வேலூர்:
மணல் கடத்தல் வழக்கில் ஜாமீன் கோரிய 3 பேரிடம், ஜாமீன் வேண்டுமானால்
வேலூர் சிறைக்கு 18 ஆயிரம் லிட்டர் நீர் சப்ளை செய்ய வேண்டும் என்று
வேலூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. வேலூர்-காட்பாடி புதிய பாலம் அருகே
பாலாற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்திய கழிஞ்சூர் மற்றும்
விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த சிவா, ராமு மற்றும் சரவணன் ஆகிய 3 பேரை
கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். கைதான 3 பேரும் ஜாமீன் கேட்டு
வேலூர் ஜே.எம் 3வது கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இதன் வழக்கு விசாரணை
நேற்று முன்தினம் வந்தது.
வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்
சிவக்குமார், மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும்
என்றால், வேலூர் மத்திய சிறைக்கு தலா 6000 லி. நீர் சப்ளை செய்ய வேண்டும்.
இந்த பணியை முடித்த பிறகே ஜாமீன் வழங்க முடியும் என்று உத்தரவிட்டார்.
மணல் கடத்திய சிலருக்கு கடந்த மாதம் வேலூர் மத்திய சிறைக்கு தண்ணீர் சப்ளை
செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment