Saturday, 20 September 2014

கோழி கூவுது

' காஷ்மீரை மீட்டெடுப்போம் '- பிலாவல்; இந்தியாவிற்கு எதிராக கொக்கரிக்கிறார்
இஸ்லாமாபாத்: இந்தியாவில் இருக்கும் காஷ்மீரை மீட்டெடுத்து பாகிஸ்தானுடன் சேர்ப்போம் என்றும் இதற்கான நடவடிக்கையில் இறங்குவோம் என்றும் பாக்., முன்னாள் அதிபர் சர்தாரி மகன் பிலாவல் பூட்டோ கொக்கரித்துள்ளார். இவரது பேச்சுக்கு பா.ஜ,. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப்மாநிலம் முல்தான் நகரில் நடந்த பாகிஸ்தான் மக்கள் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பெனசீர் பூட்டோவின் மகனுமான பிலாவல் கூறியிருப்பதாவது; காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டிய நடவடிக்கையில் நாம் இறங்க வேண்டும். இதனை நான் மீட்டெடுப்பேன். ஒரு அங்குல இடம் கூட இந்தியாவிற்கு விட்டு கொடுக்க முடியாது. ஏனைய சில பகுதிகள் பாகிஸ்தானுடன் இருப்பது போல் காஷ்மீர் முழுமையாக நமது நாட்டுடன் சேர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பிலாவல் 2 முறை பிரதமராக தேர்வு செய்யப்பட்ட பெனாசீரின் மகன் ஆவார். இவர் வரும் 2018க்கான அதிபர் தேர்தலில் இவரே முன்னிறுத்தப்படுவார். இவரது அரசியல் ரீதியான அறிவிப்பு இந்தியாவுடன் நல்<லுறவு என்று பெயரளவில் அறிவித்திருந்தாலும், அந்நாட்டு மக்கள் இடையே இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களையே பரப்பி வருகிறார்.

சுப்பிரமணியசுவாமி கடும் கண்டனம் : பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசுவாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிலால் பேச்சு கண்டிக்கத்தக்கது. இந்தியா நினைத்தால் பாகிஸ்தானை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் போரை விரும்பவில்லை. இவ்வாறு கூறியுள்ளார்.



பா.ஜ., செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான ஷாநவாஸ் உசேன் தனது கண்டனத்தில், பிலாவல் பேச்சு பொறுப்பற்ற தனமாகும். காஷ்மீர் இந்தியாவிற்குட்பட்டது. பாகிஸ்தான் காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதியும் இந்தியாவுக்கு சொந்தமாகும். அரசியல் ஆதாயத்திற்காக இவ்வாறு பேசியிருக்கிறார் என்றார்.

வெளியுறவுதுறை பதிலடி: பிலாவல் புட்டோவின் காஷ்மீர் குறித்த கருத்து, அவர் யதார்த்த நிலையிலிருந்து எவ்வளவு தூரம் பின்தங்கியிருக்கிறார் என்பதை காட்டுவதாக இருப்பதாக, மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் சயீத் அக்பரூதீன் கூறியுள்ளார். காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதில் யாருக்கும் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை என்று அவர் மேலும் கூறியுள்ளார்.ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி சங்கர் பிரசாத் கூறுகையில், காஷ்மீர் குறித்த பிலாவல் புட்டோவின் பேச்சை பார்த்தால், அவர் தான், இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாதிகளை அனுப்புகிறாரோ என்று நினைக்கத் தோணுவதாக கூறியுள்ளார்.

No comments:

Post a Comment