உயிருக்கு போராடிய வாலிபரை காப்பாற்றிய ஐகோர்ட் நீதிபதி
திருப்பூர்:
திருப்பூர் அருகில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நபரை ஐகோர்ட்
நீதிபதி மீட்டு மருத்துவ மனையில் சேர்த்தார். திருப்பூர் தென்னம்பாளையத்தை
சேர்ந்த சுப்ரமணியன் மகன் நாகராஜ் (35), காட்டுவலவை சேர்ந்த
கருப்புச்சாமியின் மகன் குரு (27). நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில்
பல்லடம் தாராபுரம் சாலையில் இருவரும் பைக்கில் சென்றனர். துத்தாரிபாளையம்
என்ற இடத்தில் சென்ற போது, எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது. இதில்
நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். உடன் வந்த குரு படுகாயம் அடைந்து
உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த மதுரை
ஐகோர்ட் நீதிபதி பி.என்.பிரகாஷ், உயிருக்கு போராடிய குருவை மீட்டு
மருத்துவமனைக்கு அனுப்பியதோடு, திருப்பூர் மாவட்ட காவல் நிலையத்துக்கும்
தகவல் கொடுத்தார்.
உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்ததால்
அவரின் உயிரை காப்பாற்ற முடிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுபோன்று
விபத்துக்களை காணும் ஒவ்வொருவரும் உயிரின் மதிப்பை அறிந்து உதவ முன்வர
வேண்டும் என திருப்பூர் மாவட்ட போலீசார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment