆறு மாதங்களுக்கு முன், சென்னை வந்த ஜாகீர் உசேன், மண்ணடியில் தங்கினான். மருந்து மற்றும் துணி வியாபாரம் செய்வது போல் போக்கு காட்டி, அமெரிக்க துணை தூதரகத்திற்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு; அங்குள்ள நுழைவு வாயில்கள்; விமான நிலையத்தில் இருந்து, தூதரகம் எவ்வளவு தூரத்தில் உள்ளது; கடல் வழியாக சென்னைக்குள் ஊடுருவும் விதம் குறித்த தகவல்களை சேகரித்து, புகைப்படங்களுடன், இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளான்.

நாசவேலை முறியடிப்பு :
அவன் கொடுத்த தகவலின் அடிப்படையில், சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு, கடல் மற்றும் வான்வழி மார்க்கமாக, பயங்கரவாதிகளை அனுப்ப, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., அமைப்பு தயாரானது.இந்த சூழ்நிலையில் தான், ஜாகீர் உசேனை, க்யூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அதனால், பெரும் நாசவேலை முறியடிக்கப்பட்டுள்ளது.

பலி எண்ணிக்கைக்கு ஏற்ப பணம் உளவாளி தந்த அதிர்ச்சி தகவல்:''பலி எண்ணிக்கைக்கு ஏற்ப பணம் தருவதாக, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் உறுதி அளித்தனர்,'' என, சென்னையில் சிக்கிய பாகிஸ்தான் உளவாளி, ஜாகீர் உசேன், வாக்குமூலம் அளித்துள்ளான்.அவன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம்: மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., சென்னை, பெங்களூர், கொச்சி, விசாகப்பட்டனம் உள்ளிட்டநகரங்களிலும் தாக்குதல் நடத்த முடிவு செய்தது.அதற்காக, உளவாளிகளாக, நான் உட்பட பலர், இந்தியாவிற்குள் ஊடுருவினோம். நான் சென்னையில் தங்கி, அதற்கான பணிகளில் ஈடுபட்டேன். மற்றவர்கள் மீண்டும் இலங்கைக்கு சென்று விட்டனர்.திட்டப்படி தாக்குதல் நடத்த, சில வாரங்கள் மட்டுமே இருந்ததால், சென்னையில், பாகிஸ்தான் பயங்கரவாதிகளை தங்க வைக்க வாடகை வீடு பார்த்து வந்தேன்.மேலும், இவ்வளவு பெரியவேலையை, உள்ளூரில் இருப்பவர்களின் உதவி இல்லாமல் செய்ய முடியாது என்பதால், சில உள்ளூர் வாலிபர்களை மூளைச் சலவை செய்து தயார்படுத்தினேன்.அவர்களை பற்றியும், சென்னையில் எனக்கு அடைக்கலம் கொடுத்தவர்களின் விவரங்களை, இலங்கையில் உள்ள பாக்., தூதரக அதிகாரிகள் மற்றும் ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பினருக்கு அனுப்பி வைத்துள்ளேன். நாசவேலை வெற்றிகரமாக நடந்து, அதிகளவில் உயிர் பலி ஏற்பட்டால், பலி எண்ணிக்கைக்கு ஏற்ப, பேசிய தொகையை விட, அதிகளவில் பணம் தருவதாகவும், இலங்கையில் உள்ள தூதரக அதிகாரிகள் உறுதி அளித்து இருந்தனர்.இவ்வாறு, அவன் தெரிவித்துள்ளான்.


எந்த பிரிவில் வழக்கு பதிவு?
நாசவேலைக்கு உளவு பார்த்த ஜாகீர் உசேன் மீது, பயங்கரவாத தடைச்சட்டத்தின், 120 பி(கூட்டு சதி), 480(அரசு ஆவணங்களை சட்ட விரோதமாக வைத்து இருத்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.ஜாகீர் உசேனிடமிருந்து, 1,000 ரூபாய் கள்ள நோட்டுகள், இரண்டு; 500 ரூபாய் கள்ள நோட்டுகள், இரண்டு; நான்கு செயற்கைக்கோள் போன்கள்; 'லேப்-டாப்' ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.ஜாகீர் உசேன், சில ஆண்டுகளுக்கு முன், திருச்சி விமான நிலையத்தில், போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக பிடிபட்டு தப்பியுள்ளான். தற்போது அவன் வைத்து இருந்தது இலங்கையில் அளிக்கப்பட்ட ஒரிஜினல் பாஸ்போர்ட்.