Saturday, 26 April 2014

தமிழ் இணையதளங்கள்

 

இன்றைய காலக்கட்டத்தில் இணையம் மிகவும் அவசியமாக இருக்கிறது.அனைவருமே கணினி மற்றும் மொபைல்களில் பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால் தமிழ் இணையதளங்கள் விவரம் நமக்கு அதிகம் தெரிவதில்லை.அதன் பயன்பாட்டிற்காக தமிழ்
இணையதளங்களின் பட்டியல் .
பொழுதுபோக்கு 
http://sutties.blogspot.com/
http://sashiga.blogspot.com/
http://vijisulagam.blogspot.com/
http://azurillcrafts.blogspot.com/
http://allinalljaleela.blogspot.com/
http://geethaachalrecipe.blogspot.com/
http://annaimira.blogspot.com/
http://pennkal.blogspot.com/
http://ammus-recipes.blogspot.com/
http://eniniyaillam.blogspot.com/
http://kulanthaikal.blogspot.com/
http://ammakalinpathivukal.blogspot.com
/http:/ammus-recipes.blogspot.com
www.allinalljaleela.blogspot.com
http://idlyvadai.blogspot.com/
http://jannal.blogspot.com/
 உடல்நலம்
www.payanangal.in
http://azurilbeautycorner.blogspot.com/
http://tamizhodu.blogspot.com/
http://ruraldoctors.blogspot.com/
http://maruththuvam.blogspot.com/
http://www.payanangal.in/
http://ruraldoctors.blogspot.com/
சினிமா
http://www.saidapet2009.blogspot.com/
http://tamilmoviecenter.blogspot.com/
http://padikkalama.blogspot.com/
http://cablesankar.blogspot.com/
http://cinemapadalkal.blogspot.com/
தொழில்நுட்பம்
www.pkp.in
http://tamilbazaar.blogspot.com/
http://suryakannan.blogspot.com/
http://gouthaminfotech.blogspot.com/
http://pudhuvai.com/
http://suthanthira-ilavasa-
menporul.blogspot.com/
http://velang.blogspot.com/
http://velang.blogspot.com/
www.tamilveli.com
http://kricons.blogspot.com/
http://oneasyblog.blogspot.com/
www.tamilpctech.blogspot.com
www.starcomputech.blogspot.com
www.rajasoftwares.co.cc
http://rajaananth25.blogspot.com/
கவிதை/கட்டுரை
http://kavikilavan.blogspot.com/
http://rajasabai.blogspot.com/
http://ganifriends.blogspot.com/
http://maaruthal.blogspot.com/
http://ponniyinselvan-
mkp.blogspot.com/
http://raajaachandrasekar.blogspot.com/
http://tamilpoo.blogspot.com/
http://naanchithan.wordpress.com/
http://anbudannaan.blogspot.com/
http://oliyudayon.blogspot.com/
http://jerryeshananda.blogspot.com/
http://surekaa.blogspot.com/
http://illakiya.blogspot.com/
http://tamiluzhavan.blogspot.com/
http://shru2004.blogspot.com/
http://asuda5.blogspot.com/
http://kavithaikal.blogspot.com/
http://padmahari.wordpress.com/
http://aaraamthinai.blogspot.com/
http://niroodai.blogspot.com/
http://nilavil-oru-thesam.blogspot.com/
http://kavithai07.blogspot.com/
http://sethiyathope.blogspot.com/
http://www.idhyamonline.blogspot.com/
http://puduvaisiva.blogspot.com/
http://tvrk.blogspot.com/
http://thamizhoviya.blogspot.com/
http://jaihindpuram.blogspot.com/
http://kirukkall.blogspot.com/
http://vanjoor-vanjoor.blogspot.com/
http://kannimai.blogspot.com/
http://srivaimakkal.blogspot.com/
பலவிதம்
www.giriblog.com
www.saravanakumaran.com
www.vadakaraivelan.com
www.aathi-thamira.com
http://kanavukale.blogspot.com/
http://tamilmoviecenter.blogspot.com/
http://kklogan.blogspot.com/
http://ensaaral.blogspot.com/
http://perunthottam.blogspot.com/
http://maniaatti.blogspot.com/
http://kittipullu.blogspot.com/
http://prapaactions.blogspot.com/
http://abragam.blogspot.com/
http://sinekithan.blogspot.com/
http://nizampakkam.blogspot.com/
http://aarveeyem.blogspot.com/
http://arumbavur.blogspot.com/
www.kannam.com
http://tamiluzhavan.blogspot.com/
http://mynose.blogspot.com/
http://www.sunduaeli.blogspot.com/
http://konjamalasalkonjamkirukkal.blogspot.com/
http://www.vandhemadharam.com/
http://tamil10.com/
http://www.nilacharal.com/
http://www.kwintessential.co.uk/
language/about/tamil.html
இலக்கியம்
http://padmahari.wordpress.com/
www.nanjinnadan.wordpress.com
www.sekalpana.com
http://gunathamizh.blogspot.com/
http://kuralamutham.blogspot.com/
http://memonkavi.blogspot.com/
http://klr-ismath.blogspot.com/
http://manaosai.blogspot.com/
http://bagavathgeethai.blogspot.com/
http://maniyinpakkam.blogspot.com/
http://sovietbooks.blogspot.com/
www.Thadagam.com
http://atheetham.com/
www.maattru.com
http://aangilam.blogspot.com/
அறிவியல்
http://electricalintamil.blogspot.com/
http://nathikarai.blogspot.com/
http://tosnuc.blogspot.com/
http://radhakrishnantv.blogspot.com/
http://tosnuc.blogspot.com/
http://svttechnologya.blogspot.com/
http://www.tamilish.com/
http://tndawa.blogspot.com/
ஆன்மீகம்
http://www.bagavathgeethai.blogspot.com
www.readislam.net
www.satyamargam.com
http://hajvilakkam.blogspot.com/
http://arivhedeivam.blogspot.com/
http://unmaikural.blogspot.com/
http://peacetrain1.blogspot.com/
http://manithaneyaexpress.blogspot.com/
http://comparativestudy.blogspot.com/
http://badrkalam.blogspot.com/
http://nizardeen.blogspot.com/
http://emsabai.blogspot.com/
http://ulamaa-pno.blogspot.com/
http://www.egathuvam.blogspot.com/
http://christianpaarvai.blogspot.com/
http://www.readislam.net/
http://www.islamictube.net/
www.irf.net
http://www.egathuvam.blogspot.com/
http://christianpaarvai.blogspot.com/
http://www.satyamargam.com/
http://www.thedeenshow.com/
http://www.whyislam.org/
http://damilosho.blogspot.com/
http://osho-tamil.com/
osholanka.blogspot.com
santhimurli.blog.co.in
oshoquest.com
http://radhamanohar.blogspot.com/
http://suwaasam.blogspot.com/
www.osho.com
www.oshoworld.com
http://students.blogspot.com/
http://www.freetechebooks.com/
செய்திகள்
http://www.sowmyatheatres.blogspot.com
http://adiraipost.blogspot.com/
http://veyilaan.wordpress.com/
http://maargalithingal.blogspot.com/
http://maaveerarkal.blogspot.com/
http://kalaignarkal.blogspot.com/
http://sowmyatheatres.blogspot.com/
http://tmpcreativiews.blogspot.com/
http://lrismath.blogspot.com/
www.aaraamthinai.blogspot.com
http://www.thesundayindian.com/
http://www.envazhi.com/
www.Oneindia.com
www.Dinamalar.com
www.Maalaimalar.com
www.Dinamani.com
www.Nakkheran.in
www.New.vikatan.com
www.dinakaran.com
http://www.tamilpaper.net/
https://seidhigal.wordpress.com/
www.bogy.in
http://www.envazhi.com/
நகைச்சுவை மற்றும் புதிர்
http://priyamudanvasanth.blogspot.com/
http://tlbhaskar.blogspot.com/
http://yovoice.blogspot.com/
http://ckmayuran.blogspot.com/
http://elavasam.blogspot.com/
http://pannikutti-
ramasamy.blogspot.com/
http://gokulathilsuriyan.blogspot.com/
http://thamizhoviya.blogspot.com/
பொதுவானவை
http://chinthani.blogspot.com/
http://tmpcreativiews.blogspot.com/
www.lrismath.blogspot.com
www.itsjamaal.com
www.sakthipages.com
http://shafiblogshere.blogspot.com/
http://nkashokbharan.blogspot.com/
http://cdmsaran.blogspot.com/
http://adiraiabu.blogspot.com/
http://kaaranam1000.blogspot.com/
http://safrasvfm.blogspot.com/
http://blog.sanjaigandhi.com/
http://eeview.blogspot.com/
http://rajagiriyar.blogspot.com/
http://yasavi.blogspot.com/
http://texlords.wordpress.com/
http://tiruppur-
bloggers.blogspot.com/
http://syednavas.blogspot.com/
http://kismath.blogspot.com/
http://shanthru.blogspot.com/
http://slnanparkal.blogspot.com/
http://chinthani.blogspot.com/
http://valpaiyan.blogspot.com/
http://aarveeyem.blogspot.com/ .
http://khaleelbaaqavee.blogspot.com/
http://khaleel-
baaqavee.blogspot.com/
http://mypno.blogspot.com/
http://vanjoor-
vanjoor.blogspot.com/
http://www.payanangal.in/
http://kannimai.blogspot.com/
http://sinekithan.blogspot.com/
http://www.digitalbhoomi.in/tamil-blogs/
http://idhuthanunmai.blogspot.com/
http://pkp.blogspot.com/
http://azhkadalkalangiyam.blogspot.com/
வணிகம்
http://panguvanigamtips.blogspot.com/
http://lbizblog.blogspot.com/
http://top10shares.wordpress.com/
http://ayurvedhi.blogspot.com/
http://www.tamilcafe.net/
tamilbooks.html
தேடல்
www.valaipookkal.com
www.thiratti.com
www.tamilmanam.net
www.tamilish.com
www.ulavu.com
www.tamil.tamilers.com
www.thatstamil.oneindia.in
www.namkural.com
www.tamil10.com
www.tamilveli.com
www.newspaanai.com
www.valaipookkal.com
www.tamil.blogkut.com
http://poosaram.blogspot.com/
www.thiratti.com
www.isangamam.com
http://tamilblogs.blogspot.com/
www.isangamam.com
www.thiratti.com
http://www.blogtopsites.com/
http://ta.indli.com/
http://ta.wiktionary.org/wiki/
எழுத்ததாளர்கள்
http://balakumaranpe-blogspot -Blog
www.arivumathi.blogspot.com/-blog
http://puthu.thinnai.com/ -Blog
http://www.thinnai.com/index.php-Blog
http://seeman.wordpress.com/
http://oshotamil.blogspot.com/
http://rasanaikaaran.com/
http://www.ishafoundation.org/
http://subavee.wordpress.com/
http://tamizachi.com/index.php?page=home
http://www.writerpara.com/paper/
http://thathachariyar.blogspot.com/
http://pamaran.wordpress.com/
http://rudhrantamil.blogspot.com/
http://http// www.paristamil.com
http://www.gantham.com/
http://balakumaranpesukirar.blogspot.com/
http://mathimaran.wordpress.com/
http://balakumaranpesukirar.blogspot.com/
http://yugabharathi.wordpress.com/
http://www.ashaheer.blogspot.com/
http://www.thenaali.com/
www.tamilauthors.com/
http://shanthru.blogspot.com/
http://itulaku.blogspot.com/
http://www.viparam.com/
http://www.eraeravi.com/home/album.html
www.tamilnanbargal.com
http://www.gnanakoothan.com/
http://manushyaputhiran.uyirmmai.com/
http://dubukku.blogspot.com/
www.nanjilnaadfan.wordpress.com
http://vavaasangam.blogspot.com/
விலங்குகள்
http://tamilansuvadu.blogspot.com/
http://iyargai.blogspot.com/
http://aarveeyem.blogspot.com.com/

Friday, 25 April 2014

கவிதைக்காரர் வீதி (தொகுப்பு2 )













 







Tamil Kavithai

Tamil Kavithai

Tamil Kavithai

Tamil Kavithai

Tamil Kavithai

Tamil Kavithai

Tamil Kavithai

Tamil Kavithai

Tamil Kavithai

Tamil Kavithai

Tamil Kavithai

Tamil Kavithai

Tamil Kavithai

Tamil Kavithai

Tamil Kavithai

Tamil Kavithai

Tamil Kavithai

Tamil Kavithai

Tamil Kavithai

Tamil Kavithai

Tamil Kavithai

Tamil Kavithai



















அறிவார்ந்த முயற்சியால் ஆகாததில்லை


முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான். யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன் தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அறிவித்தான்.

மொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபாரமா என்று மகன்கள் மூவரும் ஆரம்பத்தில் திகைத்தனர். ஒரு சீப்பைக் கூட விற்க முடியாதே என்று நினைத்தனர். ஆனால் பின் மூவரும் முயற்சி எடுப்பது என்று முடிவு செய்தனர். அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சில நாட்கள் அவகாசம் கொடுத்த அந்த வியாபாரி அது முடிந்தவுடன் மகன்களை அழைத்து அவர்கள் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று கேட்டான்.

ஓரு மகன் சொன்னான். “நான் இரண்டு சீப்புகள் புத்த மடாலயத்திற்கு விற்றேன்”

வியாபாரி கேட்டான். “எப்படி?”

“புத்த பிக்குகளிடம் இந்த சீப்பை முதுகு சொறியவும் உபயோகிக்கலாம் என்று சொல்லிப் பார்த்தேன். இரண்டு புத்த பிக்குகளுக்கு அது சரியென்றுபட்டது. அதனால் அவர்கள் இருவரும் இரண்டு சீப்புகள் வாங்கினார்கள்:”

இன்னொரு மகன் சொன்னான். “நான் பத்து சீப்புகள் விற்பனை செய்தேன்”

வியாபாரி ஆச்சரியத்துடன் கேட்டான். “எப்படி?”

“வழியெல்லாம் காற்று அதிகமாக உள்ளதால் மலை மேல் உள்ள அந்தப் புத்த மடாலயத்திற்குப் போபவர்கள் தலைமுடியெல்லாம் பெரும்பாலும் கலைந்து விடுகிறது. அப்படிக் கலைந்த தலைமுடியுடன் புத்தரை தரிசிக்க பக்தர்கள் செல்வது புத்தருக்குச் செய்யும் அவமரியாதையாகத் தோன்றுகிறது என்று புத்த மடாலயத்தில் சொன்னேன். ஒரு பெரிய கண்ணாடியும் சில சீப்புகளும் வைத்தால் அவர்கள் தங்கள் தலைமுடியைச் சரி செய்து கொண்டு புத்தரை தரிசிக்க செல்வது ந்ன்றாக இருக்கும் என்ற ஆலோசனையும் சொன்னேன். ஒத்துக் கொண்டு பத்து சீப்புகள் வாங்கினார்கள்”

வியாபாரி அந்த மகனைப் பாராட்டினான்.

மூன்றாம் மகன் சொன்னான். “நான் ஆயிரம் சீப்புகள் விற்பனை செய்தேன்”

வியாபாரி ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றான். “எப்படி?”

“அந்த புத்த மடாலயத்திற்கு ஏராளமானோர் வந்து பொருளுதவி செய்கிறார்கள். அவர்கள் உதவியை மெச்சி புத்தரின் ஆசிகள் அவர்களை வழிநடத்தும் வண்ணம் அவர்களுக்கு ஏதாவது ஒரு நினைவுப் பரிசு வழங்கினால் அது மேலும் பலரும் புத்த மடாலயத்திற்கு உதவி செய்யத் தூண்ட உதவும் என்றேன். அந்த மடாலயத் தலைவர் என்ன நினைவுப் பரிசு தரலா என்று மடாலயத் தலைவர் கேட்டார். நான் புத்தரின் வாசகங்களைப் பதித்து வைத்திருந்த சில சீப்புகளை நீட்டினேன். அந்த சீப்புகளை தினமும் உபயோகிக்கும் பக்தர்களுக்கு அந்த உபதேசங்களைத் தினமும் காணும் வாய்ப்பும் கிடைக்கும், அந்த உபதேசங்கள் அவர்களைத் தினமும் வழிநடத்துபவையாகவும் இருக்கும் என்று தெரிவித்தேன். அது நல்ல யோசனை என்று நினைத்த மடாலயத்தலைவர் உடனடியாக அப்படி புத்தரின் வாசகங்கள் பதித்த ஆயிரம் சீப்புகள் வாங்க ஒப்புக் கொண்டார்”

அந்த வியாபாரி எந்த மகனிடம் தன் வியாபாரத்தை ஒப்படைத்தார் என்று சொல்ல வேண்டியதில்லை.

மொட்டை பிக்குகளிடம் சீப்பு விற்கப் போவது கண்டிப்பாக ஆகாத வேலை என்று நினைப்பது தான் பொதுவாக நாம் காணக்கூடிய மனோபாவம். விதி சில சமயங்களில் நம்மைக் கொண்டு சேர்க்கும் சூழ்நிலையும் கிட்டத்தட்ட இதே போலத் தான் இருக்கும். அதிலிருந்து மீள்வதற்கு வழியே இல்லை என்று முதலில் தோன்றும். ஆனால் அதை ஒப்புக் கொண்டு முடங்கி நிற்போமானால் நாம் தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டோம் என்பது பொருள்.

அந்த வியாபாரியின் மகன்கள் ஏதாவது முயற்சி செய்ய வேண்டும் என்று தீர்மானித்தது புத்திசாலித்தனமான செயல். நாமும் நாம் இருக்கும் அந்த மோசமான சூழ்நிலைக்குத் தீர்வே இல்லை என்று ஆரம்பத்தில் தோன்றினாலும் ஏதாவது செய்து நல்ல தீர்வைக் காண வேண்டும் என்று தீர்மானிப்பதுவே அறிவு.

முயற்சிகளிலும் பல வகை உண்டு என்பதற்கு வியாபாரியின் மூன்று மகன்கள்
முயற்சிகளே உதாரணம். ஒரு மகன் புத்த பிக்குகளிற்குத் தலை வார சீப்பு பயன்படா விட்டால் வேறெதற்காவது பயன்படுமா என்று யோசித்ததன் பலனாக இரண்டு சீப்புகள் அவனால் விற்க முடிந்தது. புத்த பிக்குகளுக்கு சீப்பு பயன்படாமல் போனாலும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு சீப்பு பயன்படுமா என்று இன்னொரு மகன் யோசித்ததால் அந்த புத்த மடாலயத்தின் முன்புறம் சில சீப்புகள் வைத்து பக்தர்கள் தலைமுடியை முறையாக வாரிக் கொண்டு உள்ளே நுழைய உதவியாக பத்து சீப்புகள் விற்க முடிந்தது.

ஆனால் இந்த இரண்டு மகன்களுடைய முயற்சியாலும் தொடர்ந்து அந்த புத்த மடாலயத்திற்கு சீப்பு விற்க வழியில்லை. அவர்களுடைய விற்பனை ஒரு முறையோடு முடிந்து போய் விட்டது.

மூன்றாம் மகன் கூட இரண்டாம் மகன் போலவே புத்த பிக்குகளுக்குப் பயனில்லா விட்டாலும் அவர்களுடன் சம்பந்தப்படும் மற்றவர்களுக்குப் பயன்படுமல்லவா என்கிற சிந்தனையைத் தான் செய்தான். அந்த வெறும் சீப்பை புத்தரின் உபதேசங்களைச் செதுக்கி அதை அவர்கள் விரும்பும் வண்ணம் உயர்த்தி அதை நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு புத்தரின் ஆசியாக மாற்றி விற்பனை செய்தான். அவனுடைய வித்தியாசமான சிந்தனை அதற்காக அவன் எடுத்துக் கொண்ட உழைப்பு எல்லாம் மற்றவர்களை மிஞ்சும் வண்ணம் வெற்றி பெற்றது. மேலும் மற்ற இருவரைப் போல் இவனுடைய விற்பனை ஒரு முறையோடு முடிகிற விற்பனை அல்ல. புத்த மடாலயத்திற்கு நன்கொடைகள் தருகிறவர்கள் அதிகரிக்க அதிகரிக்க இவன் விற்பனையும் அதிகரிக்கும்.

ஒரு சூழ்நிலையை ஒரே நேர்கோணத்தில் பார்ப்பது இரண்டு சீப்பு விற்ற மகனைப் போல அற்ப விளைவுகளையே ஏற்படுத்தும். பார்வையை சற்று விரிவுபடுத்தி வேறு கோணங்களிலும் சிந்தித்து செயல்படுவது பத்து சீப்பு விற்றவன் முயற்சி போல நல்ல விளைவுகளை அதிகரிக்கும். மேலும் பல கோணங்களிலும் சிந்தித்து, தன் திறமையையும் உழைப்பையும் சேர்த்து முயற்சி செய்பவன் அடையும் நன்மைகள் ஆயிரம் சீப்புகள் விற்பனை செய்தவன் முயற்சியைப் போல பலமடங்கு அதிகரிக்கும். ஆரம்பத்தில் வழியே இல்லை என்று தோன்றியது போய் புதிய பிரதேசங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும் வாய்ப்பாக அமையும்.

எனவே எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் மனம் துவண்டு விடாதீர்கள். முடியாது என்று தோன்றும் ஆரம்ப அபிப்பிராயத்திற்கு அடிபணியாதீர்கள். பார்வையை விரிவுபடுத்துங்கள். புதிய புதிய கோணங்களில் சிந்தியுங்கள். சில சிறிய மாற்றங்களால் பெரிய விளைவுகளை ஏற்படுத்த முடியுமா என்று யோசியுங்கள். பொறுமையுடனும், நம்பிக்கையுடனும், துடிப்புடனும் முயன்றால் அந்தக் கடினமான சூழ்நிலையே நீங்கள் அடையப் போகும் அளப்பரிய வெற்றிகளுக்கு அஸ்திவாரமாக அமையக்கூடும்.

தங்கமான சங்கங்கள்


          உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை..
          ஏன் தெரியுமா?
          "பேனா" முனை உன்னை குத்திவிடுமோ என்று..

          இப்படிக்கு
          Spelling தெரியாமல் சமாளிப்போர் சங்கம்
 
    


          அவள் என்னை திரும்பி பார்த்தாள்..
          நானும் அவளைப் பார்த்தேன்..
         அவள்..மறுமடியும் என்னைப் பார்த்தாள்
          நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்..

         இப்படிக்கு
          பரிட்சையில் ஒன்னுமே தெரியாமல்
          திருதிரு வென முழிப்போர் சங்கம்


    

          காதல் One Side -ஆ பண்ணினாலும்
          Two side-ஆ பண்ணினாலும்
          கடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது

         இப்படிக்கு
         காதல் பற்றி Four Side-ம் யோசிப்போர் சங்கம்

    

          அனுமதி கேட்க்கவும் இல்லை...

          அனுமதி வழங்கவும் இல்லை...


          ஆனால்

          பிடிவாதமாக ஒரு முத்தம்..

          "கன்னத்தில் கொசுக்கடி"

          இப்படிக்கு
          புரண்டு புரண்டு படுத்து யோசிப்போர் சங்கம்


     



          புலிக்கு பின்னாடி போன‌
           மானும்
          பொண்ணுக்கு பின்னாடிப் போன‌
          ஆணும்..
          பிழைத்ததாக சரித்திரம் இல்லை..

          இப்படிக்கு
          சிங்கிளா வாழ்ந்தாலும்
          சிங்கம் போல வாழ்வோர் சங்கம்...[படித்ததும்...மறந்துவிடவும்]

       Join Only-for-tamil


           கிரிக்கெட்டில்
           ரன் எடுக்காமல் போனால் டக் அவுட்

          ரயிலில்
          டிக்கெட் எடுக்காமல் போனால் வித் அவுட்

          வீட்டில்
          கொசுவை கொல்லுவதற்கு ஆல் அவுட்

          நீங்க‌
          இந்த மெயிலை அப்ரூவ் பண்ணலைன்னா
          நான் மூடு அவுட்

         இப்படிக்கு
         பாசக்கார பய புள்ளைங்க சங்கம்


      


காதலியே

 
கண்களை மட்டுமே
வீசிப்பழக்கப்பட்ட என் விழிகளுக்கு
கண்ணீரை வரவழைக்க
பழக்கி விட்டவள் நீ !

                                 
மொழிகளை மட்டுமே
பேசிப்பழக்கப்பட்ட  என் நாவுக்கு
மௌனத்தை பேச -
சொல்லிக்கொடுத்தவள் நீ !

                                 
இன்னலை மட்டுமே
தாங்கக்கூடிய என் இதயத்திற்கு
இமயத்தை தாங்க -
சொல்லிக்கொடுத்தவள் நீ !

                                  
பேச்சை மட்டும் நிறுத்தியுள்ள நீ
என் மூச்சையும் நிறுத்திவிடு
கொள்ளையிட்டே பழக்கப்பட்ட நீ
கொள்ளியிடவும் பழகிக்கொள் !



என் பாசம் புரியாதவர்களுக்கு
இந்த உயிர் மறையும்
போது... புரியும் அந்த பிரியம்,


என் மௌனம் அறியாதவர்களுக்கு
மௌனத்தின் வலிமை நான்
கண் மூடும் போது தெரியும்,


என் கண்களின் மொழி தெரியும்
நான் கண்ணுக்கு தெரியாத போது
உன் வாழ்வின் அர்த்தம் புரியும்
நான் உன்னை விட்டு பிரியும் போது ...

இன்னும் 10 ஆண்டுகளுக்கு மோடி அரசியல்தான்


 




சமீபத்தில் நடந்த தேர்தல்களில், சட்டசபை இடைத்தேர்தல்களை தவிர, மற்ற எந்தத் தேர்தலிலும், தற்போது பதிவான அளவுக்கு, கூடுதலாக ஓட்டுப் பதிவு நடக்கவில்லை. அதற்கான காரணம் குறித்து, தமிழக அரசியல் ஆய்வாளர்களில் ஒருவரான, வழக்கறிஞர் ரவீந்திரன் துரைசாமி கூறியதாவது:


40 தொகுதிகள்:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 40 லோக்சபா தொகுதிகளுக்கு நேற்று நடந்த தேர்தலில், கிட்டத்தட்ட, 12 சதவீத ஓட்டுகள், கூடுதலாக பதிவாகி உள்ளன. ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் போதெல்லாம், ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற மனநிலையில், மக்கள் உள்ளனர் என்பதை அறிந்து கொள்ளலாம். கடந்த, 10 ஆண்டு கால, காங்., ஆட்சியின், கொள்கை முடிவுகள் உட்பட, அந்த அரசின் பல நடவடிக்கைகளால், மக்கள் பல விதமான சிரமத்தை அனுபவித்தனர். அதனால், ஆட்சி மாற்றம் தேவை என, நினைத்த மக்கள், தமிழகத்தில், பா.ஜ., தலைமையில் அமைந்த கூட்டணிக்கு அதிக வரவேற்பு அளித்தனர். அதற்கேற்ப, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியும், தமிழகத்துக்கு வந்து சூறாவளி சுற்றுப்பயணம் செய்தது, அந்த அணிக்கு மேலும் வலுசேர்த்தது. அதன் தாக்கமே ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்க காரணம். இதன்மூலம், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மோடிக்கு ஆதரவாக, திரண்டு வந்து ஓட்டளித்திருக்கலாம் என, நம்பலாம். அதேநேரத்தில், மோடிக்கு ஆதரவாக, குறிப்பிட்ட சதவீத மக்கள் திரண்டு வந்து ஓட்டளித்ததைப் போல, அவருக்கு எதிராகவும், குறிப்பிட்ட அளவினர் திரண்டிருக்கின்றனர் என்பதையும் மறுக்க முடியாது. குறிப்பாக, மோடி ஆட்சிக்கு வந்தால், தங்களுக்கு பின்னடைவு ஏற்படும் என, கருதும் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும், தலித்களும் இந்த முறை ஒருமுகப்படுத்தப்பட்டு, ஓட்டளித்திருக்கின்றனர் என, சொல்லலாம்.

ஆதரவும் எதிர்ப்பும்:
சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., முந்தைய தேர்தல்களை விட, 10 சதவீத ஓட்டுகளை, கூடுதலாகப் பெற்று வெற்றி அடைந்தது. அதேநேரத்தில், தோல்வியடைந்த காங்கிரசும், கூடுதலாக, 5 சதவீத ஓட்டுகளைப் பெற்றது. இதிலிருந்தே, ஆதரவு அதிகரித்துள்ளதைப் போல, எதிர்ப்பும் அதிகரித்துள்ளதை அறியலாம். அதுபோன்ற நிலைமைதான், தற்போது தமிழகத்திலும் ஏற்பட்டுள்ளது. மோடிக்கு எதிரான நிலையை, கடைசி நேரத்தில், தி.மு.க., எடுத்ததால், அவருக்கு எதிரான ஓட்டுகள் அனைத்தையும், அந்த கூட்டணி அறுவடை செய்திருக்க வாய்ப்பு உள்ளது. அப்படி அறுவடை செய்திருந்தால், இந்தத் தேர்தலில், தி.மு.க., கூட்டணி அதிக இடங்களைப் பிடித்தாலும், ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அப்படிப்பட்ட ஒரு நிலை உருவானால், தி.மு.க.,வுக்கு அடுத்தபடியாக, பா.ஜ., கூட்டணி அதிக இடங்களைப் பிடிக்கலாம். மேலும், தமிழகத்தில், இந்த தேர்தலில், பலமுனைப் போட்டி நிலவியதால், அனைத்து வேட்பாளர்களும், மக்களை பெரிய அளவில் திரட்டி வந்து ஓட்டளிக்க செய்துள்ளனர். இதுவும், ஓட்டு சதவீதம் அதிகரிக்க முக்கியமான காரணம். தமிழகம் முழுவதும் குடி தண்ணீர் பிரச்னை, மின் வெட்டு, பல்வேறு கட்டண உயர்வு என, அன்றாடம் மக்கள் பல பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். அந்த எதிர்ப்பு, தேர்தல் நேரங்களில் மட்டுமே, வேகமாக வெளிப்படும். அந்த எதிர்ப்பும், ஓட்டு சதவீதம் அதிகரிக்க மற்றொரு காரணம்.


இந்து ஆதரவு நிலைப்பாடு:
இப்படி எந்த காரணத்தை கவனித்தாலும், அதனால், பெரிதும் பாதிக்கப்படுவது, அ.தி.மு.க.,வே. குறிப்பாக, இந்து ஆதரவு நிலைப்பாட்டில், பா.ஜ., கூட்டணி பெறும் ஓட்டுகளில், பெரும் பகுதியை இதுவரை, அ.தி.மு.க., தரப்பு, பெற்று வந்தது. அதை அறிந்து தான், முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.க.,வுக்கு போடும் ஓட்டு பா.ஜ.,வுக்கு போடும் ஓட்டு என்ற, ஒரு நிலையை ஏற்படுத்தி வைத்திருந்தார். இதை அறிந்த, பா.ஜ., தரப்பு, ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்ததோடு, மோடி மூலமாகவும் விமர்சித்ததால், அதற்கு எதிராக ஜெயலலிதா கொதித்தெழுந்து மோடியை விமர்சித்ததும், பா.ஜ.,வுக்கு சாதகமாக அமைந்து விட்டது.


பா.ஜ., கூட்டணி வெற்றி வாகை:
இப்போது பதிவாகி இருக்கும், ஓட்டுப்பதிவின் அடிப்படையில் பார்த்தால், கோவை, ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், தென்சென்னை, ஆரணி, தர்மபுரி, விழுப்புரம், சேலம் என, 14 தொகுதிகளில், பா.ஜ., கூட்டணி வெற்றி வாகை சூட வாய்ப்பிருக்கிறது. மொத்தத்தில், இந்த தேர்தல் முடிவுகள் மூலம், தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு அடுத்த சக்தியாக, விஜயகாந்த் உருவாகி விடுவார் என, தெரிகிறது. டில்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டது உட்பட, பல தவறுகளை சமீப நாட்களில், விஜயகாந்த் செய்திருந்தாலும், பா.ஜ., கூட்டணியில் சரியான நேரத்தில் இணைந்ததன் மூலம், அந்த தவறை அவர் சரி செய்துவிட்டார். இனி, 10 ஆண்டுகளுக்கு, தமிழகத்தில், மோடி ஆதரவு மற்றும் எதிர்ப்பு என்ற, இரண்டு நிலைப்பாட்டில் தான், அரசியல் செல்லும். இவ்வாறு, அவர் கூறினார்.

Wednesday, 23 April 2014

மனசாட்சிப்படி ஓட்டளியுங்கள்


இந்திய குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டுமே, தேர்தலில் ஓட்டளிக்கும் உரிமை வழங்கப்படுகிறது. அந்த உரிமையை அனைவரும், தவறாமல் பயன்படுத்தி, லஞ்சம் வாங்காமல், யாருக்கும் பயப்படாமல், மனசாட்சிப்படி ஓட்டளிக்க வேண்டும்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார்

வேண்டுகோள் விடுத்தார்.
ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் எவ்வாறு செய்யப்பட்டு உள்ளன?
தமிழகத்தில், 24ம் தேதி, அமைதியாகவும், நேர்மையாகவும், ஓட்டுப்பதிவு நடைபெற, தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு, 23ம் தேதி கடைசி கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.அனைத்து ஓட்டுச் சாவடிகளுக்கும், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், தேவையான அளவு இருப்பு உள்ளன. ஓட்டுச் சாவடிகளில், குடிநீர், மின்சாரம், கழிப்பிடம், சாய்தள வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஓட்டுச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில், நிழல் இல்லையென்றால், ஓட்டு போட வருவோர் நிற்பதற்கு வசதியாக, 'ஷாமியானா' பந்தல் அமைத்துக் கொள்ளவும், மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கு, தனி வரிசை ஏற்படுத்தப்படும்.பாதுகாப்பு ஏற்பாடுகளும், போதிய அளவு செய்யப்பட்டு உள்ளன. எனவே, வாக்காளர்கள் அனைவரும் பயமின்றி வந்து ஓட்டுப் போடலாம். தேர்தல் பிரசாரம், 22ம் தேதி மாலை 6:00 மணியுடன் நிறைவு பெறுகிறது. அதன்பின் யாரும் பிரசாரம் செய்யக்கூடாது. அதை மீறி பிரசாரம் செய்தால், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்.

வாக்காளர்களை ஓட்டுச்சாவடிக்கு வரவழைக்க, தேர்தல் கமிஷன் சார்பில், என்னென்ன நடவடிக்கை எடுத்து உள்ளீர்கள்?

மாநில அளவிலும், மாவட்ட அளவிலும், விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், ஆகியோர் ஓட்டுப்போட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேசியது, 'சிடி'யாக தயாரிக்கப்பட்டு, கேபிள் 'டிவி'களிலும், 'டிவி'களிலும், ரேடியோக்களிலும் ஒலிபரப்பப்பட்டுள்ளன. மாவட்டம் தோறும், விழிப்புணர்வு ஊர்வலம், மனித சங்கிலி, கண்காட்சி போன்றவை நடத்தப்பட்டுள்ளன.முக்கிய இடங்களில், சுவரொட்டிகள், ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மூலம், ஓட்டுப் போட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி, மாணவ, மாணவியரைக் கொண்டு, அவர்களின் பெற்றோரிடம், மனசாட்சிப்படி ஓட்டளிப்போம் என, உறுதி வாங்கப்பட்டுள்ளது.அதேபோல் மகளிர் குழு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆகியோரை கொண்டும், பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், இந்த பணியில் ஈடுபட்டுள்ளன.

எதற்கு கண்டிப்பாக ஓட்டு போட வேண்டும் என்கிறீர்கள்?
இந்திய குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டும், ஓட்டுஉரிமை வழங்கப்படுகிறது. நாம் இந்திய குடிமகன் என்பதற்கு அத்தாட்சி, நமக்கு வழங்கப்பட்டுள்ள ஓட்டுரிமை. அதை நாம் முறையாக பயன்படுத்த வேண்டும். ஓட்டு போடுவது, ஒவ்வொருவரின் கடமை. இதை உணர்ந்து, அதை நாம் ஒழுங்காக செய்ய வேண்டும்.நமது உரிமையை, நாம் பயன்படுத்தாவிட்டால், அது வீணாகும். நமது உரிமையை பயன்படுத்த, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நல்லவர்களை தேர்வு செய்யலாம்.நீங்கள் உங்களுடைய உரிமையை பயன்படுத்தாவிட்டால், வேறு நபர்கள் முடிவு செய்பவர், ஆட்சிக்கு வருவார்.

இந்த தேர்தலில், ஓட்டு போடுவது கடமை என, பிரசாரம் செய்வதோடு, மனசாட்சிப்படி ஓட்டளியுங்கள் என, பிரசாரம் செய்ய என்ன காரணம்?
தேர்தலின்போது, தமிழகத்தில் அதிக பணப்புழக்கம் உள்ளது. வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது. இதை தடுக்க, தேர்தல் கமிஷன் சார்பில், பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளோம். எனினும், மக்கள் மனம் மாறினால் மட்டுமே, இதை முழுமையாக ஒழிக்க முடியும். மக்கள் பணம், பரிசு, மது போன்றவற்றை வாங்க மறுத்தால், கொடுப்பது நின்று விடும். எனவே, லஞ்சம் வாங்காமல், மனசாட்சிப்படி ஓட்டளியுங்கள் என, பிரசாரம் செய்கிறோம். லஞ்சம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடுவது, நமது உரிமையை விற்பதற்கு சமம். அதன்பின் வெற்றி பெற்றவரிடம், எதையும் கேட்க முடியாது. எனவே, ஓட்டை விற்காதீர் என்கிறோம். காய்கறி கடைக்கு சென்று, கத்தரிக்காய் வாங்குவதாக இருந்தால் கூட, ஒவ்வொரு காயாக எடுத்து பார்த்து, நல்லதை தேர்வு செய்கிறோம். அதை விட கூடுதல் முக்கியத்துவத்தை, நம்மை ஐந்து ஆண்டுகள் ஆளப்போகிறவர்களுக்கு தர வேண்டாமா? எனவே, அனைவரும் ஓட்டுச் சாவடிக்கு வந்து, தவறாமல் ஓட்டு போட வேண்டும்.

போட்டியிடுவோரில் நல்லவர்கள் இல்லை என்றால் என்ன செய்வது?
ஓட்டுப்போட விருப்பம் இல்லை என, வீட்டில் இருந்துவிட வேண்டாம். ஓட்டுப் போட விரும்பாதவர்களுக்காக, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் 'நோட்டா' பட்டன் இடம் பெற்றுள்ளது. அதற்கு ஓட்டு போடலாம்.

இந்த தேர்தலில், எவ்வளவு ஓட்டு சதவீதம் எதிர்பார்க்கிறீர்கள்?
எங்களை பொறுத்தவரை, 100 சதவீதம் ஓட்டுப் பதிவாக வேண்டும். கடந்த தேர்தலில், 73 சதவீதம்
ஓட்டுப்பதிவானது. இந்த முறை எவ்வளவு ஓட்டுப் பதிவா கிறது என்பதை அறிய, நாங்களும் ஆர்வமாக உள்ளோம்.

தேர்தலில் நீங்கள் எதை சவாலாக நினைக்கிறீர்கள்?
தேர்தலே சவால் தான். பணியை ஒழுங்காக செய்யும்போது, திருப்தி அளிக்கிறது. சாதாரண மக்கள் கூட, தேர்தல் கமிஷனை தொடர்பு கொண்டு, புகார் அளிக்கின்றனர். தகவல் கொடுக்கின்றனர். அவற்றின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கிறோம். ஊழியர்களும் ஒத்துழைக்கின்றனர். தேர்தல் அமைதியாக முடிந்து, அதிக ஓட்டுப்பதிவு நடக்கும்போது, முழு திருப்தி ஏற்படும்.

அரசியல் கட்சி தலைவர்கள் சிலர், உங்கள் மீது கோபமாக இருக்கின்றனரே...
அப்படி எல்லாம் இல்லை. அவர்கள் கருத்தை கூறுகின்றனர். அனைத்து தரப்பினரும் தரும் புகார் மனுக்களை பெற்று, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கிறோம்.

தேர்தலையொட்டி பொதுமக்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?
அனைவரும் தவறாமல் ஓட்டு போடுங்கள். லஞ்சம் வாங்காமல், மனசாட்சிப்படி ஓட்டளியுங்கள்.

நீங்கள் யாருக்கு ஓட்டு போட முடிவு செய்து உள்ளீர்கள்?
ஓட்டுப்பதிவு ரகசியமாக நடத்தப்படுகிறது. ரகசியத்தை வெளியில் சொல்லக்கூடாது.

லோக்சபா தேர்தல்: வேரும் விழுதுமாய் திகழும் அதிகாரிகள்:



ஜனநாயகத்திற்கு வலுசேர்க்கும் இந்தியத் தேர்தல்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. 16வது லோக்சபா தேர்தல் துவங்கிவிட்டது.இரண்டு மாதகாலம் நடைபெறும் தேர்தலில் கொளுத்தும் வெயிலிலும் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வரிசையில் நின்று ஓட்டு அளிக்கின்றனர்.கண்ணிமைக்கும் நேரத்தில் இந்தியாவின் ஜனநாயகம் விழுந்துவிடும் என்று, 67 ஆண்டு களுக்கு முன் ஆரூடம் சொன்னவர்கள் இப்போது திகைத்துப்போய் இருக்கின்றனர்.மொத்த வாக்காளர்கள், 81.5 கோடி. வாக்குச்சாவடிகள் 9.3 லட்சம். தேர்தல் பணியாளர்கள் 11 லட்சம் பேர் என்ற இந்த பிரமாண்டமான நிர்வாக நடைமுறையை உலகம் பிரமிப்போடு பார்க்கிறது.மூன்று தேர்தல் கமிஷனர்களும் இந்த நிர்வாகத்தின் வெளிப்படை முகம். ஆனால், அவர்களுக்குப் பின்புலமாக எண்ணற்ற அதிகாரிகளும், அலுவலர்களும் அமைதியாகவும், திறமையாகவும் தங்கள் கடமையைச் செய்து வருகின்றனர்.அவர்களில் சிலர் கடமையின் எல்லைக்கு அப்பாலும் சென்று, அயராது வேலை செய்கின்றனர். எனினும் நாட்டுக்காக பணி செய்யும் அவர்கள் எல்லாரையும் நாம் அறிவதற்கில்லை. அப்படிப்பட்டவர்களில் சிலரையாவது நினைவுகூர்வோமே!

நக்சலைட் பகுதிகளில்...:

இடதுசாரி பயங்கரவாதம் அதிகம் உள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில், தேர்தல் நடத்துவது, ஒரு பெரிய சவால்.பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான சரியான திட்டமிடல் மிகவும் அவசியம். சத்தீஸ்கர் சட்டப் பேரவைக்கான தேர்தல், 2008 நவம்பரில் நடைபெற்ற போது, வன்முறைக்குப் பயந்தோ, பாதுகாப்பு குறைவானது என்ற எண்ணங்களாலேயோ, சில இடங்களில் ஓட்டுச் சாவடி சென்று பணி ஆற்றாமல் ஓட்டுப்பதிவு நடைபெற்றதாக அறிக்கை தயாரிக்கப்படக் கூடும் என்று தேர்தல் ஆணையத்திற்கு தெரியவந்தது.'எங்கு என்ன நடந்தாலும் அதை மறைக்காமல் சமாளிக்காமல் அப்படியே ஆணையத்திடம் சொல்லுங்கள். போலித் தகவல்கள் கொடுக்க வேண்டாம்' என்று தேர்தல் பணியாளர்களிடம் ஆணையம் சொன்னது.சத்தீஸ்கரில் முதற்கட்ட ஓட்டுப்பதிவு, 2008, நவம்பர் 14ம் தேதி நடைபெற்றது. சில நாட்களுக்குப் பின் சில ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுப்பதிவு நடைபெறவில்லை என்றும், நடந்ததாக போலித் தகவல்கள் தரப்பட்டன என்றும் உள்ளூர் பத்திரிகைகள் எழுதின.முதலில், தொகுதியின் தேர்தல் அதிகாரி அதை மறுத்தார். ஆனால், வேறு சிலர் மூலம் தகவல்கள் பெற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், நிர்வாகம் சொன்னது உண்மை அல்ல என்று புரிந்து கொண்டு, மாநில தேர்தல் அதிகாரியான டாக்டர் அலோக் சுக்லா நேரடியாக கேஷ்கால் தொகுதிக்குச் சென்று இதுபற்றி விசாரித்து, 24 மணிநேரத்திற்குள் அறிக்கை தரவேண்டுமென்று உத்தரவிட்டது. மறுநாள் பிரச்னைக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிகளுக்கு சுக்லா புறப்பட்டார். அப்போது, 'நக்சலைட் நடமாட்டம் உள்ள அந்த கிராமங் களுக்குச் செல்வது ஆபத்து; பாதுகாப்பு அளிக்கிறேன்' என, நாராயண்பூர் காவல்துறை உயரதிகாரி சொன்னார். அரைமணி நேரம் காத்திருத்த பின்பும், பாதுகாப்பு தரப்படாத நிலையில், தேர்தல் ஆணையம் கொடுத்த கெடுவுக்குள் அறிக்கை தரவேண்டுமென்ற நிர்ப்பந்தத்தினால், பாதுகாப்பு இல்லாமலே போவதென்று முடிவு செய்தார் சுக்லா.பஸ்தர் மாவட்ட கலெக்டர் பார்ஸ்தே மற்றும் நாராயண்பூர் தாசில்தார் ஆகியோருடன் சேர்ந்து, முதலில் ஜீப்பிலும், பின் 35 கி.மீ., மோட்டார் சைக்கிளிலும் பயணப்பட்டு மூன்று கிராமங்களையும் சுற்றிப் பார்த்தார்.அங்கே வாக்குப்பதிவு நடைபெறவில்லை என்பதையும், மக்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர் என்பதையும், உறுதி செய்துகொண்டு, அதை தேர்தல் ஆணையத்திடம் சுக்லா தெரிவித்தார். பின் அங்கே மறுவாக்குப் பதிவு நடைபெற்றது.நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ள பகுதி களில், தமக்கு பாதுகாப்பு தரப்படவில்லை என்ற காரணத்தை சொல்லி, சுக்லா அங்கே போகாமல் இருந்தால், அவரை யாரும் குறை சொல்லி இருக்க முடியாது.இருந்தாலும் கடமை உணர்வு காரணமாக, துணிச்சலுடன் ஆபத்தானவை என்று சொல்லப்பட்ட பகுதிகளுக்கு சென்று, உண்மைகளை கண்டறிந்து வந்தார். அவரைப் போன்று துணிச்சலான அதிகாரிகள் பலர் உள்ளனர். அவர்களைப் பற்றி வெளியே அதிகம் தெரிவதில்லை.

முதல்வருக்கே அஞ்சாத பெண் அதிகாரி



வடக்கே ஒரு மலை மாநிலத்தில், பணியில் சேர்ந்து ஐந்து ஆண்டுகளே ஆன, தமிழகத்தை சேர்ந்த சுதாதேவி என்ற பெண் கலெக்டர் அங்கே, தேர்தல் பிரசாரம் செய்ய வந்த மாநில முதல்வரை தடுத்து நிறுத்தினார். காரணம், முதல்வர், தேர்தல் விதிமுறைகளை மீறி, அரசு வாகனங்களில் வந்தார் என்பதே.அந்த மாவட்டத்தின் இளம் காவல்துறை அதிகாரி, மாநிலத்தின் உயர் போலீஸ் அதிகாரி, முதல்வரின் தேர்தல் பிரசாரத்தில் அவர் குறுக்கிட்டதை கண்டித்த பின்னும், கலெக்டருக்கு ஆதரவாகவே செயல்பட்டார்.'தேர்தல் முடிந்து நான் பதவிக்கு மீண்டும் வருவேன். உங்களை அப்போது ஒரு கை பார்ப்பேன்' என, முதல்வர் பயமுறுத்தியும், அந்த அரட்டல் மிரட்டலுக்கெல்லாம் பயப் படாமல், அந்த இரண்டு இளம் அதிகாரிகளும், தங்கள் கடமையை செய்தனர். பாராட்டப்பட வேண்டியவர்கள்.

மனீஷாவின் தைரியம்



கடந்த, 2007ம் ஆண்டு, உ.பி., சட்டசபை தேர்தலில், மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த, மனீஷா மகிஸ்கர் என்ற பெண் அதிகாரிக்கு, தேர்தல் பார்வையாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது.அவருக்கு ஒரு சிறு குழந்தை இருந்தது. அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு, சுற்றி திரிய முடியாது என்று சொல்லி, அவர் தேர்தல் பணியிலிருந்து விலக்கு பெற்றிருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை.ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அவரது கணவருக்கும், தேர்தல் பணி கொடுக்கப்பட்டது. அதேநேரம், குழந்தையை கவனித்துக் கொள்ள, யாராவது ஒருவர் வீட்டில் இருக்க வேண்டுமே!எனினும், தனக்கும், தன் கணவருக்கும் வெவ்வேறு நாட்களில் தேர்தல் பணி அளிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்து, தன்னை கண்டிப்பாக தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனவும், ஆணையத்திடம் வேண்டினார். அதன்படியே, ஏற்பாடும் செய்யப்பட்டது.அவர் உ.பி., மாநிலத்தில் ராஜா பையா என்ற புகழ் பெற்ற, அதிக குற்றங்களை செய்தவர் வேட்பாளராக நின்ற பிரதாப்கட் மாவட்டத்தில், மனீஷா மகிஸ்கர், சிறப்பாக பணி புரிந்தார்.கடமை மாறாத அந்த அதிகாரிக்கு 'ஓ' போடலாம்! பெருமைப்படுவோம்!இந்திய தேர்தல் ஆணையம், பல பிரச்னை களுக்கு இடையே மிக சிறப்பாக பணி செய்ய முடிகிறது என்றால், அதற்கு காரணம் இத்தகைய கடமை உணர்வு கொண்ட அதிகாரிகளே.வெளி உலகுக்கு தெரியவராமல் கை தட்டுங்கள்! மலர் மாலைகள் இல்லாமல், அவர்கள் பாராட்டத்தக்க பணி செய்து வருகின்றனர். அவர்களை நினைவு கூர்ந்து பெருமைப்படுவோம்!