Saturday, 22 November 2014

நீர் கோர்த்து அவதிப்பட்டால்


நீர் கோர்த்து அவதிப்பட்டால்

தலையில் 'நீர் கோர்த்து'க் கொண்டு, அதனால் தலைப் பாரம், தலைவலியால் அவதிப்படுபவர்கள் பலர். ஆனால் பொதுவாக ஆண்களைவிட பெண்களே தலையில் நீர் கோர்த்துக் கொள்ளும் பிரச்சினையால் அதிகம் கஷ்டப்படுகின்றனர்.

இன்றைய எந்திர வாழ்க்கையில், தங்களது முகத்தை அழகுபடுத்திக்கொள்ள ஆர்வம் காட்டும் பெண்களில் சிலர், தலையை பராமரிப்பதில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை.

தலைக்குக் குளித்துவிட்டு சரியாக துவட்டாமல் இருப்பதால், அடிக்கடி நீர் கோர்த்து கொண்டு தலைவலி ஏற்படுகிறது. தலையைக் காயவைக்க குறைந்தது 5 நிமிடமாவது ஒதுக்கினால் மட்டுமே இப்பிரச்சினையைத் தவிர்க்க முடியும்.

தலையை காய வைத்ததும் நீர் கோர்த்துக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றினால் கொதிக்கும் நீரில் நுணா இலை, நொச்சி இலை, எருக்கம் இலை போட்டு ஆவி பிடிக்கலாம்.

இவ்வாறு மாதம் மூன்று முறை செய்துவர, தலையில் நீர் கோர்க்கும் பிரச்சினையில் இருந்து விடுபடலாம். தலை பாரமாக உள்ள வேளைகளில் சுக்குக் காபி, இஞ்சி டீ, சூப் போன்ற சூடான பானங்களைப் பருகலாம்.

தொடர்ந்து இந்தப் பிரச்சினை இருந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.

Thursday, 9 October 2014

குண்டா இருந்தாலும் யோகா செய்யலாம்…

குண்டா இருந்தாலும் யோகா செய்யலாம்…


Yoga-Sunset“”யோகாசனம் செய்வதெல்லாம் ரொம்ப ரொம்ப கஷ்டம்… குனிந்து நிமிர எல்லாம் என்னால் முடியாது…  எங்கேயாவது பிடித்துக் கொண்டால் என்ன செய்வது?…  இவ்வளவு குண்டாக இருந்து கொண்டு யோகாசனமாவது… செய்கிறதாவது…  வேறு ஏதாவது பேசுங்களேன்” இப்படியெல்லாம் சொல்பவரா நீங்கள்? உங்கள் கருத்தை உடனே மாற்றிக் கொள்ளுங்கள்.
“”வயதானவர்களால் யோகாசனம் செய்ய முடியும். குண்டானவர்களால் செய்ய முடியும். ஏன் கருவுற்ற பெண்களும் கூட யோகாசனம் செய்யலாம்” என்கிறார் டாக்டர் கே.கே.கனிமொழி. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியையாக பணிபுரியும் அவரிடம் பேசினோம்:
“”யோகாசனம் என்றால் ஏதோ தனியாக முயற்சியெடுத்து செய்யக் கூடியது என்று நினைக்கிறார்கள். உண்மையில் நமது அன்றாடச் செயல்கள் பல, யோகாசனங்களாகவே இருக்கின்றன. நமது குழந்தைகளைப் பாருங்கள். வஜ்ராசன நிலையில் முழங்காலை மடக்கி உட்கார்வார்கள். ஹாலாசனம், மண்டூகாசனம்  போலச் செய்து தலை கீழாகக் குட்டிக்கரணம் அடிப்பார்கள்.  இஸ்லாமியர்கள் தொழும்போது உட்காரும் நிலைதான் சசாங்காசனம்.
பலருக்கு என்ன பயம் என்றால், யோகாசனம் செய்தால் உடம்பு எங்கேயாவது பிடித்துக் கொள்ளுமோ? என்பதுதான்.
புத்தகங்களைப் படித்துவிட்டு யோகாசனம் செய்யக் கூடாது. அப்படிச் செய்து அவர்கள் பயந்தது மாதிரி பிடித்துக் கொண்டால், அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் விழிப்பார்கள். ஒரு யோகாசன ஆசிரியரிடம் யோகாசனம் கற்றுக் கொண்டால், அவர் உடல் பிடித்துக் கொண்டாலும் அதற்கு மாற்றான வேறோர் ஆசனத்தை உடனே சொல்லித் தருவார்.
யோகாசனம் என்பது வெறும் உடற் பயிற்சி மட்டுமல்ல. அது மனதையும் கட்டுப்படுத்தக் கூடியது. யோகாசனம் செய்வதால் உடல் தசைகள் வலுப்பெறுகின்றன. உடலில் உள்ள மூட்டுகளின் இறுக்கம் தளர்ந்து நெகிழ்கின்றன. நாளமில்லாச் சுரப்பிகள் ஹார்மோன்களைக் கூடுதலாகவோ, குறைவாகவோ சுரக்காமல், சரியான அளவு சுரக்கும். குறிப்பாக தைராய்டு, பிட்யூட்டரி சுரப்பிகள் சரியாக வேலை செய்யும்.
சாதாரணமாக ஒவ்வொருவரும் நிமிடத்துக்கு 16 – 18 தடவை மூச்சுவிடுவோம். யோகாசனம் செய்தால் அது 12 -14 தடவைகளாகக் குறைந்துவிடும். அதாவது, அதிக நேரம் காற்றை உள்ளிழுத்து, வெளிவிடுவோம். இதனால் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் தேவையான ஆக்சிஜன் கிடைக்கும்.
மனதை ஒருநிலைப்படுத்த யோகாசனம் உதவும்.  மூச்சு மனதையும், உடலையும் இணைக்கும். மனம் சமநிலையில் இருக்கும். கோபப்படும்போது அட்ரீனல் சுரப்பி அதிகமாகச் சுரக்கும். இதனால் உடலில் இதயத் துடிப்பு அதிகரிக்கும். வியர்க்கும். பதட்டமாக இருக்கும். யோகாசனம் செய்தால் அட்ரீனல் சுரப்பியின் செயல்பாடு ஒழுங்குபடும்.
இவ்வளவு பயன் தரக்கூடிய யோகாசனத்தைக் கண்டு பலர் பயப்படுகிறார்கள். எடுத்தவுடனே உடலை நன்றாக வளைக்கக் கூடிய யோகாசனங்களைச் செய்யக் கூடாது. செய்யவும் முடியாது. தசைகளையும், மூட்டுகளையும் நெகிழச் செய்யக் கூடிய எளிய யோகாசனப் பயிற்சிகளில் ஆரம்பித்து, படிப்படியாக வேறு கடினமான யோகாசனங்களைச் செய்ய வேண்டும்.
சிலர் யோகாசனம் செய்வதற்கெல்லாம் நேரமில்லை என்பார்கள். யோகாசனமோ, வேறு எந்த உடற்பயிற்சியையோ செய்வதற்குச் சோம்பேறித்தனமாக இருப்பவர்கள் சொல்கிற சாக்குப் போக்கு இது. நேரமில்லை என்று சொல்பவர்கள், ஒரு மூன்று நிமிடங்கள் ஒதுக்கி தோப்புக்கரணம் போட்டாலே போதும்! யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும்.
நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள். உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி.
தோப்புக்கரணம் போடும்போது  காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம். காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன. காது மடல்களைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளுக்கும் செயல்படுவதற்கான தூண்டுதல் கிடைக்கிறது. உடல் இயக்கம் சீர்படுகிறது.
தோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர், ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டை அளவுக்குக் கால்களை விரித்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும். பின்னர் பயிற்சியானவுடன் கால்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும். வலது கை விரல்களால் இடது காது மடல்களையும், இடது கை விரல்களால் வலது காது மடல்களையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழ வேண்டும். உட்காரும்போது மூச்சை உள்ளிழுக்க  வேண்டும். எழும்போது மூச்சை வெளிவிட வேண்டும். இவ்வாறு மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதால், நமது தண்டுவடத்தில் – மூலாதாரத்தில் -  சக்தி உருவாகும்.
உட்கார்ந்து எழும்போது, காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்கு வேலை கொடுக்கிறோம். உடல் முழுக்க இரத்த ஓட்டத்தை சீராக்கும்  இதயத்தின் தசைகளைப் போலவே இயங்கக் கூடியது, இந்த சோலியஸ் தசை.  இதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம்  சீராகும்.
மூன்றுநிமிடங்கள் தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து செய்தால் வேறு எந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை. ஆனால் இந்த மூன்று நிமிடங்களே பலரால் ஆரம்பத்தில் செய்ய முடியாது என்பதே உண்மை.

Saturday, 20 September 2014

ஜெயலலிதாவின் சொத்துப்பட்டியல்!



மிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வருகிற 20 ஆம் தேதியன்று வழங்கப்பட உள்ள நிலையில், இந்த வழக்கில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துப்பட்டியல் விவரம்....( பகுதி- 1 )



1. சென்னை போயஸ் தோட்டம்- கதவிலக்கம் 36 ல் பத்து கிரவுண்டு 330 சதுர அடி நிலமும், கட்டடமும்

3. ஐதராபாத் ஸ்ரீநகர் அலுவலர் காலனியில் 651.18 சதுர மீட்டர் கட்டடம்.

3. ஐதராபாத் அருகே ஜிடிமெட்லா மற்றும் பஷீராபாத் கிராமங்களில் இரண்டு பண்ணை வீடுகள், பணியாளர்களுக்கான வீடுகள், மற்றும் திராட்சை தோட்டம் (11.35 ஏக்கர்)

4. ஆந்திரப் பிரதேசம் மேச்சால் வட்டம், பஷீராபாத் கிராமத்தில் சர்வே எண்.93/3 ல் 3.15 ஏக்கர் நிலம்.

5. செய்யாறு கிராமம், சர்வே எண். 366/2, 5, 6 ல் விவசாய நிலம் 3.4 ஏக்கர் நிலம்.

6. சென்னை பட்டம்மாள் தெரு, கதவிலக்கம் 19இல் நிலமும், கட்டடமும்.

7. சென்னை, சந்தோம், அந்து தெரு, ஆர்.ஆர்.அடுக்குமாடி குடியிருப்பில், குடியிருப்பு எண் 7.

8. சென்னை, அண்ணா சாலையில், 602 ஆம் இலக்கத்தில் கடை எண். 14

9. சென்னை, நுங்கம்பாக்கம், காதர் நவாஸ்கான் சாலை, ஆர். எஸ். எண். 58/5, கதவிலக்கம் எண். 14 ல் மொத்தம் 11 கிரவுண்ட், 736 சதுர அடி நிலத்தில் பிரிக்கப்படாத பங்கு.

10. சென்னை, செயின்ட் மேரீஸ் சாலை, கதவிலக்கம் 213 - பி- இல் நிலமும் கட்டடமும். (1.206 சதுர அடி)

11. சென்னை, அண்ணா சாலை, எண் 602 இல் 180 சதுர அடி, கடை எண் 18; எண். 54/42656 இல் 17 கிரவுண்ட் பிரிவினை செய்யப்படாத நிலத்தில் பங்கு மற்றும் ஆர்.எஸ். எண். 3/10 மற்றும் 3/11 ஆகியவற்றில் மைலாப்பூர் கிராமத்தில் 1,756 சதுர அடி நிலம்.

12. தஞ்சாவூர் மானம்பூ சாவடி சர்வே எண். 1091 இல் 2,400 சதுர அடி நிலமும், கட்டடமும்.

13. தஞ்சாவூர் நகரம், 6வது வார்டு, டவுன் சர்வே எண். 1091 இல் 51 ஆயிரம் சதுர அடி காலிமனை.

14. தஞ்சாவூர் நகரம், மானம்பூ சாவடி, பிளேக் சாலையில் டவுன் சர்வே 1019 இல் 8,970 சதுர அடி காலி மனை.

15. திருச்சி, பொன்னகரம், அபிஷேகபுரம் கிராமம் டவுன் சர்வே எண். 107இல் 3,525 சதுர அடி நிலமும், கட்டடமும்.

16. தஞ்சை மாவட்டம், சுந்தரகோட்ட கிராமம், சர்வே எண். 402/2இல் 3.23 ஏக்கர் புஞ்செய் நிலம்.

17. சென்னை, கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டையில் சர்வே எண். 55, 56 இல் 5,658 சதுர அடி நிலமும், கட்டடமும்.
18. சென்னை மைலாப்பூர் கிராமம், ஆர்.எஸ். எண். 1567/1இல் ஒரு கிரவுண்ட், 1407 சதுர அடி நிலமும், கட்டடமும்.

19. மன்னார்குடி, சர்வே எண். 93, 94 மற்றும் 95 ஆகியவற்றில் மொத்தம் 25,035 சதுர அடி நிலமும், கட்டடமும்.

20. சென்னை, பரங்கிமலை கிராமம், டி.எஸ். எண். 4535இல் 4604.60 சதுர அடி மனையும், கட்டடமும் மற்றும் திரு.வி.க. தொழிற்பேட்டையில் மனை எண். எஸ். 7.

21. சென்னை, காதர் நவாஸ்கான் சாலை, கதவிலக்கம் 14இல் பிரிவினை செய்யப்படாத 11 கிரவுண்ட், 1736 சதுர அடி நிலமும், கட்டடமும் மற்றும் நுங்கம்பாக்கம் கிராமம் ஆர்.எஸ். எண். 58 மற்றும் புதிய ஆர்.எஸ். எண். 55/5இல் 523 சதுர அடி கட்டடம்.

22. செகந்தராபாத் கண்டோன்மென்ட் அஞ்சையா தோட்டம், கதவிலக்கம் எண். 16இல் 222.92 சதுர மீட்டர் நிலமும், கட்டடமும்.

23. கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை சர்வே எண். 86, 87, 88, 89, 91, 92 மற்றும் 93 ஆகியவற்றில் 12,462.172 சதுர அடி நிலமும், கட்டடமும்.

24. சென்னை, அண்ணா நகர், மனை எண். எல்.66, இளவரசிக்காக வாங்கப்பட்டது - மதிப்பு 2 லட்சத்து 35 ஆயிரத்து 813 ரூபாய்.

25. சென்னை, கிண்டி, திரு.வி.க. தொழிற் பேட்டையில் 0.63 ஏக்கர் நிலமும், 495 சதுர அடி ஆர்.சி.சி. மேற்கூரை கட்டடமும்; ஆலந்தூர் கிராமம் சர்வே எண். 89இல் 1,155 சதுர அடி ஏ.சி.சி. மேற்கூரை கட்டிடம்.

26. சென்னை, மைலாப்பூர் கிராமம், கிழக்கு அபிராமபுரம், மூன்றாவது தெரு கதவிலக்கம் 18இல் 1 கிரவுண்ட் 1475 சதுர அடி நிலமும் கட்டடமும்.

27. செய்யூர் கிராமம், சர்வே எண். 366/4 மற்றும் 366/1 ஆகியவற்றில் 4.90 ஏக்கர் புஞ்செய் நிலம்.

28. செய்யூர் கிராமம், சர்வே எண். 365/3இல் 3.30 ஏக்கர் புஞ்செய் நிலம்.

29. செய்யூர் கிராமம், சர்வே எண். 365/1இல் 1.65 ஏக்கர் புஞ்செய் நிலம்.

30. செய்யூர் கிராமம், சர்வே எண். 362/2இல் 2.25 ஏக்கர் புஞ்செய் நிலம்.

31. சென்னை 106இல் மகா சுபலெட்சுமி திருமண மண்டபம்.

32. நுங்கம்பாக்கம், காதர் நவாஸ்கான் சாலை, ஜெம்ஸ் கோர்ட் ஆர்.எஸ். எண். 58/5 இல் மொத்தம் 11 கிரவுண்ட், 1,736 சதுர அடி மனையில் 72/12000 பங்கு.

33. சென்னை ஈக்காட்டுத்தாங்கல், உள் வட்டச் சாலையில் ஆஞ்சனேயா பிரண்டர்ஸ்.

34. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198/180இல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.

35. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198/180 எப். 3இல் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.

36. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198/180 எப். 12 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.

37. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198/180 எப். 11 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.

38. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198இல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.

39. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198இல் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.

40. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198இல் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.

41. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198இல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.

42. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198இல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.

43. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198இல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.

44. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198இல் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.

45. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198இல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.

46. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198இல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.

47. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198இல் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.

48. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198இல் 41 சென்ட் புஞ்செய் நிலம்.

49. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 364இல் 63 சென்ட்புஞ்செய் நிலம்.

50. நீலாங்கரை கிராமம், மனை எண். 7இல் 4802 சதுர அடி மனையும் கட்டடமும்.

51. தியாகராய நகர், பத்மநாபா தெரு, சர்வே எண். 301 மற்றும் சில சர்வே எண்களில் உள்ள மொத்தம் 1 கிரவுண்ட் 1086 சதுர அடி மனை மற்றும் கட்டடத்தில் 1/5 பங்கு.

52. தியாகராய நகர், பத்மநாபா தெரு, சர்வே எண். 301 மற்றும் சில சர்வே எண்களில் உள்ள மொத்தம் 1 கிரவுண்ட் 1086 சதுர அடி மனை மற்றும் கட்டடத்தில் 1/5 பங்கு.

53. தியாகராய நகர், பத்மநாபா தெரு, சர்வே எண். 301 மற்றும் சில சர்வே எண்களில் உள்ள மொத்தம் 1 கிரவுண்ட் 1086 சதுர அடி மனை மற்றும் கட்டடத்தில் 1/5 பங்கு.

54. தியாகராய நகர், பத்மநாபா தெரு, சர்வே எண். 301 மற்றும் சில சர்வே எண்களில் உள்ள மொத்தம் 1 கிரவுண்ட் 1086 சதுர அடி மனை மற்றும் கட்டடத்தில் 1/5 பங்கு.

55. தியாகராய நகர், பத்மநாபா தெரு, சர்வே எண். 301 மற்றும் சில சர்வே எண்களில் உள்ள மொத்தம் 1 கிரவுண்ட் 1086 சதுர அடி மனை மற்றும் கட்டடத்தில் 1/5 பங்கு. (51 முதல் 56 வரையிலான சொத்துக்கள் வெவ்வேறு உரிமையாளர்களிடமிருந்து தனித்தனியாக பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.)

56. சிறுதாவூர் கிராமம், சர்வே எண். 392/1, 2இல் 1.50 ஏக்கர் நிலம்.

57. சர்வே எண். 346/1 பி மற்றும் சில சர்வே எண்களில் 10 ஏக்கர், 41 சென்ட் நிலம்.

58. செய்யூர் கிராமம், சர்வே எண். 364/8, 364/3, 364/9 ஆகியவற்றில் 2.02 ஏக்கர் புஞ்செய் நிலம்.

59. செய்யூர் கிராமம், சர்வே எண். 364இல் 54 சென்ட் புஞ்செய் நிலம்.

60. சிறுதாவூர் கிராமம், சர்வே எண். 345/3பி மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 11 ஏக்கர் 83 சென்ட் நிலம்.

61. கருங்குழி பள்ளம் கிராமம், சர்வே எண், 48/2 மற்றும் சிறுதாவூர் கிராமம் சர்வே எண். 383 முதல் 386 வரை மற்றும் 393 ஆகியவற்றில் மொத்தம் 11 ஏக்கர் 28 சென்ட் நிலம்.

62. சிறுதாவூர் கிராமம், சர்வே எண். 392/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 10 ஏக்கர் 86 சென்ட் நிலம்.

63. சிறுதாவூர் கிராமம், சர்வே எண். 379 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 10.7 ஏக்கர் நிலம்.

64. 10.7 ஏக்கர் நிலம் வாங்குவதற்கு பத்திரப் பதிவில் குறிப்பிடப்பட்ட தொகைக்கு மேலும் அதிகத் தொகை செலுத்தப்பட்டது.

65. சிறுதாவூர் கிராமம், சர்வே எண். 339/1 ஏ மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 7 ஏக்கர் 44 சென்ட் நிலம்.

66. சென்னை டி.டி.கே. சாலை, கதவிலக்கம் 149இல் 2 கிரவுண்ட் மற்றும் 1230 சதுர அடி நிலமும் கட்டிடமும்.

67. சென்னை, டி.டி.கே. சாலை, ஸ்ரீராம் நகர், சர்வே எண். 3705இல் பகுதி.

68. ஈஞ்சம்பாக்கம் சர்வே எண். 18/4 ஏ 1இல் 1.29 ஏக்கர் நிலம்.

69. சோளிங்கநல்லூர் கிராமம், சர்வே எண். 1/17இல் 16.75 சென்ட் நிலம்.

70. சென்னை, அடையார், கதவிலக்கம் எண்.189இல் 6.75 சென்ட் மனை.

71. சென்னை, அடையார், கதவிலக்கம் எண்.189இல் 16.50 சென்ட் மனை.

72. 5,30,400 ரூபாய்க்கு டிமான்ட் டிராப்டாகவும், 3.35 லட்சம் ரூபாய் ரொக்கமாகவும் திருமதி காயத்ரி சந்திரன் என்பவருக்குச் செலுத்தப்பட்டது.

73. சோளிங்கநல்லூர் ஆர்.எஸ்.ஓ. எண். 1/1 எப் மற்றும் 1/104 ஆகியவற்றில் 16.75 சென்ட் மனை.

74. 2,35,200 ரூபாய்க்கு டிமான்ட் டிராப்டாகவும், 3.35 லட்சம் ரூபாய் ரொக்கமாகவும் கே.டி. சந்திரவதனன் என்பவருக்குக் கொடுக்கப்பட்டது.

75. நுங்கம்பாக்கம் கிராமம், வாலஸ் தோட்டத்தில், சர்வே எண். 61/1 மற்றும் சில சர்வே எண்களில் பிரிக்கப்படாத பங்காக 6 கிரவுண்ட் 1087 சதுர அடி மனையில் 581 சதுர அடி மனை.

76. நுங்கம்பாக்கம் கிராமம், வாலஸ் தோட்டத்தில், சர்வே எண். 61/1 மற்றும் சில சர்வே எண்களில் பிரிக்கப்படாத பங்காக 6 கிரவுண்ட் 1087 சதுர அடி மனையில் 581 சதுர அடி மனை.

77. நுங்கம்பாக்கம் கிராமம், வாலஸ் தோட்டத்தில், சர்வே எண். 61/1 மற்றும் சில சர்வே எண்களில் பிரிக்கப்படாத பங்காக 6 கிரவுண்ட் 1087 சதுர அடி மனையில் 581 சதுர அடி மனை.

78. நுங்கம்பாக்கம் கிராமம், வாலஸ் தோட்டத்தில், சர்வே எண். 61/1 மற்றும் சில சர்வே எண்களில் பிரிக்கப்படாத பங்காக 6 கிரவுண்ட் 1087 சதுர அடி மனையில் 581 சதுர அடி மனை. (75 முதல் 78 வரை தனித்தனி யாகப் பத்திரப் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன)

79. சிறுதாவூர் கிராமம், சர்வே எண். 403/3 மற்றும் 401/2 ஆகியவற்றில் 3.30 ஏக்கர் நிலம்.

80. வெட்டுவாங்கேணி கிராமம் சர்வே எண். 165/88இல் 34 சென்ட் நிலம்.

81. வெட்டுவாங்கேணி கிராமம் சர்வே எண். 165/7 பி.யில் 34 சென்ட் நிலம்.

82. வெட்டுவாங்கேணி கிராமம் சர்வே எண். 165/9 ஏ இல் 34 சென்ட் நிலம்.

83. சென்னை, மைலாப்பூர், லஸ் சர்ச் சாலையில் கதவிலக்கம் 98/99இல் மொத்தம் உள்ள 10 கிரவுண்ட் 640 சதுர அடியில் பிரிக்கப்படாத பங்காக 880/72000

84. தியாகராய நகர் கிராமம், சர்வே எண். 5202இல் 4,800 சதுர அடி மனையும் கட்டிடமும்.

85. சோளிங்கநல்லூர் கிராமம், சர்வே எண். 1/105இல் 5 கிரவுண்ட் மனை மற்றும் மனை எண்கள் 40,41 ஆகியவற்றில் 900 சதுர அடி மனையும், கட்டடமும்.

86. சேரகுளம் கிராமம், சர்வே எண். 436/6 மற்றும் பல சர்வே எண்களிலும் வல்லகுளம் கிராமம், சர்வே எண். 188/3 மற்றும் 221/1 ஆகியவற்றிலும் மொத்தம் 53 ஏக்கர் 66 சென்ட் நிலம்.

87. கருங்குழி பள்ளம் கிராமம், சர்வே எண். 43/2இல் 3 ஏக்கர் 51 சென்ட் நிலம்.

88. கருங்குழி பள்ளம் கிராமம், சர்வே எண். 46இல் 4 ஏக்கர் 52 சென்ட் நிலம்.

89. கருங்குழி பள்ளம் கிராமம், சர்வே எண். 45இல் 4 ஏக்கர் 15 சென்ட் நிலம்.

90. கருங்குழி பள்ளம் கிராமத்தில் 4 ஏக்கர் 15 சென்ட் நிலம்.

91. திருவேங்கடநகர் காலனி சர்வே எண். 588/2 ஏ, 2 பி ஆகியவற்றில் 4380 சதுர அடி மனை, 520 அடி வீடும் சேர்த்து.

92. திருவேங்கடநகர் காலனி சர்வே எண். 588/2 ஏ, 2 பி ஆகியவற்றில் 4380 சதுர அடி மனை, 520 அடி வீடும் சேர்த்து. (பத்திரத்தில் குறிப்பிட்டதைக் காட்டிலும் அதிகமாக பணம் செலுத்தப்பட்டது).

93. வெட்டுவாங்கேணி & ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் சர்வே எண். 165/9 பி.யில் 37 சென்ட் நிலம்.

94. சென்னை, டி.டி.கே. சாலை, கதவிலக்கம் 150இல் 2 கிரவுண்ட் 733 சதுர அடி நிலமும், கட்டடமும்.

95. பையனூர் கிராமம், சர்வே எண். 392/6 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 5.80 ஏக்கர் நிலம்.

96. பையனூர் கிராமம், சர்வே எண். 391/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 3.52 ஏக்கர் நிலம்.

97. பையனூர் கிராமம், சர்வே எண். 384/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 5.28 ஏக்கர் நிலம்.

98. பையனூர் கிராமம், சர்வே எண். 383இல்  40 சென்ட் நிலம்.

99. பையனூர் கிராமம், சர்வே எண். 383இல்  40 சென்ட் நிலம்.

100. பையனூர் கிராமம், சர்வே எண். 403/1இல் 2.76 ஏக்கர் நிலம்.

101. பையனூர் கிராமம், சர்வே எண். 379/2இல் மற்றும் 379/3 ஆகியவற்றில் 4.23 ஏக்கர் நிலம்.

102. பையனூர் கிராமம், சர்வே எண். 381/9 மற்றும் 392/2 ஆகியவற்றில் 51 சென்ட் நிலம்.

103. அரும்பாக்கம் கிராமம், டவுன் சர்வே எண். 115/பி மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 3,197 சதுர அடி மனை.

104. ஊரூர் கிராமம், பரமேஸ்வரி நகர், டவுன் சர்வே எண். 2 மற்றும் 18இல் 4,565 சதுர அடி மனையும் கட்டடமும்.

105. சேரகுளம் கிராமம், சர்வே எண். 471 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 73 ஏக்கர் 90 சென்ட் நிலம்.

106. சேரகுளம் கிராமம், 406/2 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 69.78 ஏக்கர் நிலம்.

107. சேரகுளம் கிராமம், சர்வே எண். 486 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 60 ஏக்கர், 65.5 சென்ட் நிலம்.

108. மீர்க்குளம் கிராமம், சர்வே எண். 823/9 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 42.31 ஏக்கர் நிலம்.

109. வல்லகுளம் கிராமம், சர்வே எண். 221/4 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 34 ஏக்கர் 81.5 சென்ட் நிலம்.

110. சோளிங்கநல்லூர் கிராமம் சர்வே எண். 2/1பி, 3 ஏ ஆகியவற்றில் 50 சென்ட் நிலம்.

111. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 701/2 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 12.70 ஏக்கர் நிலம்.

112. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 685 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 14.42 ஏக்கர் நிலம்.

113. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 136/1 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 8.6 ஏக்கர் நிலம்.

114. கலவை கிராமம், சர்வே எண். 386/2 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 6.98 ஏக்கர் நிலம்.

115. வல்லகுளம் கிராமம், சர்வே எண். 682/6 மற்றும் 203/6 ஆகியவற்றில் 55 ஏக்கர் நிலம்.

116. வல்லகுளம் கிராமம், சர்வே எண். 224/4பி, மற்றும் 204/2 ஆகியவற்றில் 57.01 ஏக்கர் நிலம்.

117. வல்லகுளம் கிராமம், சர்வே எண். 221/3 மற்றும் 217/8 ஆகியவற்றில் மொத்தம் 89.62 ஏக்கர் நிலம்.

118. சேரகுளம் கிராமம், சர்வே எண். 470/3 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 80.95 ஏக்கர் நிலம்.

119. சேரகுளம் கிராமம், சர்வே எண். 262/10 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 71.57 ஏக்கர் நிலம்.

120. மீர்க்குளம் கிராமம், சர்வே எண். 374/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 68.09 ஏக்கர் நிலம்.

121. மீர்க்குளம் கிராமம், சர்வே எண். 832/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 78.09 ஏக்கர் நிலம்.

122. சென்னை, தியாகராய நகர், 68 அபிபுல்லா சாலை, சர்வே எண். 6794இல் 4,293 சதுர அடி மனையும், கட்டடமும்.

123. சென்னை, தியாகராய நகர், 68 அபிபுல்லா சாலை, சர்வே எண். 6794இல் 3,472 சதுர அடி மனையும், கட்டடமும்.

124. சேரகுளம் கிராமம், சர்வே எண். 252 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 48.95 ஏக்கர் நிலம்.

125. வல்லகுளம் கிராமம், சர்வே எண். 62 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 54.98 ஏக்கர் நிலம்.

126. மீர்க்குளம் கிராமம், சர்வே எண். 830/5 மற்றும் பல சர்வே எண்களில்; சேரக் குளம் கிராமம், சர்வே எண். 130,823/9 ஆகியவற்றில் மொத்தம் 62.65 ஏக்கர் நிலம்.

127. வண்டாம்பாளை கிராமத்தில், ராமராஜ் ஆக்ரோ மில்லுக்கு சொந்தமான 6 லட்சத்து 14 ஆயிரம் பங்குகளை காந்தி மற்றும் பலரிடம் இருந்து வாங்கியது.

128. வண்டாம்பாளை கிராமத்தில், சர்வே எண். 79இல் 3.11 ஏக்கர் நிலம்.

129. வண்டாம்பாளை கிராமம், சர்வே எண். 80, 88/1 ஆகியவற்றில் 4.44 ஏக்கர் நிலம்.

130. கீழக்கவத்துக்குடி கிராமம் சர்வே எண். 81/1, 2 ஆகியவற்றில் 1.31 ஏக்கர் நிலம்; வண்டாம்பாளையம் கிராமம் சர்வே எண். 84/1இல் 5.19 ஏக்கர் நிலம்.

131. வண்டாம்பாளை கிராமம், மற்றும் கீழக்கவத்துக்குடி கிராமம் ஆகியவற்றில் சர்வே எண். 77/1 பி மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 8.91 ஏக்கர் நிலம்.

132. வண்டாம்பாளை கிராமம் சர்வே எண். 81/4இல் 3.84 ஏக்கர் நிலம்.

133. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 597/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 6 ஏக்கர் நிலம்.

134. மெடோ ஆக்டோ பார்ம்ஸ் பெயரில் சர்வே எண் 650/1 மற்றும் சில சர்வே எண்களில் 11.66 ஏக்கர் நிலம்.

135. வண்டாம்பாளை கிராமம், சர்வே எண். 78/1 மற்றும் சில சர்வே எண்களில் 8.10 ஏக்கர் நிலம்.

136. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 596/6 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 9.65 ஏக்கர் நிலம்.

137. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 336/12 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 10.29 ஏக்கர் நிலம்.

138. சேரகுளம் கிராமம், சர்வே எண் 260/5 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 16.51 ஏக்கர் நிலம்.

139. வெள்ளகுளம் கிராமம், சர்வே எண். 199/4 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 30.75 ஏக்கர் நிலம்.

140. மீர்க்குளம் கிராமம், சர்வே எண். 385/3 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 51.40 ஏக்கர் நிலம்.

141. மீர்க்குளம் கிராமம், சர்வே எண். 535/20 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 59.82 ஏக்கர் நிலம்.

142. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 351/7 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 8.32 ஏக்கர் நிலம்.

143. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 334/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 8.65 ஏக்கர் நிலம்.

144. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 612/2 ஏ 2இல் மொத்தம் 1.08 ஏக்கர் நிலம்.

145. நிலம் வாங்கியதற்காக சிப்காட் நிறுவனத்திற்கு 23.11.1995 அன்று 7 லட்சத்து 23 ஆயிரத்து 806 ரூபாய்; 20&1&1996 அன்ரு 3 இலட்சத்து 57 ஆயிரம் ரூபாய்; 6&4&1996 அன்று 4 லட்சம் ரூபாய், ராமராஜ் ஆக்ரோ மில் நிறுவனத்தால் கொடுக்கப்பட்டது.

146. வண்டாம்பாளை ராமராஜ் ஆக்ரோ மில்ஸ் வளாகத்தில் வேலை செய்பவர்களுக்காக வீடுகள் கட்டிய வகையில் செலவு செய்யப்பட்ட தொகை 57 இலட்சத்து 19 ஆயிரத்து 800 ரூபாய்.

147. வண்டாம்பாளை ராமராஜ் ஆக்ரோ மில்ஸ் வளாகத்தில் நிர்வாக இயக்குனருக்காக மாளிகை மற்றும் அலுவலகத்தில் பணியாற்றியவர்களுக்காக வீடுகள் கட்டியதற்காக செலவு செய்யப்பட்ட தொகை 83 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய்.

148. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 612/2 ஏ 1இல் மொத்தம் 1.08 ஏக்கர் நிலம்.

149. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 612/1 இல் மொத்தம் 1.08 ஏக்கர் நிலம்.

150. லெக்ஸ் பிராபர்டீஸ் நிறுவனத்திற்காக பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட தொகைக்கு மேல் செலுத்தப்பட்ட தொகை பத்து லட்சம் ரூபாய்.

151 ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 611/2இல் மொத்தம் 11.25 ஏக்கர் நிலம்.

152. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 577/ மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 6.40 ஏக்கர் நிலம்.

153. சென்னை லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ-இல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (சுதாகரன் பெயரில்)

154. சென்னை லஸ் அவென்யூ சர்வே எண். 334/1ஏ-இல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (இளவரசி பெயரில்)

155. சென்னை லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ-இல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (சசிகலா பெயரில்)

156. சென்னை லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ-இல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (ஜெ.எஸ்., வீட்டு வசதி வளர்ச்சி நிறுவனத்தின் பெயரில்)

157. சென்னை லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ-இல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் பெயரில்)

158. சென்னை லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ-இல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (ஜெயா காண்ட்ராக்டர்ஸ் அண்ட் பில்டர்ஸ் பெயரில்)

159. லஸ் அவென்யூ, சொத்து வாங்குவதற்காக செலவிடப்பட்டது 76 லட்சம் ரூபாய்.

160. நீலாங்கரை கிராமம், சர்வே எண். 74/1இல் 11 சென்ட் நிலமும், கட்டடமும்.

161. நீலாங்கரை கிராமம், சர்வே எண். 74/1இல் 11 சென்ட் நிலமும், கட்டடமும்.

162. அரும்பாக்கம் கிராமம், டவுன் சர்வே எண். 115/ பகுதி மற்றும் இரண்டு சர்வே எண்களில் மொத்தம் 3,197 சதுர அடி மனை.

163. தஞ்சாவூர் வ.உ.சி. நகர், டவுன் சர்வே எண். 3077 மற்றும் 3079 இல் 26,540 சதுர அடி மனை மற்றும் கட்டடம்.

164. ஊத்துக்காடு கிராமத்தில் சர்வே எண். 239/9 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 7 ஏக்கர் 11.5 சென்ட் நிலம்.

165. ஊத்துக்காடு கிராமத்தில் சர்வே எண். 591/2 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 15.71 ஏக்கர் நிலம்.

166. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 900 ஏக்கர் கொடநாடு டீ எஸ்டேட் மற்றும் டீ பேக்டரி.

167. ஊத்துக்காடு கிராமத்தில் சர்வே எண். 324 மற்றும் சில சர்வே எண்களில் 9.50 ஏக்கர் நிலம்.

168. வேலகாபுரம் கிராமத்தில் சர்வே எண். 198/180 எப். இல் 210.33 ஏக்கர் நிலம்.

169. வேலகாபுரம் கிராமத்தில் சர்வே எண். 198/180 எப். டி. மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 20.89 ஏக்கர் நிலம்.

170. பையனூர் கிராமத்தில் சர்வே எண். 385/12 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 2.03 ஏக்கர் நிலம்.

171. பையனூர் கிராமத்தில் சர்வே எண். 385/7 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 2.34 ஏக்கர் நிலம்.

172. பையனூர் கிராமத்தில் சர்வே எண். 386/15 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 90 சென்ட் நிலம்.

173. கடலூரில் இண்டி-டோஹா கெமிகல்ஸ் அண்ட் பார்மசூடிகல்ஸ் நிறுவனத்தை வாங்கிய வகையில் செலவு செய்த தொகை 86 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய்.

174. சென்னை, நீலாங்கரை, ராஜா நகரில் கதவிலக்கம் 4/130 இல் கூடுதல் கட்டடம் கட்டிய வகையில் செலவு செய்த தொகை 80 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்.

175. சென்னை, நீலாங்கரை கிராமம் சர்வே எண். 94இல் 11 ஆயிரத்து 197 சதுர அடி நிலம்.

176. பையனூர் பங்களாவில் கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில் செலவு செய்த தொகை 1 கோடியே 25 லட்சத்து 90 ஆயிரத்து 261 ரூபாய்.

177. சென்னை, கிண்டி, ஈக்காட்டுத் தாங்கல், ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் நிறுவனத்திற்காக புதிய மற்றும் கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில் செலவு செய்த தொகை 2 கோடியே 13 லட்சத்து 63 ஆயிரத்து 457 ரூபாய்.

178. சென்னை வெட்டுவாங்கேணி கதவிலக்கம் 3/178 சி இல் உள்ள குடியிருப்புக்கு புதிய மற்றும் கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில் 1 கோடியே 52 லட்சத்து 59 ஆயிரத்து 76 ரூபாய்.

179. ஆந்திரப் பிரதேசம், ஜிடிமெட்லா எல்லைக் குட்பட்ட பண்ணை வீட்டில் உள்ள திராட்சைத் தோட்டத்தில் புதிய மற்றும் கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில் 6 கோடியே 40 லட்சத்து 33 ஆயிரத்து 901 ரூபாய்.

180. சிறுதாவூர் கிராமத்தில் உள்ள ஆடம்பர பங்களாவில் புதிய மற்றும் கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் செலவு செய்த தொகை 5 கோடியே 40 லட்சத்து 52 ஆயிரத்து 298 ரூபாய்.

181. சென்னை போயஸ் கார்டன் கதவிலக்கம் 36இல் உள்ள வீட்டுக்கு புதிய மற்றும் கூடுதல் கட்டிடம் எழுப்பிய வகையில் செலவு செய்த தொகை 7 கோடியே 24 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய்.

182. சென்னை, டி.டி.கே. சாலை எண். 149 மற்றும் எண். 150இல் உள்ள கட்டடத்திற்கு புதிய மற்றும் கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 29 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய்.

183. சென்னை, சோளிங்கநல்லூர், எண். 2/1இல் உள்ள பி.3 அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 80 லட்சத்து 36 ஆயிரத்து 868 ரூபாய்.

184. சென்னை மைலாப்பூர், பட்டம்மாள் தெரு கதவிலக்கம் எண். 19இல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 8 லட்சம் ரூபாய்.

185. சென்னை தியாகராயநகர் பத்மநாபா தெருவில் கதவிலக்கம் 21இல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 20 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்.

186. சென்னை அண்ணாநகர் எண் எல்./66இல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 24 லட்சத்து 83 ஆயிரத்து 759 ரூபாய்.

187. சென்னை தியாகராயநகர், முருகேசன் தெரு, கதவிலக்கம் 5இல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 10 லட்சத்து 92 ஆயிரத்து 828 ரூபாய்.

188. புதிய மாமல்லபுரம் சாலை, ஈஞ்சம்பாக்கத்தில் எண். 1/240இல் உள்ள வளாகத்திற்கு கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில் 53 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்.

189. சென்னை, அக்கறை, மர்பி தெரு எண் 1இல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 20 லட்சத்து 38 ஆயிரத்து 959 ரூபாய்.

190. சென்னை கிண்டி, திரு.வி.க. தொழில் பேட்டை, கணபதி காலனி, சர்வே எண். 32.2.4இல் மனை எண். எஸ்7இல் கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 39 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய்.

191. சென்னை, கிண்டி, பணிமனை எம்.எப்.-9இல் கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 14 லட்சத்து 17 ஆயிரம் 538 ரூபாய்.

192. வ.உ.சி. மாவட்டம், சேரன்குளம் கிராமம், சர்வே எண். 466, 461/1 மற்றும் 467/2 ஆகியவற்றில் கட்டிடம், கிணறு, மின் இணைப்பு ஆகியவற்றுக்காக செலவு செய்த தொகை 7 லட்சத்து 58 ஆயிரத்து 160 ரூபாய்.

193. இளவரசியின் மகன் மாஸ்டர் விவேக் பெயரில் 12.9.1994 அன்று அபிராமபுரம் இந்திய வங்கிக் கிளையில் தொடங்கப்பட்ட சேமிப்பு வங்கிக் கணக்கு எண். 4110இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 2 லட்சத்து 42 ஆயிரத்து 211 ரூபாய் 50 பைசா.

194. ஜெ.இளவரசி பெயரில் அபிராமபுரம், இந்திய வங்கி கிளையில், 23.11.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 167 ரூபாய் 20 பைசா.

195. என்.சசிகலா பெயரில் அபிராமபுரம், இந்தியன் வங்கிக் கிளையில், 11.3.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 771 ரூபாய் 26 பைசா.

196. ஜெ.இளவரசி பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 31.8.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 85 ஆயிரத்து 342 ரூபாய் 25 பைசா.

 
197. சுதாகரன் பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 30.8.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து 32 ஆயிரத்து 221 ரூபாய்.

198. செல்வி ஜெயலலிதா பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 12.10.1990 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 19 லட்சத்து 29 ஆயிரத்து 561 ரூபாய் 58 பைசா.

199. ஜெ. இளவரசி பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 28.3.1995 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 3 லட்சத்து 40 ஆயிரத்து 527 ரூபாய் 95 பைசா.

200. செல்வி. ஜெயலலிதா பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 16.4.1991 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து 70 ஆயிரத்து 570 ரூபாய் 13 பைசா.
மிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வருகிற 20 ஆம் தேதியன்று வழங்கப்பட உள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துப்பட்டியல் விவரம்.... ( பகுதி - 2 )

201 சசிகலா பங்குதாரராக உள்ள மெட்டல்கிங் நிறுவனத்தின் பெயரில் மைலாப்பூரில் 10.11.1993 அன்று தொடங்கப்பட்ட கணக்கில், 30.4.1996 அன்று ரொக்க இருப்பு, 2,900 ரூபாய் 28 பைசா.

202. சசிகலா பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 1.12.1992 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1,889 ரூபாய் 28 பைசா.

203. செல்வி. ஜெயலலிதாவும், சசிகலாவும் பங்குதாரர்களாக உள்ள ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் 26.9.1990 அன்று கெல்லீஸ் கிளையில் இருந்து மைலாப்பூர் கிளைக்கு மாற்றப்பட்ட கணக்கு எண். 2047இல் 30.4.1996 அன்ரு ரொக்க இருப்பு 20 லட்சத்து 79 ஆயிரத்து 885 ரூபாய் 12 பைசா.

204. சசிகலா பெயரில் 23.5.1998 அன்று மைலாப்பூர் வங்கியில் தொடங்கப்பட்ட கணக்கு எண். 23218இல் 30.4.1997 அன்று ரொக்க இருப்பு 1095 ரூபாய் 60 பைசா.

205. சசிகலா பெயரில் 2.1.1995 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண் 1245இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 3 லட்சத்து 17 ஆயிரத்து 242 ரூபாய் 21 பைசா.

206. சுதாகரன் பெயரில் 7.4.1993 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 2220இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 47 ஆயிரத்து 453 ரூபாய் 64 பைசா.

207. சுதாகரன் பெயரில் 1.12.1993 அன்று அண்ணா நகர், கிழக்குக் கிளையில் தொடங்கப்பட்ட கணக்கு எண். 1689இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 3 லட்சத்து 17 ஆயிரத்து 475 ரூபாய் 64 பைசா.

208. சுதாகரன் பெயரில் 25.2.1992 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 24621இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 61 ஆயிரத்து 430 ரூபாய்.

209. ஜெயா பைனான்ஸ் பெயரில் 5&5&1995 அன்று அபிராமபுரம் இந்தியன் வங்கிக் கிளையில் தொடங்கப்பட்ட கணக்கு எண். 1179 இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1, 760 ரூபாய்.

210. இளவரசி பெயரில் 7.4.1993 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 2219இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து 18 ஆயிரத்து 198 ரூபாய்.

211. இளவரசி பெயரில் 23.1.1993 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 25389இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 894 ரூபாய்.

212. சசிகலா பெயரில் 3.2.1992 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 2133இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 560 ரூபாய் 55 பைசா.

213. சசிகலா மற்றும் சுதாகரன் ஆகியோர் பெயர்களில் 29.7.1993 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 2250இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 10 லட்சத்து 75 ஆயிரத்து 335 ரூபாய் 64 பைசா.

214. செல்வி ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் பெயர்களில் 21.3.1991 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 2061இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 4 லட்சத்து 59 ஆயிரத்து 976 ரூபாய் 22 பைசா.

215. ஜெய் ரியல் எஸ்டேட் பெயரில் 27.1.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1050இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 167 ரூபாய் 55 பைசா.

216. சசிகலா மற்றும் சுதாகரன் பெயர்களில் 25.1.1995 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1152இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 5 லட்சத்து 46 ஆயிரத்து 577 ரூபாய் 50 பைசா.

217. சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெயர்களில் 27.1.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1059 இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு ஆயிரத்து 838 ரூபாய்.

218. சசிகலா, இளவரசி, சுதாகரன் மற்றும் ஜெ.எஸ். ஹவுசிங் கார்பரேஷன் பெயர்களில் 27.1.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1062இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 13 ஆயிரத்து 671 ரூபாய் 80 பைசா.

219. சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் பெயர்களில் 27.1.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1058இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 146 ரூபாய் 70 பைசா.

220. சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி பெயர்களில் 27.1.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1049இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 146 ரூபாய் 10,891.

221. ஜெயலலிதா மற்றும் சசிகலா பெயர்களில் 15.12.1993 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1044இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து 2 ஆயிரத்து 490 ரூபாய்.

222. சுதாகரன், இளவரசி மற்றும் சசிகலா ஆகியோர் பெயரில் 23.3.1995 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1149இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து 2 ஆயிரத்து 490 ரூபாய்.

223. சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் பெயரில் 23.3.1995 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1146இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து 2 ஆயிரத்து 490 ரூபாய் 10 பைசா.

224. சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் பெயரில் 3.3.1995 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1140இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து 2 ஆயிரத்து 490 ரூபாய் 18 பைசா.

225. சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் பெயரில் 13&9&1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1113இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 358 ரூபாய் 70 பைசா.

226. இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெயரில் 6.8.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1095இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 2,916 ரூபாய் 61 பைசா.

227. செல்வி ஜெயலலிதா பெயரில் 28.2.1990 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 5158இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 2 இலட்சத்து 5 ஆயிரத்து 152 ரூபாய் 6 பைசா.

228. செல்வி ஜெயலலிதா பெயரில் 19.5.1995 அன்று செகந்தராபாத்தில் தொடங்கப்பட்ட கணக்கு எண். 20614இல் 30.4.1989 அன்று ரொக்க இருப்பு 3 லட்சத்து 84 ஆயிரத்து 760 ரூபாய் 67 பைசா.

229. சசிகலா பெயரில் 29.1.1993 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 23792இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 2 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய்.

230. செல்வி ஜெயலலிதா பெயரில் டாட்டா-சீரா கார் எண். டி.என். 01-எப்-0099 மதிப்பு 4 லட்சத்து 1 ஆயிரத்து 131 ரூபாய்.

231. செல்வி ஜெயலலிதா பெயரில் மாருதி 800 கார் எண். டி.எம்.ஏ 2466 மதிப்பு 60 ஆயிரத்து 435 ரூபாய்.

232. செல்வி ஜெயலலிதா பெயரில் மாருதி ஜிப்சி கார் எண். டி.என். 09 பி. 4171 மதிப்பு 2 லட்சத்து 3 ஆயிரத்து 424 ரூபாய் 54 பைசா.

233. செல்வி ஜெயலலிதா பெயரில் டிராக்ஸ் ஜீப் எண். டி.எஸ்.ஜெ. 7299 மதிப்பு 1 லட்சத்து 4 ஆயிரத்து ரூபாய்.

234. ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் டாட்டா-எஸ்டேட் கார் எண் டி.என்.01-எப்-0009 மதிப்பு 4 லட்சத்து 6 ஆயிரத்து 106 ரூபாய்.

235. செல்வி ஜெயலலிதா பெயரில் ஸ்வராஜ் மஸ்தா வேன் எண். டி.எஸ்.ஜெ. 9090 மதிப்பு 1 லட்சத்து 76 ஆயிரத்து 172 ரூபாய் 67 பைசா.

236. ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் ஸ்வராஜ் மஸ்தா வேன் எண். டி.என். 01-எச்-9999 மதிப்பு 3 இலட்சத்து 85 ஆயிரத்து 520 ரூபாய்.

237. செல்வி ஜெயலலிதா பெயரில் கண்டசா கார் எண். டி.என். 09-0033 மதிப்பு 2 லட்சத்து 56 ஆயிரத்து 238 ரூபாய்.

238. ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் டாட்டா - மொபைல் வேன் எண். டி.என்.01.க்யூ.0099 மதிப்பு 2 லட்சத்து 81 ஆயிரத்து 169 ரூபாய்.

239. ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் மகேந்திரா அர்மடா சீப் எண். டி.என்.04.ஈ 0099 - மதிப்பு 5 லட்சத்து 30 ஆயிரத்து 250 ரூபாய்.

240. செல்வி ஜெயலலிதா பெயரில் டிராக்ஸ் ஜீப் எண். டி.எஸ்.ஜெ. 7200 -  மதிப்பு 1 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்.

241. சசிகலா பெயரில் டாட்டா-சீரா கார் எண். டி.என். 04.எப்.9090 - மதிப்பு 3 லட்சத்து 80 ஆயிரத்து 376 ரூபாய்.

242. செல்வி ஜெயலலிதா பெயரில் ஸ்வராஜ் மஸ்தா வேன் எண். டி.எஸ்.ஆர். 333 மதிப்பு 4 லட்சத்து 1 ஆயிரத்து 131 ரூபாய்.

243. சசிகலா பெயரில் டாட்டா - சீரா கார் எண். டி.என். 09 எச் 3559 - மதிப்பு 5 லட்சத்து 11 ஆயிரத்து 118 ரூபாய்.

244. சசிகலா பெயரில் டாட்டா - சீரா கார் எண். டி.என். 09 எச் 3496 - மதிப்பு 5 லட்சத்து 11 ஆயிரத்து 118 ரூபாய்.

245. சசி எண்டர்பிரைசஸ் பெயரில் டெம்போ - டிராவலர் எண். டி.என். 01 எச் 1233 - மதிப்பு 4 லட்சத்து 24 ஆயிரத்து 268 ரூபாய்.

246. சசி எண்டர்பிரைசஸ் பெயரில் டாட்டா - சுமோ எண்.டி.என். 07 எச் 0009 - மதிப்பு 3 லட்சத்து 15 ஆயிரத்து 537 ரூபாய்.

247. சசி எண்டர்பிரைசஸ் பெயரில் மாருதி எஸ்டீம் கார் எண்.டி.என். 09 எப் 9207 - மதிப்பு 5 லட்சத்து 25 ஆயிரத்து 132 ரூபாய்.

248. சுதாகரன் பெயரில் அசோக் லேலண்ட் கார்கோ வாகனம் எண்.டி.என். 09 எப் 9027 - மதிப்பு 5 லட்சத்து 5 ஆயிரத்து 9 ரூபாய்.

249. சுதாகரன் பெயரில் டிராக்ஸ் ஜீப் எண். டி.என். 09 எப் 3744 - மதிப்பு 2 லட்சத்து 96 ஆயிரத்து 191 ரூபாய் 28 பைசா.

250. ‘‘நமது எம்.ஜி.ஆர்.’’ பெயரில் பஜாஜ் டெலிவரி வேன் எண். டி.என். 07 டி 2342 - மதிப்பு 52 ஆயிரத்து 271 ரூபாய்.

251. ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் பெயரில் சுவராஜ் மஸ்தா வேன் எண். டி.என். 09 எச் 3541 - மதிப்பு 5 லட்சத்து 56 ஆயிரத்து 999 ரூபாய் 99 பைசா.

252. ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் பெயரில் சுவராஜ் மஸ்தா வேன் எண். டி.என். 09 எச் 3595 - மதிப்பு 5 லட்சத்து 56 ஆயிரத்து 999 ரூபாய் 99 பைசா.

253. மெட்டல் கிங் பெயரில் மாருதி கார் எண். டி.என். 09 எப் 9036 -  மதிப்பு 2 லட்சத்து 22 ஆயிரத்து 485 ரூபாய் 19 பைசா.

254. அ.தி.மு.க. தலைமை அலுவலகம், செல்வி ஜெயலலிதா மற்றும் மெட்டல் கிங் பெயரில் பஜாஜ் டெம்போ ஆம்னி பஸ் எண் - டி.என்.09 பி 6966 - மதிப்பு 2 லட்சத்து 3 ஆயிரத்து 979 ரூபாய்.

255. ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் பெயரில் சுவராஜ் மஸ்தா வேன் எண் - .டி.என். 09 எச் 3586 - மதிப்பு 5 லட்சத்து 56 ஆயிரத்து 999 ரூபாய் 99 பைசா.

256. சென்னை ஏவியேஷன் எக்ஸ்பிரஸ் மற்றும் ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் இறக்குமதி செய்யப்பட்ட மெர்சிடஸ் பென்ஸ் கார் எண். டி.என். 09 பி 6565 -மதிப்பு 9 லட்சத்து 15 ஆயிரம்.

257. அ.தி.மு.க. தலைமை அலுவலகம் மற்றும் மெட்டல் கிங் பெயரில் பஜாஜ் டெம்போ வேன் எண்.டி.என்.09பி 6975 - மதிப்பு 2 லட்சத்து 3 ஆயிரத்து 979 ரூபாய்.

258. மைலாப்பூர் கனரா வங்கியில் காமதேனு டெபாசிட் திட்டத்தில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்பு தொகை 16 லட்சத்து 3 ஆயிரத்து 545 ரூபாய்.

259. மைலாப்பூர் கனரா வங்கியில் காமதேனு டெபாசிட் திட்டத்தில் ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் நிரந்தர வைப்பு தொகை 1 லட்சத்து 49 ஆயிரத்து 544 ரூபாய்.

260. மைலாப்பூர் கனரா வங்கியில் காமதேனு டெபாசிட் திட்டத்தில் ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் நிரந்தர வைப்பு தொகை ஐந்து லட்சம் ரூபாய்.

261. மைலாப்பூர் கனரா வங்கியில் ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் நிரந்தர வைப்பு தொகை 71 ஆயிரத்து 218 ரூபாய்.

262. அபிராமபுரம் வங்கியில், சூப்பர் டூப்பர் பெயரில் நிரந்தர வைப்புத் தொகை 5 லட்சம் ரூபாய்.

263. அபிராமபுரம் வங்கியில், சூப்பர் டூப்பர் பெயரில் நிரந்தர வைப்புத் தொகை 5 லட்சம் ரூபாய்.

264. அபிராமபுரம் வங்கியில், சூப்பர் டூப்பர் பெயரில் நிரந்தர வைப்புத் தொகை 5 லட்சம் ரூபாய்.

265. கோத்தாரி ஓரியண்டல் பைனான்சில் செல்வி ஜெயலலிதா பெயரில் புதுப்பிக்கப் பட்ட நிரந்தர வைப்புத் தொகை 1 லட்சம் ரூபாய் (ரசீது எண். 47740)

266. கோத்தாரி ஓரியண்டல் பைனான்சில் செல்வி ஜெயலலிதா பெயரில் புதுப்பிக்கப் பட்ட நிரந்தர வைப்புத் தொகை 1 லட்சம் ரூபாய் (ரசீது எண். 48173)

267. கோத்தாரி ஓரியண்டல் பைனான்சில் செல்வி ஜெயலலிதா பெயரில் புதுப்பிக்கப் பட்ட நிரந்தர வைப்புத் தொகை 1 லட்சம் ரூபாய் (ரசீது எண். 48172)

268. ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்புத் தொகை புதுப்பிக்கப்பட்டது. 3 லட்சம் ரூபாய்.

269. ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்புத் தொகை புதுப்பிக்கப்பட்டது. 30 லட்சம் ரூபாய்.

270. ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்புத் தொகை 15 லட்சம் ரூபாய்.

171. ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்புத் தொகை புதுப்பிக்கப்பட்டது. 5 லட்சம் ரூபாய்.

272. ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்புத் தொகை 15 லட்சம் ரூபாய்.

273. ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்புத் தொகை 10 லட்சம் ரூபாய்.

274. ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்புத் தொகை 20 லட்சம் ரூபாய்.

275. கோயம்பத்தூர் மெட்ராஸ் ஆக்சிஜன் அண்ட் அசிடிலின் கம்பெனியில் செல்வி ஜெயலலிதாவின் தாயார் 1969 மற்றும் 1971இல் முதலீடு செய்த 200 பங்குகள் செல்வி ஜெயலலிதாவுக்கு வாரிசுரிமையாக வந்தவை.

276. சென்னை அம்பத்தூர் குணாள் இஞ்சீனியரிங் கம்பெனியில் செல்வி ஜெயலலிதாவினால் முதலீடு செய்யப்பட்ட 2000 பங்குகள்.

277. சென்னை கேன்பின்ஹோம்சில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்புத் தொகை ஒரு கோடி ரூபாய்.

278. செல்வி ஜெயலலிதா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது 2 லட்சத்து 902 ரூபாய் 45 பைசா மதிப்பிலான 389 ஜோடி காலணிகள்.

279. செல்வி ஜெயலலிதா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது 61 லட்சத்து 13 ஆயிரத்து 700 ரூபாய் மதிப்பிலான 914 புதிய பட்டுச் சேலைகள்.

280. செல்வி ஜெயலலிதா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது 27 லட்சத்து 8 ஆயிரத்து 720 ரூபாய் மதிப்பிலான 6.195 புதிய சேலைகள்.

281. செல்வி ஜெயலலிதா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது 4 லட்சத்து 21 ஆயிரத்து 870 ரூபாய் மதிப்பிலான 2140 பழைய சேலைகளும் உடைகளும்.

282. 21.12.1996 அன்று கதவிலக்கம் எண். 36 போயஸ் கார்டனிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 9 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 7 விலை உயர்ந்த கடிகாரங்கள்.

283. போயஸ் கார்டன் வீட்டில் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட 6 லட்சத்து 87 ஆயிரத்து 350 ரூபாய் மதிப்பிலான 91 கைக் கடிகாரங்கள்.

284. செல்வி ஜெயலலிதாவின் 86 வகை ஆபரணங்கள் - மதிப்பு 17 லட்சத்து, 50 ஆயிரத்து 31 ரூபாய்.
285. சசிகலாவுக்கு உரிமை உடையவை என்று சொல்லப்பட்ட 62 வகை ஆபரணங்கள் - மதிப்பு 9 லட்சத்து 38 ஆயிரத்து 460 ரூபாய்.

286. செல்வி ஜெயலலிதாவின் 26 வகை ஆபரணங்கள் - மதிப்பு 19 லட்சத்து 30 ஆயிரத்து 852 ரூபாய் பத்து பைசா.

287. சசிகலாவுக்குச் சொந்தமான 34 வகை ஆபரணங்கள் -  மதிப்பு 17 லட்சத்து 54 ஆயிரத்து 868 ரூபாய் 90 பைசா.

288. செல்வி ஜெயலலிதாவின் 41 வகை ஆபரணங்கள் - மதிப்பு 23 லட்சத்து 90 ஆயிரத்து 58 ரூபாய் 25 பைசா.

289. செல்வி ஜெயலலிதாவின் 228 வகை ஆபரணங்கள் - மதிப்பு 1 கோடியே 40 லட்சத்து 75 ஆயிரத்து 958 ரூபாய்.

290. செல்வி ஜெயலலிதாவின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட 394 வகை ஆபரணங்கள் - மதிப்பு 3 கோடியே 12 லட்சத்து 67 ஆயிரத்து 725 ரூபாய்.

291. வெள்ளிப் பொருட்கள் 1116 கிலோ கிராம் எடை - மதிப்பு 48 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்.

292. சூப்பர் டூப்பர் நிறுவனத்திற்கு சிட்கோ மூலம் பெறப்பட்ட ஷெட் மதிப்பு 15 லட்சத்து 75 ஆயிரத்து 800 ரூபாய்.

293 மெட்டல் கிங் நிறுவனத்திற்காக இயந்திரங்கள் வாங்கிய வகையில் 7 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய்.

294. ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ்க்காக இயந்திரங்கள் வாங்கிய வகையில் 2 கோடியே 16 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய்.

295. சுதாகரனுக்கும் சத்தியலட்சுமிக்கும் நிச்சயதாம்பூலத்தின் போது செல்வி ஜெயலலிதாவினால் 12.6.1995 அன்று வழங்கப்பட்ட நகைகள் மதிப்பு 11 லட்சத்து 94 ஆயிரத்து 381 ரூபாய் 50 பைசா.

296. சென்னை தியாகராயநகர் சி.பி.ஐ. கிளையில் செல்வி ஜெயலலிதாவின் கணக்கு எண். 32இல் 30.4.96 அன்று ரொக்க இருப்புத் தொகை 21 ஆயிரத்து 380 ரூபாய்.

297. திருமழிசை, தொழிற்பேட்டையில் 1.12 ஏக்கர் பரப்புள்ள மனை எண் 6 ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் பெயரில் வாங்கப்பட்டது. மதிப்பு 8 லட்சத்து 60 ஆயிரத்து 950 ரூபாய்.

298. அபிராமபுரம் இந்தியன் வங்கிக் கிளையில் செல்வி ஜெயலலிதாவினால் முதலீடு செய்யப்பட்ட தொகை 1 கோடி ரூபாய்.

299. ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் அசோக் லேலண்ட் பேந்தர் லக்சுவரி கோச் பதிவு எண். டி.என். 09 எப் 2575 மதிப்பு - 32 லட்சத்து 40 ஆயிரத்து 278 ரூபாய்.

300. சசிகலா பெயரில் கெல்லீஸ் சி.பி. வங்கிக் கிளையில் உள்ள கணக்கு எண். 38746இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 17 ஆயிரத்து 502 ரூபாய் 98 பைசா.

301. சசிகலாவுக்குச் சொந்தமான திருச்சி பொன்னகரில் உள்ள வீட்டினைப் புதுப்பிக்கவும், மற்றும் கூடுதல் கட்டடங்கள் எழுப்பவும் செய்யப்பட்ட செலவு 6 லட்சத்து 83 ஆயிரத்து 325 ரூபாய்.

302. லெக்ஸ் பிராப்பர்டீஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான கதவிலக்கணம் 1 வாலஸ் கார்டன் சென்னை 34இல் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் மதிப்பு 34 லட்சத்து 46 ஆயிரத்து 32 ரூபாய்.

303. செகந்தராபாத் சி.பி.ஐ. வங்கியில் வைப்புத் தொகை 3 லட்சம் ரூபாய்.

304. ‘‘நமது எம்.ஜி.ஆர்.’’ பெயரில் மைலாப்பூர் சி.பி. கிளையில் 30&4&96 அன்று ரொக்க இருப்பு 5 லட்சத்து 10 ஆயிரத்து 868 ரூபாய் 16 பைசா.

305. சேரங்குளம் கிராமம் சர்வே எண். 49/3 ஏ மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 5.53 ஏக்கர் புஞ்செய் நிலம் வாங்கிய வகையில் 21 ஆயிரத்து 830 ரூபாய்.

306. 1993 அக்டோபரில் இந்தியன் வங்கியில் மாஸ்டர் விவேக், செல்வி சகிலா, மற்றும் செல்வி கிருஷ்ணப்பிரியா (இவர்கள் இளவரசியின் மகன் மற்றும் மகள்கள்) ஆகியோர் பெயரில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை 38 ஆயிரத்து 421 ரூபாய்.
இவ்வாறு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பட்டியலில்  கூறப்பட்டிருந்தது. 
 



அரண்மனை

சுந்தர்.சி யோட முப்பது படங்கள்ல முதல் முதலா வந்திருக்கிற ஒரு பேய் படம். எத்தனை வருஷம் ஆனாலும் இன்னும் போர் அடிக்காத படங்களை சுந்தர்.சியால குடுக்க முடியிறதுக்கு முக்கியமான  காரணம் அவர் எடுத்துக்கிட்ட காமெடிங்குற தீம் தான். எத்தனை தடவ பாத்தாலும், காட்சிகள் ரிப்பீட்  ஆனாலும் சலிக்காத ஒரு விஷயம் காமெடி. சதுரங்க வேட்டை படத்துல நட்ராஜ் ஒரு வசனம்  பேசுவாரு. “இப்பல்லாம் அம்மா, தங்கச்சி செண்டிமெண்ட் வச்சி படம் எடுத்தாலே க்ளீஷேன்னு  சொல்றாங்க. என்னிக்குமே க்ளீஷே ஆகாத ஒரே விஷயம்னா அது பணம் தான் சார்”ன்னு. பணத்தோட  சேத்து காமெடியையும் அந்த லிஸ்டுல சேத்துக்கலாம். எத்தனை தடவையானாலும் காமெடிங்க நமக்கு  சலிக்கிறதில்லை. இதுக்கு மிகச் சிறந்த உதாரணம் சுந்தர்.சி படங்கள் தான். அவர் படங்கள்ல அவர்  எடுத்த காட்சிகளே பல முறை ரிப்பீட் ஆயிருக்கு. இருந்தாலும் நமக்கு சுத்தமா போர் அடிக்கிறதில்லை.  அதே வரிசையில இன்னொரு காமெடி கலக்கல் தான் இந்த அரண்மனை.

”ஏன் திடீர்னு ஹாரர் படம் எடுக்க ஆரம்பிச்சிட்டீங்க?”ன்னு சுந்தர்.சிய கேட்டதுக்கு இப்ப உள்ள  ட்ரெண்டுக்கு ஹாரர் படஙக்ள் தான் நல்லா போகுது அதான் எடுக்குறேன்னு சொல்லிருக்காரு. காலம்  மாற மாற தன்னையும் update  பண்ணிக்கிறதும் சுந்தர்.சியோட வெற்றிக்கு இன்னொரு காரணம். ரொம்ப  நாளுக்கப்புறம் அவர் எடுத்த கலகலப்பு, தீயா வேலை செய்யனும் குமாரு படங்கள பாக்கும் போது,  அது எதோ இப்ப வர்ற சின்ன பசங்க எடுத்த படம் மாதிரி எல்லாமே லேட்டஸ்ட் ட்ரெண்டுக்கேத்த  மாதிரியான காமெடி.  இப்ப வந்துருக்க அரண்மனையும் அப்டித்தான்.

கொஞ்ச நாளுக்கு முன்னால வந்து செம்ம ஹிட்டான காஞ்சனா, யாமிருக்க பயமே படங்களோட  ஃபார்முலாவான திகில்+காமெடி கலவையில வந்திருக்க படம் தான் இந்த அரண்மனை. காமெடிங்குறது  சுந்தர்.சி யோட ஹோம் பிட்ச். அதுவும் பெரிய அரண்மனை, சந்தானம், சுவாமிநாதன், மனோபாலா,  கோவை சரளான்னு கும்பலான காமெடி பட்டாளம். எல்லாரையும் ஓவ்வொரு காரணத்த காமிச்சி   ஒண்ணா ஒரே அரண்மமனைக்கு கொண்டு வந்துடுறாரு. அப்புறம் என்ன சொல்லவா வேணும் அடிச்சி  நாசம் பண்ணிருக்காரு. குறிப்பா மனோபாலா கோவைசரளா காம்போ காமெடி  தாறுமாறு.  மனோபாலாவயும் பெஸ்டா யூஸ் பண்றது சுந்தர்.சி தான்.

பெரும்பாலும் சுந்தர்.சி படத்துல ஹீரோக்கள் மிக்சர் திங்கும் கேரக்டர்கள் தான். படத்துக்கு ஹீரோ ப்ரச்சனை வந்துடக்கூடாதுன்னு எதாவது டம்மிக்கள தூக்கி போட்டு அவனுங்கள சைடாக்கிட்டு  சந்தானத்த மெயினாக்கி தான் இப்ப படம் எடுக்குறாரு. அதுதான் நல்லா ஒர்க் அவுட்டும் ஆகுது.

படத்துல காமெடி பார்ட்டுக்கு யோசிச்ச அளவு Horror part க்கு சொந்தமா யோசிக்கலன்னு தான் சொல்லனும்.  The Conjuring, The Grude, Insidious, The mirror ன்னு சில ஹாலிவுட் படங்களப் பாத்து பேயிங்களோட  உருவத்தையும் சரி அதுங்க வர்ற சீனும் சரி அதே மாதிரி தான் எடுத்துருக்காங்க. ஆனாலும் நல்லாவே எடுத்துருக்காய்ங்க.

சந்திரமுகி ஷரவணாவாக இந்த படத்துல தலைவர் சுந்தர்.சி. ரொம்ப நாளுக்கப்புறம் திரையில  வந்திருக்காரு. சந்திரமுகில தலைவர் டாக்டர். இதுல சுந்தர்.சி வக்கீல். அவ்வளவு தான் வித்யாசம்.  மத்தபடி பேய் யாருன்னு கண்டுபுடிக்கிறதுலருந்து பேய்கிட்டருந்து நண்பர காப்பத்த கஷ்டப்படுற வரைக்கும் அதே கேரக்டர்.

 என்னதான் ஏற்கனவே பாத்த பேயகள்னாலும் டக்குன்னு பேயிங்கள காட்டும்போது உள்ளுக்குள்ள பீதி  கெளம்பத்தான் செய்யிது. குறிப்பா ஒரு சின்ன புள்ளை எப்பவும் தனியா யார் கூடவோ பேசிட்டே  இருக்கும். அத எல்லாரும் லூசுன்னு முடிவு பண்ணிருவாங்க. சுந்தர்.சி மட்டும் அதுகிட்ட போய்  யார்கிட்டம்மா பேசுறன்னு கேப்பாரு.. அதுக்கு அந்த புள்ளை செல்வி அக்காட்ட பேசிட்டு இருக்கேன்னு  சொல்லும். செல்வி அக்காவா இங்க யாரும் இல்லையேன்னு சுந்தர்.சி கேக்கவும் அந்தப் புள்ளை ஒரு வெறும் இடத்த காமிச்சி  “நல்லா பாருங்க இங்கதான் செல்வி அக்கா உக்காந்துருக்காங்க. அதுவும் உங்களையே தான் பாத்துட்டு  இருக்காங்க” ன்னு சொன்னதும் சுந்தர்.சி யவிட நமக்கு லைட்டா கலக்குது.



ஹன்சிகா, லட்சுமி ராஜ், ஆண்ட்ரியான்னு முணு கில் பஜக் கில்மாஸ இறக்கி ஹாரரோட கவர்ச்சியையும்  அங்கங்க அள்ளித் தெளிச்சிருக்காங்க. ஹன்ஸிகா செம்ம அழகு. First half ஃபுல்லாவே நம்மள  கொஞ்சம் கூட யோசிக்க விடாம பயங்கரமா சிரிக்கவச்சும் பயங்கரமா பயமுறுத்தியும் கொண்டு  போயிடுறாங்க. ஆனா ஃபர்ஸ்ட் ஹாப்ல இருந்த அந்த சுவாரஸ்யம் செகண்ட் ஹாஃப்ல இல்லை.  சந்திரமுகிய திரும்ப பாக்குற மாதிரி ஒரு ஃபீலிங்க். அதுவும் ஃப்ளாஷ்பேக் பழைய புளிப்பானைக்குள்ள  வச்சி எடுத்த மாதிரி அருதப் பழசு. பேய் படம் என்று வந்துவிட்டால் வேறு என்னதான் ஷெய்ய  முடியும்.  

பரத்வாஜோட பாடல்கள் சுமார்தான்னாலும் ரொம்ப அருக்கல. செகண்ட் ஹாஃப்ல வர்ற சாதனா  சர்க்கம் பாட்டு ஓக்கே ரகம். அதுக்கும் மேல ரொம்ப பாட்டு வக்காம 3 பாட்டோட நிறுத்துனது மிகப்  பெரிய ஆறுதல். Background ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணிருக்கலாம்.  படத்துக்கு இன்னொரு பெரிய ப்ளஸ் CG. சுந்தர்.சி கொஞ்ச நாளுக்கு முன்னால ஒரு பேட்டில இந்த  படத்தோட கிராஃபிக்ஸ் ரொம்ப நல்லா வந்துருக்கு. கிராஃபிக்ஸ் மாதிரியே தெரியாதுன்னு  சொல்லிருந்தாரு. கிட்டத்தட்ட உண்மைதான். பேய் வர்ற காட்சிகளும் சரி மத்த கிராஃபிக்ஸும் சரி  ரொம்பவே நல்லாருக்கு. பேய்களயெல்லாம் ஆங்கிலப்படங்கள்லருந்து கடன் வாங்கியிருந்தா கூட அதே  மாதிரி நல்லா ”குவாலிட்டி”யான பேய்களையே காமிக்கிறாங்க. அதுக்கும் மேல க்ளைமாக்ஸ்ல சூரிய  கிரகணம் வர வர கார் ஓட்டிக்கிட்டு வரும் போது அந்த கிரகணமும் background கலரும் செம.

அரண்மனை இதுக்கு முன்னால வந்த காஞ்சனா படத்தோட அதே ஃபார்முலாதான்னாலும், காஞ்சனா  கூட அரண்மனைய கம்பேர் பண்ணும் போது பயமுறுத்துறதுல காஞ்சனாதான் பெஸ்ட். காஞ்சனாவிலயும் இடையில காமெடி வந்தாலும்  அதவிட அதிகமா பேய் வர்ற சீன்கள்ல பயமுறுத்திருப்பாங்க. இப்ப கூட  காஞ்சனாவ தனியா உக்காந்து பாக்க முடியாது. அதே அரண்மனையில காமெடி பார்ட் காஞ்சனாவ விட  பெஸ்டா இருந்தாலும் பேய்  வர்ற காட்சிகள் ரொம்ப பெரிய தாக்கத்த ஏற்படுத்தாததும், எல்லா  காட்சிகளையும் நாம ரொம்ப ஈஸியா கணிச்சிடுற மாதிரி இருக்கதும் படத்துக்கு மைனஸ்.

எது எப்படியா இருந்தாலும் காமெடிக்காக கண்டிப்பாக பார்க்கலாம். அதுவும் மேற்கூறிய Conjuring,   Insidious, The mirror, The grudge படங்களை பார்த்தது இல்லைன்னா பேய்களும் உங்கள மிரளவைக்கும்.  மொத்ததில் இந்த படத்துலயும் சுந்தர்.சியோட மேஜிக் ஒர்க் அவுட் ஆயிருக்கு. இந்த வருடத்தின்  வெற்றிப் படங்கள் வரிசையில அரண்மனையும் விரைவில் சேரும்.

கோழி கூவுது

' காஷ்மீரை மீட்டெடுப்போம் '- பிலாவல்; இந்தியாவிற்கு எதிராக கொக்கரிக்கிறார்
இஸ்லாமாபாத்: இந்தியாவில் இருக்கும் காஷ்மீரை மீட்டெடுத்து பாகிஸ்தானுடன் சேர்ப்போம் என்றும் இதற்கான நடவடிக்கையில் இறங்குவோம் என்றும் பாக்., முன்னாள் அதிபர் சர்தாரி மகன் பிலாவல் பூட்டோ கொக்கரித்துள்ளார். இவரது பேச்சுக்கு பா.ஜ,. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப்மாநிலம் முல்தான் நகரில் நடந்த பாகிஸ்தான் மக்கள் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பெனசீர் பூட்டோவின் மகனுமான பிலாவல் கூறியிருப்பதாவது; காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டிய நடவடிக்கையில் நாம் இறங்க வேண்டும். இதனை நான் மீட்டெடுப்பேன். ஒரு அங்குல இடம் கூட இந்தியாவிற்கு விட்டு கொடுக்க முடியாது. ஏனைய சில பகுதிகள் பாகிஸ்தானுடன் இருப்பது போல் காஷ்மீர் முழுமையாக நமது நாட்டுடன் சேர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பிலாவல் 2 முறை பிரதமராக தேர்வு செய்யப்பட்ட பெனாசீரின் மகன் ஆவார். இவர் வரும் 2018க்கான அதிபர் தேர்தலில் இவரே முன்னிறுத்தப்படுவார். இவரது அரசியல் ரீதியான அறிவிப்பு இந்தியாவுடன் நல்<லுறவு என்று பெயரளவில் அறிவித்திருந்தாலும், அந்நாட்டு மக்கள் இடையே இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களையே பரப்பி வருகிறார்.

சுப்பிரமணியசுவாமி கடும் கண்டனம் : பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசுவாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிலால் பேச்சு கண்டிக்கத்தக்கது. இந்தியா நினைத்தால் பாகிஸ்தானை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் போரை விரும்பவில்லை. இவ்வாறு கூறியுள்ளார்.



பா.ஜ., செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான ஷாநவாஸ் உசேன் தனது கண்டனத்தில், பிலாவல் பேச்சு பொறுப்பற்ற தனமாகும். காஷ்மீர் இந்தியாவிற்குட்பட்டது. பாகிஸ்தான் காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதியும் இந்தியாவுக்கு சொந்தமாகும். அரசியல் ஆதாயத்திற்காக இவ்வாறு பேசியிருக்கிறார் என்றார்.

வெளியுறவுதுறை பதிலடி: பிலாவல் புட்டோவின் காஷ்மீர் குறித்த கருத்து, அவர் யதார்த்த நிலையிலிருந்து எவ்வளவு தூரம் பின்தங்கியிருக்கிறார் என்பதை காட்டுவதாக இருப்பதாக, மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் சயீத் அக்பரூதீன் கூறியுள்ளார். காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதில் யாருக்கும் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை என்று அவர் மேலும் கூறியுள்ளார்.ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி சங்கர் பிரசாத் கூறுகையில், காஷ்மீர் குறித்த பிலாவல் புட்டோவின் பேச்சை பார்த்தால், அவர் தான், இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாதிகளை அனுப்புகிறாரோ என்று நினைக்கத் தோணுவதாக கூறியுள்ளார்.

Tuesday, 26 August 2014

சமுக வலைதளங்களின் தாக்கம்

  ட்விட்டர் - ஃபேஸ்புக்கில் ரசிகர்களால் பதியப்படும் கருத்துகளும் விமர்சனங்களும் ஒரு படத்தின் வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

'தமிழ் சினிமா படைக்கும் நல்லுலகம் இதுவரை மொக்கைப் படத்தையே ரசிகர்களுக்குத் தந்தது இல்லையோ?!' என்ற ஐயத்தை ஏற்படுத்தி இருக்கிறது, லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த 'அஞ்சான்' படமும், அதற்கு சமூக வலைதளத்தில் குவிந்த 'கழுவி ஊற்றல்' எதிர்வினைகளும்!
இப்படிப்பட்ட கலாய்ப்பு விமர்சனங்களை எள்ளளவும் எதிர்பார்த்திடாத நடிகர் சூர்யா, இணையத்தில் தனது படம் மீதான தொடர் தாக்குதல்களால் அதிர்ச்சியுற்று, "தியேட்டரில் படம் தொடங்குவதற்கு முன்பே, சீட்டில் இருந்தபடி ட்விட்டர், ஃபேஸ்புக்கில் விமர்சனங்களை வெளியிடுகிறார்கள்" என்று ஆதங்கத்தைக் கொட்டினார்.
சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டால், குறிப்பிட்ட அப்படம் வசூல் ரீதியிலும் வெற்றி அடைய வேண்டும்தானே? ஆனால், 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' முதலான படங்கள் வர்த்தக வெற்றியை எட்டாதது இங்கே கேள்வியை எழுப்புகிறது.
சரி, ட்விட்டர் - ஃபேஸ்புக்கில் ரசிகர்களால் பதியப்படும் கருத்துகளும் விமர்சனங்களும் ஒரு படத்தின் வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
இதுபற்றி, தமிழ் சினிமாவின் வர்த்தக விவரங்களை விரல்நுனியில் வைத்திருக்கும் கோடம்பாக்க பிரமுகர் ஒருவரிடம் பேசினேன்.
"சிறிய பட்ஜெட் படங்களுக்கு எப்படியோ... ஸ்டார் வேல்யூ உள்ள பிரம்மாண்ட படங்களுக்கு நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். படம் நன்றாக இல்லை என்று கூறுவதில் தவறில்லை. ஆனால், ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் இருக்கும் ரசிகர்களின் செயல்தான் தமிழ் சினிமாவின் வர்த்தகத்தை சீரழிக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
காரணம், ஒரு பிரபல நடிகரின் படம் சுமாராக இருந்தால்கூட, தனக்குப் பிடித்த நடிகரின் போட்டியாளர் என்று அவரைக் கருதி, அந்த நடிகரின் படத்தை நையாண்டி, நக்கல், பகடி என்ற பெயரில் சீரழிப்பு வேலைகள் நடக்கின்றன. 'படம் செம மொக்கை... யாரும் போகாதீங்க' என்று முன்னெச்சரிக்கை வேறு. தனக்கு விருப்பமற்ற ஒரு நடிகரின் படம் வெற்றியடைவதை ஒரு ரசிகரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதை எந்த வகையான உளவியலில் சேர்ப்பது என்பது தெரியவில்லை.
அஞ்சான் படத்துக்கு எதிராக எந்த ரசிகர் மோசமான பதிவிட்டு இருந்தாலும், அது சூர்யாவுக்குப் போட்டி நடிகராகக் கருதப்படுபவர்களுடைய ரசிகர்களின் வேலை என்று நினைத்து, அவர்களது படங்கள் வரும்போது சூர்யாவின் தீவிர ரசிகர்கள் களத்தில் இறங்குவதும் நடக்கலாம். இப்படியே மாறி மாறி செய்துகொண்டிருப்பதால், நிச்சயம் பெரிய ஸ்டார்களின் படங்களுக்கு பாதக நிலை நீடிப்பது உறுதி" என்றார் அந்த முக்கியப் புள்ளி. 
ட்விட்டரும் ஃபேஸ்புக்கும் வெகுவாக பிரபலம் அடைவதற்கு முன்பு, ஆன்லைனில் ப்ளாக்ஸ் எனப்படும் வலைப்பதிவுகளில் வெளிவரும் சினிமா விமர்சனங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அந்த விமர்சனங்களுக்குக் கிடைத்த வரவேற்பை உணர்ந்த சினிமா துறையினர், வலைப்பதிவாளர்களுக்கே தனியாக ப்ரிவியூ ஷோ நடத்தினர். 
அதன் தொடர்ச்சியாக, சமூக வலைதளங்களின் முக்கியத்துவம் உணர்ந்த இளம் சினிமா படைப்பாளிகள் சிலர் ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம் ரசிகர்களுடன் உறவை வளர்த்துக்கொள்ளத் தொடங்கினர். அதன் மூலம், தங்கள் படைப்புகளுக்கு வலுவான விளம்பரம் கிடைக்கவும் வழிவகுத்தனர். இதற்கு, 'கற்றது தமிழ்' ராம் தனது 'தங்கமீன்கள்' படத்தை ஆன்லைனில் பிரபலப்படுத்திய அணுகுமுறையைக் குறிப்பிடலாம். 
ஆனால், இணையவாசிகளின் பலத்தை உணர்ந்து, தங்கள் படங்களின் டைட்டில் கார்டில் ஃபேஸ்புக், ட்விட்டர் நண்பர்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டு, அவர்களை உச்சிக் குளிர வைத்ததில் முன்னோடி என்னவோ மலையாள சினிமா துறைதான். 
சரி, நம் விஷயத்துக்கு வருவோம். அஞ்சானுக்கு கிடைத்த ஆன்லைன் வரவேற்பால், முக்கிய நடிகர்கள், இயக்குநர்கள் தங்களது படங்களின் புரோமோஷன்கள் குறித்தும், சமூக வலைதளங்களை அணுகுவது குறித்தும் தீவிரமாக ஆலோசித்து வருவதாக அறிந்தேன். 
இதனிடையே, "ரசிகர்களிடம் அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடுவதும் தவறான அணுகுமுறை என்பது அஞ்சான் விஷயத்தில் உறுதியாகிவிட்டது. 'பாபா'வுக்கு அது நேர்ந்தபோது ஃபேஸ்புக் இல்லாதது யாரோ செய்த நற்ச்செயல். அஞ்சானுக்காக 20 லட்சம் யூடியூப் ஹிட்ஸ் கிடைத்தவுடன் சக்சஸ் மீட் வைத்தவர்கள், படம் சரியில்லை என்று கலாய்த்தால் ஏற்றுதானே ஆகவேண்டும்?" என்று என்னிடமே கேட்டார் ஒரு சினிமா ஆர்வலர்.
ஆன்லைனில் நீண்ட காலமாகவே இயங்கிவரும் இயக்குநர் வசந்தபாலனிடம் கேட்டபோது, "முன்பெல்லாம் பத்திரிகை விமர்சனம்தான் மக்களின் விமர்சனம் என்ற காலம் இருந்தது. அது தற்போது மாறிவிட்டது. 120 ரூபாய் கொடுத்து படம் பார்க்கிறார்கள், அவர்களது விமர்சனத்தை உடனே பதிவு செய்கிறார்கள். அதில் தவறில்லை. ஒரு சின்ன படம் கூட நன்றாக இருக்கிறது என தொடர்ச்சியாக விமர்சனங்கள் வரும்போது அந்தப் படத்தின் வசூல் கூடுகிறது. நமக்கு சாதகமாக இருக்கும்போது அமைதியாக இருந்துவிட்டு, படம் சரிவர ஓடவில்லை என்றால், ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் இயங்குபவர்களை குறைசொல்வது சரியல்ல. கொலவெறி என்ற பாடல் ஹிட்டானதற்கு ட்விட்டர், ஃபேஸ்புக் தானே காரணம்" என்றார்.
இளம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடம் பேசியபோது, "நான் சோஷியல் மீடியா ரியாக்‌ஷன்களை பாசிட்டிவ்வாதான் பார்க்கிறேன். பெரிய அளவில் விளம்பரங்கள் பண்ண முடியாமல், மக்களின் விமர்சனங்கள் மீதான நம்பிக்கை வைத்தே சில படங்கள் வெளியாகின்றன. ஏன்... 'பீட்சா', 'ஜிகர்தண்டா' படத்துக்குக் கூட ட்விட்டர், ஃபேஸ்புக் விமர்சனங்கள் மூலமாகதான் காட்சிகள் மற்றும் ரசிகர்கள் கூட்டம் அதிகமானது. அவ்வாறு விமர்சனங்கள் வெளியிடுவதில் எனக்கு தெரிந்து தவறு எதுவும் இல்லை. கலெக்‌ஷன் கூடும்போது கொண்டாடாமல், குறையும்போது மட்டும் திட்டினால் எப்படி?" என்றார் அவர்.எனினும், 
"சிட்டி ஏரியால தான்பா இந்த பாதிப்பெல்லாம். அவுட்டர்ல எந்த பாதிப்பும் கிடையாது. ஃபேஸ்புக் மாஸ் ஹீரோ படங்களை என்னதான் கும்மாங்குத்து குத்தினாலும் சிட்டியை தவிர்த்த ஏரியாக்களில் பெரிய பாதிப்பு இல்லை" என்றும் தயாரிப்பு பிரிவு தரப்பைச் சேர்ந்த ஒருவர் தனது அப்சர்வேஷனைச் சொன்னதையும் இங்கே பதிவு செய்தாக வேண்டும்.

Wednesday, 6 August 2014

Arulmigu Somanatha Paashaana Lingeswarar Temple(Part2) – Timiri















Worship : Daily worship rituals are performed both in the morning and in the evening and the theerthaprasadam is distributed among the devotees assembled. Special ablutions such as that with honey are performed on full moon day. Special full moon days are in the months of Chitra, Kaarthikai, Thai and Panguni. Aanithirumanjanam and special prayer rituals on Arudra day are being performed. Athirudrayagam and ShathaChadiyagam were performed for eleven days between 12.11.2007 and 22.11.2007 for the wellbeing of the visitors to the temple and for the entire world. Wonderful Flagpole. The dvajasthamba (flagpole) that will be installed in the Mahamantapam is very special. The information we find in the palm leaf manuscripts on several fields such as astronomy, anatomy, wisdom and science some sections of which are even in English is completely overwhelming.
Some of the special features pointed out by the palm leaf manuscripts : All the instructions-how to construct the temple, materials that should be used for the flagpole, their significance, the special benefits that the lingam would confer on visitors etc. Were all found in the original palm leaf manuscripts. The following section lists the information obtained from the palm leaves, some sections of which were in English Location of the Temple : Even though the size of the paashana murthy is small, its fames is unsurpassable. When the question of where to install the dvajasthamba arose, the palm leaf manuscripts gave the exact location and dimensions as follows: It should be two feet wide, in the middle of the 21 ft.Mahamantapam, 2ft.towards the sanctum sanctorum. When the dvajasthamba is near the sanctum sanctorum where a drip with a tank is present, it will attract the forces placed within the four fans and the hanging bells and prevent the forces from affecting the sanctum
Height : Hence, the dvajasthamba should be installed at the same height as the sacred pots installed at top of the sanctum.
The attracting pole : The dvajasthamba will attract the thunder, lightning and planetary powers that emerge during summer and rainy months and equalized them. Hence, the dvajasthamba can be called “the thunder and lighting arresting antenna”.
Special flagpole-its uniaueness : The dvajasthamba in several temples is used only as a pole where the flag is hoisted and taken down during different occasions. In some temples it is even built with inaccurate measurements. Thus, the construction and the function of the dvajasthamba in the Chandrasekara Somanatha Paashanalinga temple is very special.
Rare lingam-its uniqueness : Thimiri Paashaanalinga cannot be found anywhere else. It is not a mere lingam but one with special radiations (radiation waves travel) that can travel great distances. All humans require 0.0001% of moons radiation in their body for their well being. The Thimiri Paashana lingam has the capacity to attract moon’s radiations. As the Thimiri Paashanam is made specially to attract the moon’s radiations, the lingam is called Chandra sekara Somanatha easwarar. Sacred ablutions are permitted only on full moon days (pournami days) as the products of the ablution will contain the rays of the moon then. Hence, the Lingam is also called “Chandra Kaantha Paashana lingam”. When materials for sacred ablution are either poured or smeared over the lingam, the moon’s radiation penetrates those substances within two seconds. For example, if a valampuri conch amount of milk is poured over the lingam the moon’s radiation penetrates the milk within two seconds. When the devotees partake the Prasadham, it balances the extent moon’s radiation in their bodies to be around 0.0001%. If the level exceeds this limit they are afflicted by nervous disorders. “(as given in the palm leaf)”-they will be afflicted by “LUNARTIC TROUBLE”. The lunar rays will remain in the sacred objects for up to three hours only, after which they merge with space. The milk is alsospoilt then. Hence, one should consume the milk from the sacred ablution within three hours. When the milk, sand wood paste, coconut water or sacred ash touches our body, it grants us wellbeing by balancing the chandrakala or moon’s rays in our body. Besides the moon’s rays, the emblem of Siva (lingam) attracts the rays of the nine planets (Navagraha) towards itself and dissolves them in the products used for the ablution. Thus, devotiees who consume these sacred products are freed from the affects of the nine planets also. The palm leaf manuscript says, “sakala graha sattuva tatttuvam abidehatthil ullathu” (the essence of all the planets is present in the sacred ablution). The dvajashtamba is very important as the lingam remains as a radiating poison rock. Generally a dvajasthamba is not constructed to add beauty to a temple. It is placed there to attract planetary radiations in the ascendance (aarohanam) and descendance (avarohanam) mode and round it off within itself thus serving as a protection for the people, the boundary and the temple building. Measurements of the wood and its form : Fig and aloe woods can be used to construct the circular part of the dvajasthamba but not piple, ficus, margosa, ebony or deodar woods. It should have a diameter of 1 ½ feet or 18 inches. Copper plate is accepted but not brass plate.
The base : It should be a square. The images of moon, sun, Vinayag and linga should be embossed thus creating an ideal state.
Physical and mental wellbeing : When those with nervous disorders, heart problems and hypertension touch the dvajasthamba and worship it, it gives them a shock treatment. The secret behind the universal electronic store chamber form of somanatha Chandrasekara temple is that those who are suffering from mental diseases, depression and loss of memory will benefit by worshipping the dvajasthamba through the sacred touch worship ritual. Those who doubt it will realize it when they have firsthand experience of it.
The great panacea that will rid all the three diseases : Just as how the power of the Sun and the Moon does not decrease over time this paashaana lingam remains with its immense power and fully completeness. When pure water, honey, milk, sacred ash, bilva leaves, rock candy and other medicinal products listed by Saga Agasthya are offered to the lingam through sacred ablution and consumed with devotion skin problems, mental problems, diabetes, hypertension and nervous disorders encountered these days will be cured. Emerging by itself and showering its grace : Some of those who were cured from diseases and other problems do not even know the name of the town Thimiri. For some of us this may be hard to believe. Only one episode is recounted here for brevity. When Advocate Mr.M.Venkatesan from Thanjavoor was planning to get a kidney operation at a hospital in Chennai due to medical reasons and physical reasons the surgery was hampered. They checked Jeeva Arul Naadi with Thanjai Thiru.Ganesan. It was revealed that the sacred water prasadam from Thimiri lingam is only recourse to overcome this obstacle. His relative came to thimiri, collected the sacred water and took it to him. He was cured of this disease is now practicing actively at Thanajvoor. Several have benefited from the grace of this Lord, the one who is more merciful than a mother, and are living happily. We are not recounting them here for lack of space.
Miracles in the recent times : Several people are visiting this temple following various naadi revelations that the sacred water from the Thimiri paashana lingam is the only panacea. Several leading naadi astrologers are visiting this temple after realizing about this temple from their naadis.
Why wait? The Paashaana Lingam that was hidden in the deep waters for five hundred years and within the glass case for quarter of a century is now standing tall inside the beautifully constructed glass aavudaiyaar. It is inspiring to hear the greatness of this paashaana lingam from several who have received its beneficial grace. It is a great boon to be living in the times when this lingam is present. If we do not see these miracles even when we have the sight and not hear about it even when we have the capacity to hear it is if we ungrateful to the Divine. Some places are famous because of Saints! Some places are famous because of the Lord! Why waste time without seeing the Lord who surpassed time? Let us worship him and receive his grace! Thiruchittrambalam If we do not bathe in the Ganga it is not who is the loser, we are the losers. Let us worship wholeheartedly by visiting and enjoying the beautiful form of paashaana Lingeswara, replete with sanctity-the One who removes the disease of birth by revealing Himself and receive his blessings.
Contact Details:
Thiru A.S.Radhakrishnan
Arulmigu Somanatha Paashaana Lingeswarar Temple,
Fort, Thimiri, Pincode – 632512,
Vellore District, Tamil Nadu.
Mobile : 0-9344730899
Facebook URL: https://www.facebook.com/paashaanalingeswarar.timiri 

Arulmigu Somanatha Paashaana Lingeswarar Temple(Part1) – Timiri




One who surpasses Time : Thimiri Paashaana lingam occupies an important place in the sacred land of Tamil Nadu. It remains as the rare lingam that connects the past and the present.
Thimiri – Rule : Thimiri Reddy and Bhommi Reddy ruled as chieftains of Vijayanagara Empire from Vellore Fort.In olden days, Thimiri was called Divakararaayar Frontier
Prominence of citizens is prominence of the Emperor : Sadasivaraya, the descendant of the above chieftains who ruled this area wished to remove poverty and disease from his land. He consulted his Royal Physician, the Rasa Panditha Sironmani Mantra Vaidhya Kesari, Kannikaparameswarar to find a way for the same.
Vaidhya and Vaidhyanatha : The Royal Physician, as a fruit of his twelve years of intense work created the Somanatha Easwarya Paashaana lingam a sacred medicinal lingam, with the Thimiri Paashaanam, one of the navapaashaanam nine concoctions in the Danvantri Vaidhya Formula. (Thimiri also means fire). The Thimiri lingam is only six inches tall. It was consecrated at the Fort, in 1379 A.D. in the month of Thai, on Thiruvadirai day with the blessings of the 12th Pontiff of Singeri Saradha Mutt.
The great medicine that cures the disease of birth : The medicinal property of the water from sacred ablution (abisheka theerta) of this lingam grants the state of makaara in the heart, corrects heart’s function, kidney diseases and grants several benefits in life. Isn’t it wonderful that medicine and Isa come together as Marundheesa and cure several diseases! As the lingam is created by thimiri paashaanam it can sublime. Hence, water is trickled over it continuously to keep it cool. Those who consume this sacred water are blessed with wellbeing and good fortune.
Invasion : Later, when Arcot Namab invaded this area, the Vellore Fort was also captured. The Muslims plundered temples and other sacred places in this area.
The Jalaganteswara who hid in Jalam (Water) : Kannikaparameswarar protected his rare and special paashaana lingam from the invaders as follows. He smeared beeswax on the lingam, placed it inside a tortoise shaped shield made with special chemicals. The Lingam and the shield were placed within a triangular box that was created with geographic principles and hid it in the temple tank in the year 1454 A.D.
Fortitude and the invevitable end : The Royal medicine man rushed along with his group to the border of Kanchipuram to escape from being captured by the invaders. The Muslim soldiers, who heard about their escape from the spies, captured them and brought them to Sri Renukambhal temple at Aanaimalloor near Thimiri. They were killed by letting an elephant step on them. At the time of being trampled by the elephant, Kannikaparameswarar swore on Lord Shiva that if at all he has another birth he will rescue the lingam and reinstall it.
The Lord’s will : Five hundred years went by since the lingam was buried. So many changes happened over time! May be it was the Lord’s will that this Siva li`ngam with its medicinal properties should be revealed when Palani Andavar’s Navapaashaana image installed by Bhogar is dwindling due to incessant sacred ablution.
Lord’s rescue effort : Arutchelvar A.S.Radhakrishnan was attempting to build an ayappan Temple at Thimiri Fort in 1985. Even though there was no dearth of funds, the project never reached completion. To know the reason for this Thiru.Radhakrishnan consulted Kandhar Naadi with Thiru.JayaHari at Vellore.
Goal of the reincarnation : The Kandhar Naadi revealed that Mr.Radhakrishnan was the reincarnation of the Royal physician. Further, it gave details about the paashaana lingam and how it should be taken out. How long can the clouds conceal the Sun? It was an interesting coincidence that Thirunirai. Radhakrishnan was born in the same Aanaimalloor where the Physician was killed by the elephant.
Protection : The naadi mentioned that as the buried paashaana lingam will emit powerful rays one need to have protection while taking it out. The naadi showed that a pearl will be found at the anthill near the Kutrala Sri Senpaka Devi temple. If the lingam is taken out wearing a silver ring where this pearl is installed then one can escape from the radiation.
The Lord emerged : Thiru.Radhakrishna followed these instructions and searched for the paashaana lingam concealed at the Thimiri Fort Somanatha Easwara Temple tank at a depth of 32 feet. He was supported by his spiritual friends and citizens of the town. Due to his previous good karma, he was really surprising that the beeswax, maalpacchai and the tortoise-shaped shield had kept the lingam intact even after so many years. Our ancestors expertise in the field of chemistry is truly amazing.
News in Skandar Manimaalai Sadhagam : The fact that all these information are found in the Thiruvaavaduturai Adheenam’s work, Skandar Manimaalai Sadhagam is worth mentioning. Words cannot express the delight of witness the emergence of this lingam, an event predicted by not only the above mentioned work but also by great Saints like Vittobha Swamigal, Seshadri Swamigal and Poondi Mahaan. Quarter of a century in a glass box : Arulaalar Radhakrishnan has installed this lingam in a glass box filled with pure cool water and is performing sacred ablutions and other rituals with utmost sincerity for the past twenty five years.

New Temple : A new temple has been built on the banks of Thimiti Fort Somanatha Easwarya Temple Tank under the Peepal tree. The beautiful temple turret (gopuram) adds to its glory. The wide Mahamandapam along with its beautiful entrance enhances the grace of the temple further.
Rare Aavudaiyaar : The Paashaanalingeswara was installed by Thiru.A.S.Radhakrishna within a 2 ½ feet high glass aavudaiyaar with the help of the general public. Kumbabishakam was performed on 05.09.2005. 

Tuesday, 29 July 2014

திருமணம் எனும் நிக்காஹ

ஒரு படத்தின் கதையை ஒரு வரியில் சொல்லக் கூடியதாக இருந்தாலும், அதன் திரைக்கதையை விரிவாக சொல்ல முடியாத அளவிற்கு பல திருப்பங்களுடன் இருந்தால் அந்த படத்தின் வெற்றி ஓரளவிற்கு உறுதி செய்யப்பட்டு விடும். ஆனால், அந்த திரைக்கதையை படம் பார்ப்பவர்கள் புரிந்து கொள்ளவே முடியாத அளவிற்கு இருந்தால் என்ன செய்ய முடியும்.
ஒரு பிராமணப் பையனும், பிராமணப் பெண்ணும், ரயில் பயணத்தில் முஸ்லிம் பெயரில் பயணிக்கும் போது காதல் வயப்படுகிறார்கள். இருவரும் ஒருவரையொருவர் முஸ்லிம் என நினைத்து காதலைத் தொடர, அவர்கள் இணைந்தார்களா இல்லையா என்பதுதான் கிளைமாக்ஸ், இதுதான் இந்தப் படத்தின் ஒரு வரிக் கதை. இதை எப்படிப்பட்ட சுவாரசியத்துடனும், திருப்பங்களுடனும் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அதை செய்யத் தவறிவிட்டார் அறிமுக இயக்குனர் அனிஸ்.
நல்ல தயாரிப்பாளர், நல்ல நட்சத்திரங்கள் கிடைத்தும் திரைக்கதை வலுவாக இல்லாததால் இந்த 'திருமணம் எனும் நிக்காஹ்' திக்கித் திணறி திண்டாடுகிறது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாதவர்கள் பட்டியலில் அனிஸும் இடம் பெற்று விட்டார்.

பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த ஜெய், ரயிலில் டிக்கட் கிடைக்காத காரணத்தால் பிளாக்கில் அபுபக்கர் என்ற பெயரில் டிக்கட் வாங்கிப் பயணிக்கிறார். பிராமண குடும்பத்தைச் சேர்ந்த நஸ்ரியா, கம்பெனி வேலையாக ஆயிஷா என்ற முஸ்லிம் தோழி செல்ல முடியாத காரணத்தால் ஆயிஷா என்ற பெயரில் பயணிக்கிறார். அப்போது சக பயணி ஒருவரால் நஸ்ரியா தூங்கும் போது வீடியோ எடுக்க, அதைத் தடுத்து அந்த பயணியை போலீசிடம் மாட்ட வைக்கிறார் ஜெய். பின்னர் இருவரும் சென்னை திரும்பியதும் அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்கள். ஜெய் தன்னை அபுபக்கர் என்ற முஸ்லிமாகவே காட்டிக் கொள்ள, நஸ்ரியா, ஆயிஷா என்ற முஸ்லிமாகவே காட்டிக் கொள்ள காதல் நாடகம் ஆடுகிறார்கள். ஜெய், நஸ்ரியாவைக் காதலிக்க ஆரம்பிக்க, ஒரு கட்டத்தில் நஸ்ரியா தனக்கு காதலில் விருப்பமில்லை என்கிறார். பின்னர், தனக்குள்ளும் காதல் இருப்பதை உணர்ந்து ஜெய்யைக் காதலிக்கிறார்.

ஒரு சந்தர்ப்பத்தில் இருவருக்கும் மற்றவர் முஸ்லிம் அல்ல, பிராமணர் என்ற உண்மைத் தெரியவர வீட்டில் காதலைத் தெரியப்படுத்துகிறார்கள். குடும்பத்தினர் அவர்களிருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்க, ஏதோ ஒரு குற்ற உணர்வால் திருமணத்தன்று இருவருமே சேர்ந்து முடிவெடுத்து திருமணத்தை நிறுத்தி விடுகிறார்கள், பிரிந்தும் விடுகிறார்கள். அதன் பின் ஜெய், நஸ்ரியா ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை. அட...இரண்டாவது பாதி கதையை கரெக்டாதான் சொல்லிட்டமா ? நாம சொன்னதுதான் சரியா, இல்லை இயக்குனர் வேற ஏதாவது நினைத்திருந்தாரா என்பது அவருக்குத்தான் வெளிச்சம். இடைவேளைக்குப் பிறகு அவ்வளவு குழப்பமான புரியாத அளவிலான திரைக்கதை.

ஜெய், அப்படியே வந்து போகிறார். ஆரம்பக் காட்சியில் நஸ்ரியாவைப் பார்த்ததும் கொஞ்சம் ஆச்சரியப்பட்டு நடிக்கிறார், அவ்வளவுதான். அதன் பின் தான் விஜயராகவாச்சாரி, அபுபக்கர் என்ற இரண்டு விதமான நடிப்பைத் தொடர வேண்டிய ஒரு சூழ்நிலை. இரண்டுக்கும் பெரிதாக வித்தியாசம் காட்ட வேண்டும் என்றெல்லாம் அவர் முயற்சிக்கவில்லை. கொஞ்சம் அப்பாவித்தனத்துடனும், பயந்த சுபாவத்துடனும் அதே 'எங்கேயும் எப்போதும்' பார்த்த நடிப்பையே வெளிப்படுத்துகிறார். கொஞ்சம் மாத்தி ட்ரை பண்ணுங்க பாஸ்.

இந்தப் படத்தில் நடித்த ராசியோ என்னமோ நஸ்ரியா, சீக்கிரமே கல்யாணம் ஆகிப் போகப் போறாங்க. விஷ்ணு ப்ரியா என்ற உண்மையான கதாபாத்திரப் பெயரை விட, ஆயிஷா என்ற பெயரில் மனதில் இடம் பிடித்து விடுகிறார். ஆனாலும், ஒரு குழப்பமான கதாபாத்திரத்தையே உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். இவர் எப்போது ஜெய்யைக் காதலிக்க ஆரம்பிக்கிறார், எதற்காக வேண்டாமென்று விலகிச் செல்கிறார், திரும்பவும் எங்கோ ஒரு இடத்தில் 'அபுபக்கர்' என்ற பெயரைக் கேட்டதுமே தனக்குள்ளும் அவர் மீது காதல் இருக்கிறது என்பதை புரிந்து கொள்கிறாரா என்பதெல்லாம் சரியாக விளங்கவில்லை. ரசிகர்கள் எதிர்பார்க்கும் துறு துறு நஸ்ரியாவில் பாதிதான் இந்தப் படத்தில் இருக்கிறார்.

சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் ஹெப்பா பட்டேல் அதிகமாகவே ஈர்க்கிறார். அதிக வசனங்கள் இல்லை, அதிக காட்சிகள் இல்லை, ஆனாலும் பார்வையாலேயே வீசும் அந்தக் காதல் பார்வை கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. அடுத்த படத்திலாவது முழு கதாநாயகியாக ஜொலிக்கட்டும்.

மற்ற கதாபாத்திரத் தேர்வுகளில் யதார்த்தமான முகங்கள் நிறையவே உள்ளது. குறிப்பாக ஜெய், நஸ்ரியா இருவரது குடும்பத்தார்களும், ஹெப்பா பட்டேல் அப்பாவாக நடித்திருப்பருவம் அப்படியே பிராமண, முஸ்லிம் குடும்பத்தினரை கண்முன் நிறுத்தியிருக்கிறார்கள். படத்தில் நகைச்சுவைக் கதாபாத்திரம் என்று தனியாக யாருமேயில்லை. நகைச்சுவை இல்லாததும் குறையாகவே உள்ளது.

கொஞ்சம் தடுக்கி விழுந்தாலும் படத்தில் பாடல்களைப் போட்டு விடுவார்கள் போல. எத்தனை பாடல்கள் என கணக்கு வைத்துக் கொள்ள முடியாத அளவிற்கு பாடல்கள் வந்து போகின்றன. 'கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்' பாடலும், படமாக்கிய விதமும் அருமை.

'திருமணம் எனும் நிக்காஹ்' - சைவ விருந்தும் இல்லை, அசைவ விருந்தும் இல்லை...!!

வேலையில்லா பட்டதாரி

வேலையில்லா பட்டதாரி

  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : அமலா பால்
  • இயக்குனர் :வேல்ராஜ்


நம் நாட்டில் படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் பிரச்னைகளைப் பற்றி அவ்வப்போது படங்கள் வந்து கொண்டுதானிருக்கின்றன. சில படங்கள் மிகைப்படுத்தப்பட்ட கற்பனையாகவும், சில படங்கள் யதார்த்தமான படங்களாகவும் வந்திருக்கின்றன. படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் பிரச்னைகள் ஒரே மாதிரி இருப்பதில்லை. வாழ்க்கையின் முக்கியமான அடுத்த கட்டத்தில் காலடி எடுத்து வைத்து நன்றாக சம்பாதித்து, கல்யாணம், குடும்பம், குழந்தை என அவன் சிறகடிக்க ஆசைப்படும் நேரத்தில் அவன் பறப்பதை தடுக்கவும், அவனின் சிறகுகளை உடைத்தெறியவும் பல பேர் காத்துக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு இளைஞனின் வாழ்க்கையைத்தான் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் வேல்ராஜ்.

பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய வேல்ராஜ் முதல் முறையாக இயக்கியிருக்கும் படம். ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக வெற்றி பெறும் இயக்குனர்களின் வரிசையில் இவரும் இடம் பிடித்துவிடுவார். தனுஷை ரசிகர்கள் எப்படிப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவார்களோ அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தையும், அவருக்குப் பொருத்தமான கதையையும், காட்சிகளையும் உருவாக்கியிருக்கிறார். அதுவே அவருக்கு பாதி வெற்றியைக் கொடுத்துவிட்டது. ஒரு நடுத்தரக் குடும்பத்து யதார்த்த வாழ்க்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். இடைவேளை வரை யதார்த்த சினிமாவாக இருக்கும் படம், அதன் பின் கமர்ஷியல் பாதையை நோக்கி நகர்கிறது. அதிலும் யதார்த்தம் இருந்தாலும், சினிமாத்தனம் கொஞ்சம் அதிகம்தான். அதைக் கொஞ்சம் குறைத்திருந்தால் இரண்டாவது பாதியும் இன்னும் அதிகமாக ஈர்த்திருக்கும்.

ஒரு நடுத்தரக் குடும்பத்து வீட்டின் மூத்த மகன் தனுஷ். சிவில் இஞ்சினியரிங் படித்து முடித்து விட்டு நல்ல வேலைக்காக அலைந்து கொண்டிருக்கிறார். ஆனால், அவருடைய தம்பி நல்ல வேலையில் இருக்கிறார். வீட்டில் அப்பா சமுத்திரக்கனி எப்போதும் திட்டிக் கொண்டேயிருக்க, எல்லா அம்மா போலவே தனுஷின் அம்மா சரண்யா மகனுக்கு ஆதரவாக இருக்கிறார். பக்கத்து வீட்டிற்கு குடி வரும் அமலாபாலுடன் பழக ஆரம்பித்து போகப் போக அவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார் தனுஷ். ஒரு சந்தர்ப்பத்தில் சரண்யா திடீரென இறந்துவிட, அதற்கு தனுஷும் ஒரு காரணம் என அப்பாவும், தம்பியும் தனுஷை வெறுக்க ஆரம்பிக்கிறார்கள். அதன் பின் இறந்து போன சரண்யாவின் நுரையீரல் தானத்தால் புது வாழ்வு பெறும் சுரபியின் அப்பா மூலமாக அவர்களது கான்ட்ராக்ட் கம்பெனியில் தனுஷுக்கு வேலை கிடைக்கிறது. 200 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டிடம் கட்டும் அரசாங்க திட்டத்திற்கு பொறுப்பேற்கிறார் தனுஷ். ஆனால், போட்டி நிறுவனம் அந்த திட்டத்தை நிறைவேற்றாமல் தடுக்கும் முயற்சியில் இறங்குகிறது. அவற்றை தனுஷ் சமாளிக்கிறாரா, அவரது குடும்பத்தினரின் அன்பை சம்பாதிக்கிறாரா, அமலாவுடனான காதல் நிறைவேறுகிறதா என்பதுதான் படத்தின் மீதி கதை.

“தேவதையைக் கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், யாரடி நீ மோகினி” பாதைக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார் தனுஷ். இம்மாதிரியான படங்களும், கதாபாத்திரங்களையும்தான் அவரிடமிருந்து ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை இந்தப் படம் தனுஷுக்கு நன்றாகவே உணர்த்தும். இந்த மாதிரி படங்களும், கதாபாத்திரமும் அவருக்கு 'லட்டு' மாதிரி, நடிக்கிறதப் பத்தி கேட்கணுமா. ஆனால், அவ்வப்போது ரஜினிகாந்த் ஏன் எட்டிப் பார்க்கிறார் என்றுதான் தெரியவில்லை. பல காட்சிகளில் ரஜினியின் மேனரிசத்தைப் பார்க்க முடிகிறது. நீங்க நீங்களாவே இருப்பதுதான் நல்லது தனுஷ். பல காட்சிகளில் தனுஷ் பேசும் வசனத்திற்கு தியேட்டரில் கைதட்டல். அவ்வளவு பேர் அவரை மாதிரியே இருப்பாங்க போல. முக்கவால் வாசி காட்சிகளில் புகைப் பிடித்துக் கொண்டிருப்பது ஏனோ. ஒரு காட்சியில் சுரபிக்கு புகைபிடிப்பது பற்றி அட்வைஸ் கொடுத்துவிட்டு, அதன் பின் இவர்தான் அதிகமாக புகைபிடிக்கிறார். வேலையில்லாத பட்டதாரிகளில் புகை பிடிக்காத பல லட்சம் பேர் இருக்கிறார்கள்.

தனுஷ் காதலியாக அமலாபால். பல் டாக்டர் கதாபாத்திரம், எந்த ஊர்ல பல் டாக்டருக்கு மாதம் 2 லட்ச ரூபாய் சம்பளம் தருகிறார்கள்?. சும்மா பெருமைக்காக வைத்த வசனமா, இல்லை சீரியசாகவே இந்த வசனத்தை வைத்தார்களா தெரியவில்லை. தனுஷ் சொல்ற மாதிரி 'சினிமா நடிகை மாதிரி இல்லைன்னாலும், சீரியல் நடிகை மாதிரிதான்' அமலா பால் தெரிகிறார். அடிக்கடி தனுஷுக்கு அட்வைஸ் மழை பொழிந்து அவரை மாற்ற முயற்சிக்கிறார். ஆனால், அமலா பால் முகத்தில் ஒரு சோகம் குடி கொண்டிருக்கிறதே. ஒரு வேளை இந்தப் படத்தில் நடிக்கும் போதுதான் திருமணம் பற்றி முடிவெடுத்திருப்பாரோ? இதற்குப் பிறகு நடிக்க மாட்டோமா என்ற கவலை வந்து விட்டது போல.

அமலா பாலுக்கு அப்படியே கான்டிராஸ்டாக சுரபி. எப்போதும் பளிச்சென இருக்கிறார். அவரைக் காட்டும் போதெல்லாம் ஒளிப்பதிவாளர் ஸ்பெஷல் லென்ஸ் போட்டு எடுத்திருப்பார் போல. சில காட்சிகளில் வந்து போகும் கதாபாத்திரத்திம்தான் என்றாலும் தன் அழகால் கவனத்தை ஈர்க்கிறார் சுரபி. ஆனால், இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்தால், அதையே நம் இயக்குனர் வழக்கமாக்கிவிடுவார்கள் என்பதை யாராவது அவருக்குச் சொல்லியாக வேண்டும்.

தனுஷின் அப்பாவாக சமுத்திரக்கனி, நடுத்தரக் குடும்பத்து அப்பாவை கண்முன் நிறுத்துகிறார். ஒரு காலத்துல நாமும் அப்படித்தானே திட்டு வாங்கியிருக்கிறோம், இப்பவும் திட்டு வாங்குகிறோம் என பல இளைஞர்களை யோசிக்க வைக்கும்.

அம்மான்னா சரண்யாதான், சரண்யான்னா அம்மாதான். இப்படிப்பட்ட அம்மாக்களால்தான் பல இளைஞர்கள் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். படத்தில் சரண்யாவின் முடிவு கண்ணீரை வரவழைக்கும் காட்சி. அந்த சோகப் பாடல் வேறு இன்னும் மனதை அழுத்தி விடுகிறது.

தனுஷின் தம்பியாக நடித்திருக்கும் புதுமுகம் அருமையான தேர்வு. வில்லனாக அமித்தேஷ், பணக்காரத் தோரணயை அழகாக காட்டியிருக்கிறார்.

இன்றைய இளைஞர்களின் ரசனைக்கேற்ப பாடல்களைப் போட்டிருக்கிறார் அனிருத். படத்தின் கதையை மீறி கொஞ்சம் மாடர்ன் ஆன இசையாக இருக்கிறது, அம்மா பாடலைத் தவிர.

வேலையில்லா பட்டதாரி - வேலைக்குப் போன பட்டதாரியை விட வேலையில்லாத பட்டதாரிதான் அதிகமா ரசிக்க வைக்கிறார்.