தி.மு.க., - அ.தி.மு.க.,விடம் சிக்கி தவிக்கும் தமிழக மக்கள்: மோடி விளாசல்

''தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய கட்சிகளின் நடுவில் தமிழக மக்கள்
சிக்கி தவிக்கின்றனர். மக்களைப் பற்றி சிந்திக்கவும், அவர்கள் மீது
அக்கறை செலுத்தவும், இந்த இரு
கட்சிகளும் நினைப்பது இல்லை. ''அவர்கள்
தீய விளையாட்டுக்களை விட்டாக வேண்டிய நேரம் வந்து விட்டது. தமிழகத்தில்
புதிதாக உருவாகி உள்ள, மூன்றாவது சக்தி தமிழக மக்களின் விருப்பங்களையும்
எண்ணங்களையும் நிறைவேற்றும்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர
மோடி பேசினார்.
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லுாரி மைதானத்தில், தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது.
லட்சுமியிடம் வேண்டுகோள்:
கூட்டத்தில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசியதாவது:மகாவீரர் தினமான இன்று ஒரு சிறந்த நாள். நாளை, அம்பேத்கர் பிறந்த தினம். மேலும், முக்கியமாக தமிழ் புத்தாண்டு தினம். இந்த நாளில் லட்சுமி தேவி, சரஸ்வதி தேவியை மன்றாடி வேண்டிக் கொள்கிறேன். 'தமிழக மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் வரங்களை அள்ளித்தர வேண்டும்' என, வேண்டிக் கொள்கிறேன்.இந்த லோக்சபா தேர்தல் தனித்தன்மை வாய்ந்தது. என் வாழ்க்கையில் எத்தனையோ தேர்தலை சந்தித்திருக்கிறேன். ஆனால், இந்த தேர்தலை, மக்கள் ஆவேசமாக பார்ப்பதை, முதன் முதலாக பார்க்கிறேன். இந்த தேர்தலில் தான் ஒரு அதிசயம் நடந்துள்ளது. அதாவது, தேர்தல் அறிவிக்கப்பட்டதும் உடனடியாக தேர்தல் முடிவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 'மத்திய அரசை வீழ்த்த வேண்டும்; புதிய அரசை பொறுப்பேற்க வைக்க வேண்டும்' என்ற ஒரு விஷயத்தை, மக்கள் அனைவரும் நன்றாக புரிந்து வைத்துள்ளனர்; இதில் எந்த சந்தேகமும் கிடையாது.நாட்டு மக்கள் கடந்த, 10 ஆண்டுகளாக துன்புற்றுக் கொண்டிருக்கின்றனர். எனவே, ஒரு மாற்றம் தேவை என்பதால், மத்திய அரசை துாக்கி எறிய வேண்டும் என, மக்கள் சபதம் எடுத்துள்ளனர். உலக அரங்கில், இந்தியா எப்படி தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என நிர்ணயிக்கும் தேர்தல் இது.கூட்டாட்சியின் தத்துவத்தை மத்திய அரசு மதிக்கவில்லை. பிராந்திய அரசுகளின் எண்ணங்களையும் ஆசைகளையும் தேவைகளையும் துளி கூட, மத்திய அரசு மதிப்பு கொடுப்பதில்லை. மாநில மக்களின் எண்ணங்களுக்கும் மதிப்பு கொடுக்கும் அரசு வந்தே தீரும்.மத்திய அரசு, தற்போது மாநில மக்களின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் தரவில்லை. மாநில அரசுகளை அடிமைகளாக கருதுகிறது. மாநில மக்களின் உரிமைக்காகவும், அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் எங்கள் அரசு அமைக்கப்படும். 'மாநில அரசுகளுடன் தோளோடு தோளாக இருந்து, இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்வோம்' என, தமிழக மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் உறுதியளிக்கிறேன்.தேசிய ஜனநாயக கூட்டணியில் பல கட்சிகள் இணைந்துள்ளன. பிரதமரும், மாநில முதல்வர்களும் ஒரே அணியாக இருந்து, நாட்டின் பிரச்னைகளை தீர்ப்போம் என, உறுதியளிக்கிறேன்.
புதிய வரலாறு
பா.ஜ., அணியில், 25 கட்சிகள் இணைந்து, புதிய வரலாறு படைத்துள்ளன. நமது கூட்டணி, இந்தியா மட்டுமல்ல, தமிழகத்திலும் புதிய வரலாறை ஏற்படுத்த போகிறது.தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளின் நடுவில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். தி.மு.க., ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்தால், அ.தி.மு.க.,வை ஒழிக்கவும், அ.தி.மு.க., ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்தால், தி.மு.க.,வை ஒழிக்கவும் நினைக்கின்றன.மக்களை பற்றி சிந்திக்கவும், அவர்கள் மீது அக்கறை செலுத்தவும் இரு கட்சிகளும் நினைப்பது இல்லை. இதைதான், தமிழகத்தில் பல ஆண்டுகளாக பார்க்கிறோம். தமிழகத்தில், மூன்றாவதாக ஒரு சக்தி உருவாகியுள்ளது. தமிழகத்தில், ஆற்றல் மிக்க இந்த மூன்றாவது சக்தி, மற்ற கட்சிகளை நடுங்க வைத்துள்ளது.எனவே, அவர்கள் தங்கள் தீய விளையாட்டுக்களை விட்டாக வேண்டும்; வேறு வழியில்லை. இந்த ஆற்றல்மிக்க, மூன்றாவது அணி, தமிழக மக்களின் விருப்பங்களையும் எண்ணங்களையும் நிறைவேற்றும்.
மீனவர் பிரச்னை
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் துன்பப்படுகின்றனர். குஜராத், ராஜஸ்தான் மாநில மீனவர்கள், பாகிஸ்தான் படையினரால் பாதிக்கப்படுகின்றனர். கேரள மீனவர்களை, இத்தாலிய படையினர் வந்து சுட்டுக் கொல்கின்றனர். இதுபோன்ற பிரச்னைகளுக்கு எல்லாம், மத்தியில் எங்கள் தலைமையில் அமைய உள்ள புதிய அரசு, உறுதியான நடவடிக்கைகள் எடுக்கும்.கிழக்கு மாநிலங்களில் தனிப்பட்ட பிரச்னைகள் உள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் சில பிரச்னைகள் உள்ளன. எல்லாரையும் அரவணைத்து, அனைத்து மக்களின் எண்ணங்களும் ஈடேறும் வகையில் நாங்கள் அனைவரும் கைகோர்த்து, ஒரே அணியாக செயல்படுவோம்.
ஐ.மு., கூட்டணி நிலைமை பரிதாபமாக உள்ளது. 'மறு எண்ணிக்கை அமைச்சர்' (சிதம்பரம்) தேர்தலில் போட்டியிட பயந்து ஓடி விட்டார். அந்த அணி தோல்வி பயத்தில் இயங்கி கொண்டிருக்கிறது.ஏழைகளின் பெயரை சொல்லி ஏமாற்றி வருகிறது. தேர்தல் வந்தால் தான் ஏழைகளை பற்றிய எண்ணம் வருகிறது. ஏழை குடிசைக்குள் சென்று புகைப்படம் பிடித்து, ஏழ்மையை சுற்றுலா பொருளாக பார்க்கின்றனர்.
காங்கிஸ் கட்சியின் இளைய தலைவருக்கு ஏழ்மையை பற்றி தெரியாது. ஏழைகள் வீட்டில் அடுப்பு எரியவில்லை என்றால், அவர்கள் படும் துயரம் எனக்கு தெரியும். நான் ஏழ்மையில் பிறந்தேன்; ஏழ்மையில் வளர்ந்தேன். டீ விற்று முன்னேறினேன். ஏழைகளின் வாழ்க்கையில் ஒளி விளக்கு ஏற்றி வைப்பேன்.இவ்வாறு, மோடி பேசினார்.
'அனைவருக்கும் குடியிருக்க வீடு; தடையின்றி மின்சாரம்' : ''இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும், 2022ல், தனி வீடு, தடையின்றி குடிநீர், மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, சென்னையில், பிரசார கூட்டத்தில் பேசிய, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி மக்களுக்கு உறுதி அளித்தார்.
அவர் பேசியதாவது:காங்கிரசின், 2009 லோக்சபா தேர்தல் அறிக்கையில், 'ஐந்து ஆண்டுகளில், 10 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவோம்' என, உறுதிமொழி அளித்து இருந்தது. ஐந்து ஆண்டு ஆட்சியில், வேலைவாய்ப்பை உருவாக்காமல், 'இன்னாருக்கு வாய்ப்பு தாருங்கள்' என, காங்கிரஸ் கட்சி கேட்கிறது.ஏற்கனவே, காங்கிரஸ் அளித்த உறுதிமொழி என்னாயிற்று? மீனவர்களின் நலன் மீது மத்திய அரசு கவனம் செலுத்தவில்லை. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால், மீனவர்கள் முன்னேற்றம் அடைய முடியும். மீனவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றுவேன். டில்லியில், பலவீனமான அரசு இருந்தால், எந்த பலனும் கிடையாது. பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்றதும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களின் முழு ஒத்துழைப்புடன் ஆற்றல் மிக்க அரசு அமைக்கப்படும்.
பெரிய நாடான இந்தியாவை, சின்ன நாடுகள் மிரட்டிக் கொண்டிருக்கின்றன; இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். உலகில் பல நாடுகளில் நம் வம்சாவளிகள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு ஒரே தாய், நம் பாரதம் தான். அவர்களின் பாஸ்போர்ட் பல நிறங்களில் இருக்கலாம்; ஆனால், அவர்களின் உடலில் ஓடும் ரத்தம் சிவப்பு நிறம் என்பதை மறந்து விடக் கூடாது.மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் நலன் மீது மத்திய அரசு அக்கறை செலுத்த வேண்டும்;புதிய அரசு இனிமேல் கவனம் செலுத்தும். மலேசியா, சிங்கப்பூர், இலங்கையில் வாழும் தமிழர்களின் உரிமைக்காக போராட வேண்டும். வரும், 2022ல், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகும் போது, இந்தியாவில் உள்ள அனைவருக்கும், குடிநீர், மின்சார வசதியுடன் கூடிய வீடுகள் கிடைக்கும். நோயாளிகளுக்கும், உடனடியாக நிவாரணம் கிடைக்கும் என, சபதம் ஏற்கிறேன்; இதற்கு உங்கள் ஆதரவை கேட்கிறேன். ராமதாஸ், விஜயகாந்த், வைகோ போன்றவர்களால் தன்னலமற்ற கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியால், தமிழகத்தில் புதிய வரலாறு ஏற்படும். அதற்கு எல்லாரும் ஆதரவு அளிக்க வேண்டும்.இவ்வாறு மோடி பேசினார்.மோடியின் பேச்சை, 'துார்தர்ஷன்' முன்னாள் இயக்குனரும், பத்திரிகையாளருமான ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்தார்.தமிழகத்தின் முன்னாள், டி.ஜி.பி., பாலசந்திரன், நேற்று, தேசிய ஜனநாயக கூட்டணி பிரசார பொதுக்கூட்டத்தில், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முன்னிலையில், பா.ஜ.,வில் இணைந்தார்.
மோடி பொதுக்கூட்டம் அதிகாரிகள் கண்காணிப்பு
*கூட்ட மேடை, காவி நிறத்தில் அமைக்கப்பட்டு இருந்தது.
*மேடையில் இருந்த பேனரில், மோடி, வாஜ்பாய், அத்வானி, ராஜ்நாத் சிங் படங்கள் இடம் பெற்றிருந்தன. பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், ஐ.ஜே.கே., தலைவர் பச்சமுத்து, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகிய கூட்டணி கட்சி தலைவர்கள் படங்களும் இருந்தன.
*அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம் மற்றும் வேட்பாளர்களின் செலவுகளை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள, பறக்கும் படை அதிகாரிகள், மோடி கூட்டத்தை கண்காணித்து, வீடியோவில் பதிவு செய்தனர்.
*மாலை, 6:40 மணிக்கு வந்தே மாதரம் பாடலுடன் பொது கூட்டம் துவங்கியது.
*திருவள்ளூர், வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம் தொகுதி வேட்பாளர்கள் வந்திருந்தனர்.