
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இன்று காலை கவுகாத்தி எஸ்பிரஸ் ரெயிலில் 2 குண்டுகள் வெடித்தன. இந்த குண்டுவெடிப்பில் ஒரு பெண் பலியானார். 12 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குண்டு வெடிப்பு தொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த குண்டு வெடிப்புக்கு தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், சதி செயலில் ஈடுபட்டவர்களை விரைவில் கண்டுபிடிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். காவல்துறையினர் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தும் என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். வெடிகுண்டு சம்பவத்தால் தமிழக மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ள அவர், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கையும் காவல்துறை மேற்கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ள ஜெயலலிதா பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளார். குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் குண்டு வெடித்துள்ளது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றச்சாட்டியுள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இன்று காலை கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் இளம் பெண் ஒருவர் பலியாகினார். 14 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குண்டுவெடிப்புக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கருணாநிதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னையில் பாகிஸ்தான் நாட்டின் பயங்கர உளவாளி முகமது ஜாகீர்உசேன் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாகவும், துல்லியமாகவும் எடுக்கப்படாத காரணத்தால் சென்ட்ரல் புகைவண்டி நிலையத்தில் குண்டு வெடித்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
No comments:
Post a Comment